in ,

மச்சி படத்துக்கு போலாமா (சிறுகதை) – பஷீர் அஹமது

எழுத்தாளர் பஷீர் அஹமது எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

எப்போதும் போல ஒரு நல்ல அழகான சனிக்கிழமை அன்று.

எதாவது ஒரு படத்திற்கு போகலானு பார்த்த, அந்த படத்தை பற்றி பார்த்தவனும், பார்க்காதவனனும் சமூக வலைத்தளங்களில் போட்டு வச்சு செய்து கொண்டு இருக்கின்றனர்.

அதிலும் ஒருவன், படம் வருவதற்கு மூன்று நாளைக்கு முன்னாடியே படத்தை பார்ப்பது வேஸ்ட் மற்றும் குப்பை படம் என்று போட்டு இருக்கிறான்.

ஒருவேளை இவன் அந்த நடிகர் மீது தனிப்பட்ட வன்மத்தை கக்குகிறான் என்று நினைத்து விட்டு, நாம் இதெல்லாம் பார்த்தால் படத்துக்கு போக முடியாது என்று முடிவு எடுத்து விட்டு, படத்துக்கு போக ரெடி ஆனேன்.

போனை எடுத்து டேய் மச்சி படத்துக்கு போலாமான்னு என்னுடைய பள்ளி நண்பனுக்கு பேசினேன். பாவம் அவன் எந்த பிரச்சனையில் இருந்தான் என்று தெரியவில்லை.

போனை எடுத்ததும் புலம்ப ஆரம்பித்து விட்டான். மச்சி இந்த வாழ்க்கையே வாழ புடிக்கல. ஏன்டா வாழறோம்னு இருக்கு. நாம் ஏன் இப்டி கஷ்டப்படுறோம்னு தெரில, படிக்குறப்ப எவ்ளோ ஜாலியா இருந்தோம். கல்யாணம் ஆகி என்று நிறுத்தாமல் பேசி கொண்டே இருந்தான். இவனிடம் பேசுனத்துக்கு, இவனை கூப்பிடாமலேயே இருந்திருக்கலாம்னு தோணுச்சு

கடைசியா ஒரு கேள்வி கேட்டேன். டேய் வரியா இல்லையடா என்று. வரேன்னு சொல்லிட்டேன்.

அதிலிருந்து ஆரம்பித்தான் அடுத்த கேள்வி. மச்சி படம் எப்படி இருக்கு. Review பாத்தியா, Hero Introduction கேட்டியா. சஸ்பென்ஸ் கேரக்டர் எப்போ வருதாம் என்று கேட்டு கொண்டே இருந்தான். டேய் நாம்தான் படம் பாக்க போறோம்ல அப்றம் என்ன போய் பாத்துக்கலாம்னு சொல்லி முடிக்கும் முன் அடுத்த கதைக்கு போய்விட்டான்.

மச்சி நாம போற படத்துக்கும் ஒரு ஹாலிவூட் படத்துக்கும் சம்மந்தம் இருக்காம். அதுல ஒரு ஹீரோ கரடி மேல 100 km வேகத்துல போய் வில்லன் கூட சண்டை போட்டு ஹீரோயின் கைய புடிச்சு ….

அவன் முடிக்கும் முன்னரே, நான் அவனை நிறுத்தி எப்பிடிடா கரடி மேல உக்காந்து 100 km வேகத்துல போக முடியும்னு கேட்டேன் .

அதுக்கு, அவன் ஹாலிவூட் சினிமா அப்படிதாண்டா. wortha இருக்கும்னு சொன்னான். நாம போன மாசம் பார்த்த தமிழ் படத்துல இப்படித்தான்டா ஹீரோ கார்ல 100 km வேகத்துல போனாரு. நீ அது ஏன்டா புடிக்கலைனு சொன்னனு கேட்டா

எனக்கு அந்த ஹீரோ புடிக்காது. அவரு எங்க நம்பிக்கைக்கு மாற ஒரு படத்துல நடுச்சாறு. அதுனால அவரு என பண்ணுனாலும் நா அப்டித்தான்ட சொல்லுவேன்னு சொன்னான்.

இதுதான் நூறு சதவீத வன்மம் என்று எனக்கு அப்போதுதான் தெரிந்தது.

அதெல்லாம் விடுடா இப்ப படத்துக்கு வரியா இல்லையாடான்னு கேட்டா, அடுத்த கேள்வி கேட்டான்.

படத்துல எல்லாரும் சமம்னு சொல்றவங்க ஏன்டா கடவுளை பாக்க VIP டிக்கெட்ல போறாங்கன்னு.

இப்ப எதுக்குடா இவ்ளோ கேள்வி கேட்டுட்டிகிட்டே இருக்க. உனக்கு என்னடா ஆச்சுன்னு கேட்டேன்..

இல்லடா நம்ம பார்த்த லாஸ்ட் படத்துல ஹீரோ சொல்லுற கடைசி டயலாக் “எல்லோரும் சமம்னு” அதான் கேட்டேன் என்றான்.

டேய் அதெல்லாம் சும்மா படத்துக்கும், கதைக்கும் தேவைபட்ட வரிகள். உனக்கு அது புடுச்சு, அதுல உண்மை இருந்துச்சுன்னா நீயும் அது மாறி நடத்துக்கோடா என்று ஒரு வழியாக முடித்தேன்.

இதற்கு மேல் இவனை கூப்பிட்டால் இன்னும் நிறைய அரசியல் கேள்வி கேட்பான் என்று நினைத்து டேய் நாளைக்கு போன் பன்றேன்னு சொல்லி வைத்து விட்டேன்.

மறுபடியும் அவனிடம் இருந்து கால். மச்சி நாம நாளைக்கு தான போறோம். அதுவரை என்னால அந்த சஸ்பென்ஸ் கேரக்டர் வர சீன் பாக்காம இருக்க முடியாது. அந்த கேரக்டர் யாருனு படம் பார்த்தவர்கள்ட்ட கேட்டு சொல்லுடான்னு சொன்னான்..

டேய் நீ வரவே வேண்டான்னு சொல்லிட்டேன்.

ஏன்டா இவ்ளோ கோவப்படுறன்னு கேட்டான். மச்சி நீ போய் படம் பாத்து உன்னோட அனுபத்துல உனக்கு வெறுப்பு, விருப்பு இருக்கலாம்டா. அடுத்தவங்கள்ட கேட்டு நாம முடிவு பண்ண கூடாதுடான்னு சொன்னேன். உடனே செரிடா சொல்லிட்டேன். வாவ் நாம ஒருத்தன மாத்திட்டோம்னு நெனச்சப ஒன்னு கேட்டான்.

மச்சி கிளைமாக்ஸ் என்னனு மட்டும் கேட்டு சொல்லுடான்னு.

நீ படத்துக்கே வர வேணான்னு சொல்லிட்டேன்.

எழுத்தாளர் பஷீர் அஹமது எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பொறுமை (சிறுகதை) – பஷீர் அஹமது

    இன்ஸ்டாகிராம் நண்பனும் இலக்கிய கூட்டமும் 2045 (சிறுகதை) – பஷீர் அஹமது