2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
பொன்னிறத்தில் தேவதை போல குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மாடி நாற்பத்தைந்து நாள் கேரிக்கு புறத்தே இருந்த ‘தேல்பய்’யில் (புறவீடு) தங்கிவிட்டு குளித்துவிட்டு கேரிக்குள் வரவும், அடுத்த கம்பட்ராயன் தேர்த்திருவிழா வரவும் சரியாக இருந்தது.
பிறை கண்ட மூன்றாம் நாள் கேரியில் தீ மூட்டி இருபத்தோரு நாள் திருவிழா ஆட்டமும் பாட்டுமாக அல்லோகலப் பட்டது. புதுப்பானை பொங்கலிட்டு, கம்பட்ராயன் தேருக்கு நெய்யும், பாலும் படைத்து சாம்பிராணி, சூட ஆராதனைக் காட்டி, இவர்கள் வீட்டில் செய்த ‘பிடாட்’ பலகாரத்தைச் சாப்பிட தேவாதியை அழைத்துச் சென்றனர்.
‘கிள்யாட்ட’ விளையாட்டுடன் திருவிழா நிறைவடைந்தது. குழந்தை தேவதை போல இருக்கக் கண்டு அவர்கள் தெய்வம் காமட்டராயனின் மனைவி காசினி பெயரையே சூட்டினர். தேனும், பாலும், பழமுமாக ஊட்டி வளர்த்தனர்.
குழந்தை படிப்பு, விளையாட்டு என அனைத்திலுமே சிறந்து விளங்கினாள். அதுமட்டுமல்ல, சமையல் கலையிலும் கை தேர்ந்திருந்தாள். அவள் பெற்றோருக்குப் பிடித்த அவர்கள் பாரம்பரிய இராகிப் பிட்டாகட்டும், அவள் பள்ளித் தோழிகள் கொண்டு வரும் படுகர் திருமணத்தின் பாரம்பரிய அவரைக் குழம்பாகட்டும், ஆசிரியைகள் கொண்டு வரும் பலாக்காய் பிரியாணியாகட்டும், பலாக்காய் குழம்பாகட்டும், பலாப்பழ அல்வாவாகட்டும், வாழைப்பழ பஜ்ஜியாகட்டும், அவள் கைப்பட்டால் தேவாமிர்தமாகிவிடும்.
கோத்தர் இனப் பெண்கள் மண்டுப் பூக்களைத் துணியில் கட்டி தலையில் சூடிக் கொள்வார்கள். மண்டுப் பூக்கள் சூடாமல் கணவனுக்கு உணவளிக்க மாட்டார்களாம். இவள் தாய்க்கு மட்டும் இவள் மண்டுப் பூக்களைப் புதிது, புதிதாய்ப் பறித்து வந்து நூலிலோ, வாழை நாரிலோ அழகுற கட்டி கொண்டையில் அணிவித்து அழகு பார்ப்பாள்.
இவர்கள் இனத்தில் மட்பாண்டம் செய்ய களிமண் சேகரிப்பதே ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். இசைக் கலைஞர்கள் குழலும், மத்தளமும் முழங்க ஊர் மக்கள், குழந்தைகள் அனைவரும் கூடுவார்கள்.
தேவாதியின் மனைவி முதல் மண்ணைத் தோண்டி ஆரம்பிக்க, இவள் தான் உற்சாகமாக, அவருடன் நின்று முதல் மண் எடுப்பாள். அந்த குறிப்பிட்ட பகுதியில் மண் எடுத்து செய்யப்படும் மட்கலங்களின் மவுசே தனிதான். விடுமுறை நாட்களில், தந்தை பானை செய்ய குழைத்து வைத்த மண்ணில் விதவிதமான யானை, குதிரை, காட்டெருமை, புலி, கரடி, மயில், குருவிகள் பொம்மைகள் மட்டுமல்லாது பூக்களும், மரங்களும், அருவிகளும் நிறைந்த நீலமலையின் வடிவம் கூட அவள் கை வண்ணத்தில் மிளிரும்.
இவள் தந்தை தவிர இவர்கள் இனத்தைச் சேர்ந்த பிற ஆண்கள் செய்யும் மரப்பாச்சி செய்வது, தோல் பொருட்கள் செய்யும் வேலை, நகைகள் செய்யும் வேலைகளையும் கூட தெரிந்து வைத்திருந்தாள். அவள் கண் பார்த்தால், கை தானாக அதைச் செய்யும். பிற தோடர் இனப் பெண்களிடமிருந்து சால்வைகளில் எம்ப்ராய்டரி போடக்கூட கற்றுக் கொண்டாள். இவள் செய்யும் கைவினைப் பொருட்கள் மிக நுட்பமாக இருக்குமாதலால், தேடி வந்து வாங்கிச் செல்வர்.
தோடர் இனப் பெண்களிடமிருந்து கருப்பு, சிவப்பு எம்ப்ராய்டரி போட்ட தோடர் சால்வையை அமிதாப் பச்சன் வாங்கிச் சென்று சினிமாத் துறையில் பிரபலமாக்கியதாகக் கூறிக் கொண்டார்கள். இவர்கள் கேரி சும்மாவே சோலை வனம் போலிருக்கும். இவள் பொருட்களை அழகுற அமைத்திருப்பதைப் பார்த்தால் சொர்க்க லோகம் போல் தென்படும்.
ஒருமுறை இவர்கள் கேரிக்கு வருபவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரோடு மீண்டும், மீண்டும் அங்கே வர விரும்புவர். பொம்மைகள் செய்வதும், அருவியில் குளிப்பதுமாய்ப் பட்டாம்பூச்சி போலப் பறந்து திரிந்தாள், காசினி.
விதி யாரை விட்டது?. அவள் தாயைப் புலி இழுத்துச் சென்றது. எரியூட்டக் கூட பிணம் கிடைக்கவில்லை என்றார்கள். சில நாட்களிலேயே அவள் தந்தையும் செங்குத்தான பாறையில் தொங்கிய மிகப் பெரிய தேனடையைப் பார்த்து அடுத்த நாள் அமாவாசை என்பதால், அப்போது விட்டால் தேனீக்கள் குடித்துவிட்டுப் போய்விடும் என நினைத்து, உடனடியாக எடுக்க ஆசைப்பட்டு கயிறு கட்டாமல் இறங்கியவர் வழுக்கிக் கீழே விழுந்து இறந்து போனார்.
அழுது புலம்பி தனியாகத் தவித்த வேளையில் தூரத்து உறவினரான இவளது மாமனார் தன் மகனுக்கு மணம் முடித்து அழைத்துப் போகிறேன் என்றதும் மறுப்பு சொல்லத் தோன்றவில்லை. மாமன் முறை ஊர்க்காரர்கள் என்றதால் ஊர்ப் பெரியவர்களும் மறுப்பு சொல்லவில்லை.
இவளுக்கு தந்தை இல்லாததால் மாப்பிள்ளை வீட்டார் ஒண்ணே கால் ரூபாய் வரதட்சிணையை மண்யேவ்கார்னிடம் (ஊர் நாட்டாண்மையிடம்) கொடுத்து காலில் விழுந்து ஆசி பெற்றதும் திருமணம் முடிந்தது. அய்யனோர், அம்மனோர் கோயில் எல்லையில் நின்று காணிக்கை செலுத்திவிட்டு நேராக இந்த குடியிருப்புக்கு அழைத்து வந்தனர்.
இங்கு வந்தபிறகுதான் இவளது புருஷனும், மாமனாரும் எவ்வளவு அப்பாவிகள் என்பதும், இது எவ்வளவு பெரிய சிறை என்பதும் புரிய வந்தது. இவளது தாய், தந்தை இறந்த செய்தி தெரிய வந்ததும், ‘இவளைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து அழைத்து வருகிறேன்’ என்று முதலாளியிடம் கேட்டதும், ‘இவள் தேனீ போல சுறுசுறுப்பாய் வேலை செய்வாள், தேவாமிர்தம் போலச் சமைப்பாள்’ என்பதைக் கேள்விப்பட்டே முதலாளி, ‘வேலைக்கு இன்னொரு ஆள் கிடைத்தது’ என்று சந்தோஷமாய் இவர்களை அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.
என்ன தெரிந்து என்ன பயன்?. காவலாளியாக வேலை பார்க்கும் இவள் மாமனாரிடம் ஏன் இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால், “இங்க சும்மா கிடக்குறதுக்கு, அங்க போய் கிடக்கிறேன்” என்பார்.
புருஷனிடம், “அம்மா ஞாபகமாய் இருக்கும் வெள்ளி நகைகளை வித்தாவது கடனை அடைத்துவிட்டுப் போவோம்” என்றால், “முதலாளி ஏகப்பட்ட வட்டிக் கணக்கு எழுதியிருக்காரே அத்தனையும் எப்படி அடைக்கிறது?, அப்புறம் அப்பாவ விட்டுட்டு புள்ளக்குட்டியக் கூட்டிட்டு எங்க போறது? என்ன பண்றது?” என்று பயப்படுகிறார்.
வெறித்த காசினியின் கண்கள், நனவுக்குத் திரும்பி வேதனையோடு நித்யாவைப் பார்த்தது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings