in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 26) – ஜெயலக்ஷ்மி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ழக்கறிஞர் அபிதா மைக்கண்ணனை கடத்தியவர் விவரம் அனைத்தையும் கொண்டு வருகிறார் என்றும் ‘உடனே அவனை மீட்டு விடலாம்’ எனக் காவல்துணை ஆணையரும் கூறிவிட்டார் என்றும் நம்பி நிம்மதியோடிருந்த நித்யாவிற்கு அபிதாவிற்கு ஏற்பட்ட விபத்து மாபெரும் அதிர்ச்சியைத் தந்தது. அப்படியே அருகிலிருந்த நாற்காலியில் சரிந்தாள்.

 “என்னாச்சு நித்யா. பி ஸ்ட்ராங். வி வில் லுக் ஆஃப்டர்“ என்றார் ஆட்சியர்.

“டேக் கரேஜ் மேடம். ரயில்வே ஸ்டேஷன்ஸ், பஸ் ஸ்டாண்ட்ஸ், லாட்ஜஸ், மூவிங் வெஹிகிள்ஸ்… எல்லாத்லயுமே அந்த பையன் ஃபோட்டோவ வச்சு செக் பண்ணச் சொல்லி சிட்டி ஃபுல்லா அலர்ட் பண்ணிருக்கோம், பார்க்கலாம்“ என்றார் காவல் துணை ஆணையர்.

ஆட்சியரின் அலுவலக உதவியாளர் நித்யாவுக்கு குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். தண்ணீரைக் குடித்துவிட்டு இப்போது அபிதாவைப் பார்க்க மருத்துவமனைக்கு செல்வதா? அல்லது மைக்கண்ணனை காப்பாற்ற அடுத்த நடவடிக்கையைத் தொடர்வதா என நித்யாவிற்கு குழப்பம் மேலிட்டது.

“இல்ல மேடம், இப்போ அவங்களுக்கு என்னாச்சோ? அடுத்து அவங்க எடுத்துட்டு வந்த எவிடென்ஸ் என்னாச்சோ?…“  என்று புலம்பினாள்.

“டி.சி., நீங்க செக் பண்ணுங்க“ என்றார் ஆட்சியர்.

“ஸர், அபிதா மேடத்த பாக்க போலாமா?“ என்றாள் நித்யா, காவல் துணை ஆணையரைப் பார்த்து.

“அவங்கள பாக்க முடியாது மேடம். ஹெட் இஞ்சுரினு சொன்னாங்கள்ல? ஐ.சி.யு. க்கு கொண்டு போயிருப்பாங்க. நான் விசாரிக்கிறேன். கொஞ்சம் பொறுங்க“ என்றார் அவர்.

அலைபேசியின் மூலம் விசாரித்து விட்டு, “அவங்களுக்கு சிவ்யர் ஹெட் இஞ்சுரி. காலர் போன் க்ரஸ் ஆயிருக்கு. ஷி இஸ் இன் சீரியஸ் கண்டிஷன். ரெஸ்பான்ஸ் எதும் இல்லையாம். கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜிங்கறாங்க. அவங்க பக்கத்ல அவங்களோட பேக் எதுவும் இல்ல. மே பி இந்த எவிடென்ஸ் எடுக்கறதுக்காகக் கூட யாராவது பர்பஸ்ஸாவே அடிச்சிருக்கலாம். இல்ல அடிபட்டு விழுந்தவுடனே யாராவது பணத்துக்கு ஆசப்பட்டு பேக்க தூக்கிட்டுப் போயிருக்கலாம். ஆனா, கரெக்டா நம்ம கலெக்டரேட் முன்னாடி இருக்கற பிரிட்ஜ் மேல கேமரா இல்லாத இடமா பாத்து அடிச்சிருக்காங்க. அதான் கொஞ்சம் டவுட் ஃபுல்லா தான் இருக்கு. பின்னாடியே வண்டில வந்தவங்க பாக்றதுக்குள்ள பேக்கையும் அடிச்சிட்டு போணும்னா ப்ளான்டா தான் தெரியுது. பட், சி.சி.டி.வி. ஃபுட்டேஜ்னா நாம ஹோம்லருந்து இன்னொரு காப்பி எடுத்துக்க முடியுமே! அதுக்காக ஏன் அடிக்கணும்?“ என்றார் காவல் துணை ஆணையர்.

“ஸர், அப்போ உடனடியா ஹோம் சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் எடுக்க ஏற்பாடு பண்ணுங்க, ப்ளீஸ்!“ என்றாள் நித்யா.

உடனடியாக துணை ஆணையர், தனது ஆய்வாளரை அலைபேசியில் தொடர்பு கொண்டு, பாய்ஸ் ஹோம் சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் எடுக்குமாறு கூறினார்.

சிறிது நேரத்தில் அழைப்பில் வந்த ஆய்வாளர், “ஸார் ஹோமோட சிஸ்டமே கரெப்ட் ஆயிருக்கு“  என்றார்.

“என்னய்யா சொல்ற? இப்போதானே அந்தம்மா காப்பி எடுத்துட்டு வந்தாங்க? அந்த ஹோம் சூப்பரின்டெண்டண்ட், கம்ப்யூட்டர ஆப்பரேட் பண்ற ஆக்சஸ் இருக்றவங்கன்னு எல்லாரையும் மொத்தமா தூக்குய்யா“ என்றார் கோபமாக.

“இல்ல ஸார். செக் பண்ணிட்டோம் ஸார். ஹோம் கம்ப்யூட்டர யாரோ ஹேக் பண்ணி கரப்ட் பண்ணிருக்காங்க

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நித்யாவுக்கு சர்வாங்கமும் அதிர்ந்தது.

 ‘இது ஏதோ மகா பயங்கரமா போயிட்டிருக்கே! சும்மா அந்தப் பையன் பாண்டட் லேபராவே வேல செஞ்சிட்டிருந்தா ஏதோ கெடச்சத சாப்டுட்டு வேலயாவது பாத்துட்டு இருந்திருப்பான். அபிதா மேடம் உயிரோடயாவது இருந்திருப்பாங்க. எத்தன கேஸ்ல எதுக்கும் பயப்படாம தைரியமா போராடிருக்காங்க’ என்ற எண்ணம் தோன்றிய மறுவினாடி

“சே…! எதுக்கு இப்ப மத்தவங்கள மாதிரி நாமும்  நெகடிவ்வா திங்க் பண்ணிட்டிருக்கோம்? சுதந்திரமில்லாம வெறும் ஜடம் மாதிரி வேல செஞ்சி அந்த அழகான குறும்புக் கண்ணனின் வாழ்க்கை அழியணுமா? அதான் எல்லா எடத்லயும் தேடிட்டு இருக்காங்கள்ல? எங்க போயிடுவாங்க? கண்டு பிடிச்சி மீட்டுடணும். அபிதா மேடமும் கண்டிப்பா எழுந்து வருவாங்க“ என்று தன்னைத் தான் தேற்றிக் கொண்டாள் நித்யா.

மறுபடியும் அழைப்பில் வந்த ஆய்வாளர், ஒரு ஆட்டோ ஓட்டுநர் தான்தான் அபிதாவின் இரு சக்கர வாகனத்தை இடித்து விட்டதாகவும், ஆட்டோ ப்ரேக் பிடிக்காததால், தவறுதலாக அப்படி நடந்து விட்டது என்றும், அவர்களிடமிருந்த பேக் பற்றி தனக்கெதுவும் தெரியாது எனவும் கூறி காவல் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளதாகத் தெரிவித்தார். 

“ஸர், இது உண்மையா இருக்காதுன்னு தோணுது, ஸர். அப்டியிருந்தா, கலெக்டரேட் முன்னாடி அடிச்சவன் இங்கருக்காம, இவ்ளோ நேரம் கழிச்சி எதுக்கு ஸர், போலீஸ் ஸ்டேஷனுக்கு போனான்?“ என்றாள் நித்யா.

“ஆமா பின்னாடியே வெஹிக்கிள்ள வந்தவங்க பாக்றதுங்ககுள்ள அடிச்ச வண்டியும், பேகும் காணாம போய்டுச்சு. அவங்கதான் ஆம்புலன்ஸூக்கும் கால் பண்ணிருக்காங்க“ ஆய்வரிடம் அதைப் பற்றிக் கூறிய போது அடித்த வேகத்தில் பயந்து அங்கிருந்து போய் விட்டதாகவும், பின்னர் மனசாட்சி உறுத்தியதால் காவல் நிலையம் வந்ததாகவும், அவன் கூறுவதாகக் கூறினார்.  

இருப்பினும், அவனை காவல் நிலையத்திலேயே உட்கார வைத்திருப்பதாகவும், விபத்து நடந்த இடத்தையும், விபத்து நடந்த பாலத்துக்கு முன்னும், பின்னும் இருக்கும் காமராக்களையும் ஆய்வு செய்வதாகவும் கூறினார்.

“ஓ.கே. மேடம். நான் கண்ட்ரோல் ரூமுக்கு போறேன். அப்பத்தான் ஃபாலோ பண்ண வசதியா இருக்கும்“ என்றவாறே எழுந்தார் துணை ஆணையர்.

“தேங்க் யூ ஸர்! தேங்க் யூ மேடம்!“ என்ற நித்யாவும், ‘மைக்கண்ணனையும் அபிதா மேடத்தையும் எப்படியாவது காப்பாத்துங்க ஆண்டவரே!’ என்று வேண்டியவாறு  மெதுவாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள்.

குழந்தைகள் நலக் குழும உறுப்பினரும், போராளி வழக்றிஞருமான அபிதாவுக்கு விபத்து நேர்ந்துள்ளதாகவும், தயவுகூர்ந்து அவருக்காக வேண்டிக் கொள்ளுமாறும், வாட்ஸாப் குழுக்களில் செய்தி பகிர்ந்தாள் நித்யா. அப்படியே தனக்கு முதன் முதலாக   அபிதாவை அறிமுகப்படுத்திய நீதிபதிக்கும் அந்தச் செய்தியைப் பகிர்ந்தாள். அவர் அதைப் பார்த்துவிட்டு நித்யாவை அழைத்தார். 

அவர் கூறியதைக் கேட்டு, உடனடியாக காவல் துணை ஆணையரை அழைத்தாள், நித்யா.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 25) – ஜெயலக்ஷ்மி

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 27) – ஜெயலக்ஷ்மி