in ,

மதிப்பிற்குரிய ஐயா (சிறுகதை) – ச. சத்தியபானு 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

வீட்டில் திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தார் “சண்முகம்”

வீட்டின் முன்புறத்தில் இருந்த தனது புதிய ஸ்கூட்ரை ஒரு பழைய அழுக்குத் துணியை வைத்து துடைத்து எடுத்தார்….

மூக்குக்கண்ணாடியை சரி, செய்து மெதுவாக ஸ்கூட்ரை நகர்த்தினர்…

 சக்தி…..சக்தி ‘யென்று…. இரு அழைப்பிற்கு பின்பும் ஏதோ ஒன்றை தேடிவது போல தேடிக் கொண்டிருந்தான்.

சுமதி அடுப்பங்கரையில் பத்திரங்களை  உருட்டிக் கொண்டிருந்தாள்.

ஸ்கூட்ரை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான்  “சண்முகம்”

சக்தி “முறைத்தப்படி” பார்த்து அடிக்க கைகளை ஓங்கினான். சுமதி தடுத்து “நான் தான் சமைச்சு கொடுக்க” சற்று தாமதமாகிட்டேன்….

சரி …சரி… என்று, கூறி விட்டு மறுபடியும் ஸ்கூட்ரை எடுத்து புறப்பட்டான்…. அப்போது சுமதி வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை கூறினாள்‌…. நான் வெளிலா எங்காவது போறேன் தெரிஞ்சு கிட்டே வீட்டுக்கு சாமான் வாங்கிட்டு வர சொல்றதே “உனக்கு பொழப்பா போச்சு” சரி வாங்கிட்டு வரேன்.

 சக்தியை பார்த்து பத்திரமா போ ‘ப்பா..

 மறந்துடமா? சாப்பாட்டை மிச்சம் வைக்கமா சாப்பிட்டுரு என்றாள்….

இது வழக்கமான, ஒரு நிகழ்வு அடிக்கடி அவளுக்கு தேவையானப் பொருட்களை வெளியில் வந்து அனைவருக்கும் தெரியும்படி கத்துவாள் வேறு வழியில்லாமல் அதை வாங்கி வருவான் சண்முகம்.

சக்தி அசட்டு சிரிப்பு ஒன்றினை அள்ளி சுமதியின் தெளிப்பதும்…. எதையோ சாதித்தது போல பெருமூச்சு ஒன்று அவள் விடுவதும்…..

வீட்டு வேலைகளை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தாள் சுமதி…. ரம்யா  ஒரு அறையில் செல்போனில் அவள் வருங்கால கணவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்…..

நாளை மறுநாள் ரம்யாவுக்கு கல்யாணம் வீட்டிற்கு ஒவ்வொரு உறவுக்காரர்களாக தேடி வர ஆரம்பித்தனர்……

சுமதி அவர்களை கவனிப்பதும் பிறகு, அவர்கள் அனைவரும் மணப்பெண்ணைப்  பார்த்து விசாரிப்பதுமாக, வீடு விசேஷத்தில் கலை கட்டியது.

சண்முகம் சக்தி ஸ்கூலில் இறக்கி விட்டான்….

அடேய்! “சக்தி”

என்னப்பா நாளைக்கும், அதற்கு மறுநாளும் உனக்கு விடுமுறை கேட்டு வாங்கிட்டு, வா அக்காவுக்கு கல்யாணலா சரியா?

மறந்து விடாத சக்தி…

சரிப்பா கண்டிப்பாக வாங்கி வரேன்.

என்று சொல்லி ஸ்கூலில்  நுழையும் போது அவனது மனதில்

எப்படி லீவு கேட்பது?  லீவு கேட்ட,லீவ் லெட்டர் கேட்பாங்களா! அதா, எப்படி எழுதுவது?

இந்த டீச்சர் உடனே லீவு கொடுக்க மாட்டாங்க ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாங்களா…..

சரி விடு, பார்த்துக்கலாம்…

அதான் மணி இருக்கான் அவன் கிட்ட குடுத்து எழுதிக்கிறலாம்…..

வகுப்பிற்கு சென்று பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தான்….

இடைவேளை வந்ததும் மணிக்கு அருகில் அமர்ந்து அவனிடம் லீவு லெட்டருக்கு ஒரு மனு போட்டு கொண்டிருந்தான்….

பிறகு மணி வேறு வழியில்லாமல் சரி எழுதி தரேன் சக்தி என்றான்… பாடவேளை ஆரம்பித்தது ஆசிரியர் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்…. அனைவரும் “கவனமாக கவனியுங்கள்”, இது முக்கியமாக பாடம் என்றார்…

ஆனால் சக்தி நினைப்பது லெட்டர் மீதே இருந்தது.

 வகுப்பு முடிந்தது… மணி ஒரு லெட்டரை எழுதிக் கொடுத்தான்….

அதைப் பார்த்து சக்தி எழுதி அதை மடித்து தனது பாக்கெட்டில் வைத்தான்….

வகுப்பாசிரியரிடம் கொடுத்தான்…. அதை வாங்கி படித்து பார்த்த ஆசிரியர் சக்தியிடம்  நீ தான்   இந்த லெட்டரை எழுதினாய் என கேட்டார்

திருதிருவென விழித்த சக்தி ஆமாங்க சார்…. என்றான் சக்தி.

அந்த லெட்டரையும் சக்தியை பார்த்து திகைத்து தலைமையாசிரியரிடம் அழைத்து சென்றார்…..

சக்தியும் விவரம் புரியாமல் அவர் பின்னாலே சென்றான்…. அந்த லெட்டரை தலைமையாசிரியரிடம் கொடுத்தார்….

அதை படித்த அவர் சக்தியை பார்த்தார். சக்தி இந்த லேட்டரை நீ தான் எழுதுனியா…

ஆமாம் சார்…..

சரி,  இதை படித்து காட்டென அவனிடம் லெட்டரை கொடுத்தார்…. பிறகு முழுவதுமாக படித்து சரியாக உள்ளது என்றான்.

அனைத்தையும் படித்து முடித்து விட்டு அவரது கையில் இதில் நீ எழுதி இருக்கும் அனைத்து சரியா சக்தி.

சரியான வார்த்தை தான் சார்…..

சரி சரி உன்னுடைய தமிழ் வாத்தியார் யார் சந்திரசேகர் சார்…. அவரை ஒரு ஆளை விட்டு அழைத்து வர சொன்னார்…..

அவரும் வேக வேகமாக வந்தார்….  வணக்கம் ஐயா அழைத்து வர சொன்னீர்களா ஐயா என்றார்….

அவரிடம் லெட்டரை கொடுத்து படிக்க சொன்னார்.

அதில் “மதிப்பிற்குரிய ஐயா” என்னும் இடத்தில் “மதத்திற்குரிய ஐயா” என்று படித்தார். திகைத்து போனார்  “தமிழய்யா”.

சக்தி யார் உனக்கு இந்த லெட்டரை எழுத சொன்னது என்று விசாரித்து இல்லை ஐயா நானாக எழுதினேன் ஐயா….

இதில் சிறு பிழை இருக்கிறது அது உனக்கு தெரியுமா சக்தி இல்லை ஐயா சரியாகத்தான் எழுதி இருக்கிறேன் என்று கூறினான்… மறுபடியும் இதை படித்து பார் ஒரு உரை என்றார் தமிழய்யா …..

வீட்டின் முன் வாழை மரங்கள் கட்ட ஆரம்பித்தனர். திருமணத்திற்கு தேவையான பொருட்களையும் வேலைகளையும் செய்து கொண்டிருந்தார் சண்முகம்….

ஒவ்வொரு உறவினராக வீட்டிற்கு வர ஆரம்பித்தனர்.

அவர்களுக்கு சுமதி சுவையான தேநீரும் குளிர் பானமும் சிறிய டம்ளரிலும் ஊற்றி அனைவருக்கும் கொடுத்தாள்….

அங்கும் இங்குமாக சிறுவர்கள் விளையாடி மகிழ, பெரியவர்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பேச ரம்யாவுக்கு திருமண “அலங்கார பொருட்கள், ஜோடணைகளை” ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தார்கள். அவளுடைய தோழிகள் இப்படியே வீடு எங்கும் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தன….

வரும் சொந்தக்காரர்கள் அனைவருமே “சக்தி” என்ன ஆள காணோம் “சண்முகம்” இன்னைக்கு, ஸ்கூலுக்கு போய் இருக்கான் லீவ் லெட்டர் கூடுத்துட்டு மூணு நாளைக்கு லீவு சொல்லிட்டு வரேன் என்று சொல்லிட்டு போயிருக்கான்….

ஓ அப்படியா! என்னடா, சண்முகம் சக்தி  நல்லா படிக்கிறானா? முன்ன விட இப்ப பரவாயில்லையா அதெல்லாம் நல்லா தான்டா படிக்கிறான்.

 என்ன உனக்கு தமிழ் தான் கொஞ்சம் வரமாட்டேங்குது. சின்ன பிள்ளைல இருந்தே மெட்ரிகுலேஷன்ல  படிக்கிறானா அதான் தமிழ் வரமாட்டேங்குது. எந்த இடத்துல “உயிரெழுத்து” வரணும் எந்த இடத்துல “மெய்யெழுத்து” வரணும்னு ஒன்னும் அவனுக்கு புரிய மாட்டேங்குது என்று அவனுடைய பால்ய சினேகிதன் “குமார்” இடம் கூறிக் கொண்டிருந்தான்…..

ரிங்… ரிங்…. என்று அழைப்பு மணியானது சண்முகத்தின் சட்டை பையில் இருந்து ஒலித்தது…..

யார்? என்று சண்முகம் கேட்டான் அங்க சக்தி படிக்கிற ஸ்கூல்ல இருந்து பேசுறோம் நீங்க ஒரு நிமிடம் ஸ்கூலுக்கு வந்துட்டு போங்க என்றார் தலைமை ஆசிரியர் வேறு ஏதும் பிரச்சனையா என்றார் அதற்கு பதில் பேசாமல் போனை கட் செய்து விட்டார் ஆசிரியர்…..

வணக்கம் ஐயா,

நான் தான் சக்தி ‘யோட அப்பா என்ன ஐயா?

ஏதும் பிரச்சனையா? அது ஒன்னும் இல்ல சார்….

உங்க பையன் எழுதின லீவு லெட்டரை ஒரு நிமிஷம் படிச்சு பாருங்க. அதை வாங்கி மெதுவாக படிக்க ஆரம்பித்தார் சண்முகம்…

அதில் இருக்கும் “மதிப்பிற்குரிய ஐயா” இன்னும் இடத்தில் “மதத்திற்குரிய ஐயா” என்று இருப்பதை பார்த்து விழித்தான்.

சக்தியை பார்த்ததும் ஒரு முறை முறைதான்.

பதில் பேசாது அமைதியாக நின்று கொண்டிருந்தான் சக்தி.

ஐயா “மன்னித்து விடுங்கள்” என் மகனுக்கு தமிழ் சரியாக வராது அதனால் தவறாக எழுதி விட்டான். நாளைக்கு எனது மகளுக்கு திருமணம் அதனால் தான் லீவு சொல்லிட்டு வா என்று நான் தான் அவனிடம் சொல்லி இருந்தேன் ஐயா.

சரிங்க சண்முகம்..

அவனிடம் கொடுத்து படிக்க சொன்னா, அவே எழுதினதா சரின்னு சொல்றான். அதுக்கு என்ன சொல்றீங்க…..

சக்தியிடம் சில அறிவுரைகளை வழங்கினான் சண்முகம்.

அதை கேட்ட வகுப்பு ஆசிரியருக்கும் தலைமை ஆசிரியருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது….

இனிமேல் தினமும் என்னிடம் இரண்டு பக்கங்கள் அல்லது மூன்று பக்கங்கள் தமிழை எழுதி படிக்க வேண்டும் தமிழின் “உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களின் வித்தியாசத்தை” உனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது நீ லீவ் லெட்டர் வீட்டில் தவறென்று எழுதி காட்ட வேண்டும் என்றார் சண்முகம்

சார் என்ன மன்னிச்சிடுங்க சார் என்றான்..

சக்தியை “அக மகிழ்ச்சியோடு” சந்திரசேகர் வழியனுப்பினர்.

சிறுவயதில் இருந்தே தமிழ் மொழியை அனைத்து குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்பது மிகவும் சிறப்பான ஒன்று என்று கூறினார் சந்திரசேகர்…..

உண்மைதான் சார் இனிமேல் இதை தொடர்ந்து செய்வேன் ஐயா.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பட்ட கடன் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    அன்பென்ற மழையிலே (பேரிளம் பெண்) (சிறுகதை) – வைஷ்ணவி