எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அய்யோ! உன் மவன் நெலமக்கு பொட்டப்புள்ளயா பொறக்கனும்? அதுலயும் கருப்பால்ல பொறந்துருக்கு. நீயே அன்னாடங்காச்சி. இதுக்கு சீரு செஞ்சு கட்டிக் கொடுக்கறதெல்லாம் ஆவற வேலயா?”
“என்ன மதினி இப்படி சொல்ற? கருப்பாவும் பொம்பளயாவும் பொறக்கறது நம்ம கைலயா இருக்குது?”
“ஹூக்கும் பேசாம இதுக்கு நெல்லுமணி கொடுத்து கொன்னுடு. இதால யாருக்கு என்ன பிரயோசனம்?”
“ஐயோ மதினி! என்ன இப்படி சொல்ற! நா குடிக்கிற கஞ்சிய அதுக்கு ஊத்திட்டு போறேன்”
“எப்பா பொறந்த வீட்டு கோடித்துணி யாரு போடறீங்க? இது கூட பொறந்தவங்க எல்லாம் போய் சேர்ந்தாச்சு, அப்படியே எடுத்தறலாமா?”
“நான் போடறேங்க. ஆயா பொறந்த வீட்ல தான நானும் பொறந்தேன் “
முப்பது வருடங்களுக்கு முன் இதால யாருக்கு என்ன பிரயோசனம் என கேட்கப்பட்டவள், கேள்வி கேட்டவளுக்கு தன் இறுதி மரியாதையை செலுத்தினாள்.
எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings