எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மதுரை – அனுப்பானடி,
என் பெயர் சுந்தரம். இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் , என் நண்பர் ராகவன் வீட்டுக்கு சென்றேன். ராகவனும், நானும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்.
ராகவனை பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. நண்பர் ராகவன் இல்லத்தில், வீட்டில் நண்பர் ராகவன் குளிக்க சென்று இருந்தார். நண்பரின் மனைவி ரேணுகா சமையல் வேலை செய்து கொண்டு இருந்தார்.
நண்பரும் அவர் மனைவியும் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இன்று வார விடுமுறை, என்பதால் இருவரும் வீட்டில் இருந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ராஜு, நான்காம் வகுப்பு படிக்கிறான். இருவரும் வேலைக்கு சென்றுவிடுவதால், தன் குழந்தையின் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு ரொம்ப செல்லம் கொடுத்து வருவது தெரிந்தது.
எனக்கும் ராஜுக்கும் நல்ல பரிட்சியம்தான். என்னிடம் நன்கு பேசி விளையாடுவான். நான் பையன் ராஜு அருகில் சென்று அமர்ந்தேன். ராஜுவின் முழு கவனமும் செல்போனில் தான் வைத்து இருந்தது.
நான் அவனிடம் பேச்சு கொடுத்தாலும் , அதனை கண்டு கொள்ளவில்லை. பிறகு நண்பர் ராகவன் குளித்து விட்டு வந்தார்.
“என்ன ராகவா ? ரொம்ப பிசியா இருக்கியா ? பேசி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிரிச்சு“ என்று கூறினேன்.
“ஆமா சுந்தரம் , வேலை கொஞ்சம் அதிகம் , வீட்டுக்கு வரவே ரொம்ப லேட் ஆகுது , ரெண்டு பேரும் வேலை முடிச்சு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்க வேண்டியது தான். என் பிள்ளைட்ட கூட சிரிச்சு பேச முடியல.” என்று ராகவன் கூறினான்.
“பிள்ளைய கூட கவனிக்க முடியாத அளவுக்கு ரெண்டு பேரும் வேலைக்கு போகனுமா? ராகவா. ரேணுகாவ வீட்ல இருக்க சொல்ல வேண்டியது தான. “ என்று கூறினேன்.
அதற்க்கு “வீடு வாங்கி சில வருஷம் தான் ஆகுது. லோன் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம், கொஞ்ச வருஷம் கஷ்டபட்டா போதும், வீடு என் பெயருக்கு வந்திரும். அப்புறமா கூட ரேணுகாவ வீட்ல இருக்க சொல்லிருவேன்” என்று கூறினான் ராகவன்.
“என்ன ராகவா? உன் பையன் ராஜு , நான் வந்து உட்கர்ந்ததுல இருந்து ஒரு வார்த்தை கூட பேசாம , செல்போனை பார்த்துட்டே இருக்கான்.” என்று கூறினேன்.
“எங்க ரெண்டு பேரையும் தொந்தரவு செய்யாம இருக்கான் அது போதுமே!.” என்று கணவன் மனைவி இருவரின் பதில், எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி ஆக்கியது. நண்பர் மற்றும் அவரின் மனைவியிடம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னை குறித்து விளக்கம் கொடுத்தேன்.
இருவரும் “இது எங்களுக்கும் தெரியும் , இருந்தாலும் அவனே மாறிருவான். இல்லைனா எங்களைதான் ரொம்ப தொந்தரவு செய்வான். வீட்ல இன்று ஒரு நாள் தான் இருக்கிறோம், இன்னைக்கும் அவன கண்டிச்சா நல்லா இருக்காது” என்று இருவரும் கூறியதும் , நான் என் பேச்சை நிறுத்தி விட்டு , நான் சென்ற வேலைய பற்றி பேசி விட்டு புறப்பட்டேன்.
குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதினால், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும், மற்றவர்களிடம் சிரித்து பேசும் பழக்கம் கெட்டு போய்விடும். தனகென்ற தனி உலகில் வாழ்வதை போல் இருக்கும் நிலை ஏற்படும். மேலும் பல பிரச்சனைகள் ஏற்படும். இன்னும் பெற்றோர்களுக்கு இந்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறதோ ? என்று தோன்றுகிறது.
அதிகமாக செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு பற்றி தெரிந்தும், அதனை கண்டு கொள்ளாமல் இருப்பது மிக பெரிய தவறு.
செல்போன் பயன்பாடு நம் தேவைக்கு ஏற்ப மட்டுமே இருக்க வேண்டும். செல்போன் நம் கட்டுபாட்டில் தான் இருக்க வேண்டுமே , தவிர அதன் கட்டுப்பாட்டில் நாம் இருக்க கூடாது. தொந்தரவிற்கு மன்னிக்கவும்…..
எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings