தீபாவளி மழை காலத்தில் தான் வரும். அந்த நேரத்தில் இந்த காரசாரமான மொறுமொறு மசாலா பிஸ்கட் செய்து காற்று புகாத டப்பாக்களில் வைத்து கொண்டால், மழையுடன் இந்த மொறுமொறு மசாலா பிஸ்கட் சுவைக்க அருமையாக இருக்கும். இதில் ஓமம் சேர்ப்பதால் ஜீரணத்துக்கு மிகவும் உதவும்.
தேவையான பொருட்கள்
- 2 கப் மைதா
- 5 சிகப்பு மிளகாய்
- 1/2 துண்டு இஞ்சி
- 1 ஸ்பூன் ஓமம்
- உப்பு தேவையான அளவு
- பொறிப்பதற்கு தேவையான எண்ணெய்
செய்முறை
- 1/2 துண்டு தோல் நீக்கிய இஞ்சி, 5 சிகப்பு மிளகாய் இவ்விரண்டையும் மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் மைதா, 1 ஸ்பூன் ஓமம், உப்பு தேவையான அளவு எடுத்து அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த கெட்டியான மாவை 15 நிமிடம் ஊற விடவும்
- 15 நிமிடம் கழித்து சப்பாத்தி தேய்க்கும் கல்லில் இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்.
- இந்த சப்பாத்திகளை கத்தி வைத்து டைமென்ட் வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
- அடுப்பில் எண்ணெய் சட்டியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் வைத்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடானவுடன் மிதமான தீயில் மசாலா டைமென்ட் பிஸ்கட்களை போடவும்.
- பிஸ்கட்களை இரண்டு பக்கமும் திருப்பி விட்டு மிதமான தீயில் பொன்னிறமாகி ஓசை அடங்கும் வரை வேக விடவும்.
- பிஸ்கட்கள் பொன்னிறமானதும் எடுத்து எண்ணெய் வடித்துக் எடுத்துக் கொள்ளவும்.
சுவையான மொறுமொறு மசாலா பிஸ்கட் ரெடி.
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
Nice reciepe for Diwali. Will try it. Thank you Sripriya ji.
Awesome recipe by Sripriya ma’am…. Excellent deepawali treat
ஆஹா என்ன சுவை….