2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
என்னதான் சொல்லுங்க மயிலாப்பூர் மாதிரி ஒரு இடம் இந்தியாலயே கிடையாது. ஞாயித்துக் கிழமையானா கபாலீஸ்வரர் கோவில் ஈஸ்வரன் தரிசனம், ராயர் மெஸ்ல பொங்கல், சாம்பார் வடை சாப்பிட்டோமா, வீட்டு ஹால்ல காத்தாட உக்காந்து பேப்பர் படிச்சமா, மிசஸ் போட்டுக் கொடுக்கற ஸ்டிராங் காபியை குடிச்சமா, 10 மணிக்கு மேல கோவில் குளக்கரையை சுத்தி நண்பர்களோட அரட்டை அடிச்சமா இதெல்லாம் இங்கேதான் முடியும்.
எனக்கும் பத்மினிக்கும் ஏகப் பெருமை எங்க குடும்பத்துலயே மீனுதான் முத டாக்டராகப் போறானு. ஆனா என்ன, சக்தி மெடிகல் அன்ட் டெண்டல் காலேஜ் எங்கேயோ பூந்தமல்லியெல்லாம் தாண்டி ஹாஸ்டல்ல சேத்தோம். முத நாள் எல்லாரும் போனோம்.
ஊரை விட்டு வெளில இருந்தாலும் பிரம்மாண்டமான கேம்பஸ், ஆண்களுக்கு தனி, பெண்களுக்கு தனினு வசதியான ஹாஸ்டல். எங்களை மரியாதையா வரவேற்று உபசரித்த கல்லூரி ஸ்டாஃப். அருமையான சாப்பாடு. எல்லாமே பிரமாதமா இருந்தது. மீனுவுக்கும் பிடிச்சுப் போச்சு.
என் அம்மாவை நினைச்சிண்டேன், “டே வெங்கட்ராமா நம்ம குடும்பத்துல யாருமே டாக்டருக்கு படிக்கலை, நீயும் பிடிவாதமா மாட்டேன்னுட்டே”
நான்,” போம்மா அப்பாவோட 150 ரூபா மாசச் சம்பளத்துல நான் இன்ஜினியிரிங் டிப்ளமா படிக்கறதே ஜாஸ்தி, டாக்டருக்கு படிக்கணுமாம்.”
ஆனா அம்மாதான் இல்லை பேத்தி மெடிகல் காலேஜ் போறதை பாக்க. எல்லார்கிட்டயும் அப்பவே பெருமையா பீத்திப்பா “எங்க வெங்கிட்டுக்கு மெட்ராஸ் மெடிகல்ல சீட் கிடைச்சது, அவன்தான் பிடிவாதமா இன்ஜினியரிங் சேந்தான்”
மீனுவை ஹாஸ்டல்ல விட்டுட்டு வீடு வந்தா, வீடே காலியான மாதிரி ஃபீலிங்.
ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை மீனு ஓடி வந்துடுவா. ஹாஸ்டல் சாப்பாடு போரடிக்கறதும்மா, நீ வைக்கற ரசம் எங்கயும் கிடைக்காது. இன்னிக்கு தக்காளி ரசமும், உருளைக்கிழங்கு பொரியல் ரோஸ்டா பண்ணிடு.நாளைக்கு வத்தக் குழம்பும் கொத்தவரைக்கா பொரியலும் சரியானு மெனு எடுத்துண்டே வருவா.
நான்தான் கேப்பேன், ”நீ படிப்பை பத்தி ஒண்ணுமே பேசறதில்லையே”
“போப்பா அதெல்லாம் படிச்சிப்பேன், நீ கவலைப் படாதே. நீ அந்த கொசு அடிக்கற பேட் மட்டும் ஒண்ணு வாங்கிக் கொடு.”
அடுத்த அரைமணி நேரத்துல அந்த எலக்ட்ரிக் பேட் வாங்கிண்டு வந்தாச்சு.” என் அப்பான்னா அப்பாதான்னு கழுத்தை கட்டிண்டு தொங்கறா”
பத்மினி, “ செல்லம் கொடுத்தே குழந்தைகளை கெடுங்கோ”
மீனு,”போம்மா உனக்கு பொறாமை அப்பா என்னை கொஞ்சறதுல, உன்னையும்தானே கிச்சன்ல வந்து அப்பப்ப கொஞ்சறார், தெரியாதுன்னு நினைச்சயா”
“ போடி வெக்கம் கெட்ட கழுதை வயசுக்கு மீறி பேச்சைப் பாரு” அவ கையில் சிக்காம மீனு ஓடிப் போனா.
சிரித்தபடி உக்காந்திருந்த என்னை பாத்து, “இத்தனை வயசாச்சு ராத்திரியெல்லாம் தொந்தரவு பண்றது பத்தாதுன்னு, பகல்ல குழந்தேள்கு முன்னால பத்து,பத்துனு சுத்தி சுத்தி வந்தா இதுதான் ஆகும்.”
“அதனால என்னடி பத்து, அப்பாக்கு அம்மா மேல கொள்ளக் காதல்னு நினைச்சிக்கட்டுமே”
“போறுமே சமத்து , போய் கீரைக் கட்டு வாங்கிண்டு வாங்கோ, அப்படியே கொஞ்சம் சுக்கும், கஷாயம் போட்டுத் தரேன் ரெண்டு வேளை குடிங்கோ, லொக் லொக்னு இருமல் விட மாட்டேன்றது”
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings