எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நான் ஒரு பி .டெக் , (ஐ .டி ) பட்டதாரி . எனக்கு வயது 24. என் அப்பா அம்மா கலப்பு திருமணம் . இருவரும் வெவ்வேறு மதங்கள் .எனக்கு எந்த மதத்திலும் ஈடுபாடு அவ்வளவாக இல்லை. நான் கால்கதாவில் படித்தாதால் என்னவோ
எனக்கு விவேகானந்தவின் மீது ஈடுபாடு உண்டு. அவரது எழுத்துக்களை ரசித்து படிப்பேன் .எனக்கு ஒரு தங்கை ரமா . அவள் எம் .எ படித்து கொண்டு இருக்கிறாள் .எனக்கு ரமா என்றால் உயிர். அப்பாவிற்கு வயிது ஆகி விட்டது .
ஆனாலும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார் .ஒரு தனியார்
கம்பனியில் குமஸ்தாவக பணி செய்து வருகிறார். எங்கள் குடும்பதில்
அவ்வள்வு பண கஷ்டம் இல்லை. இருந்தாலும் நாங்கள் பணக்காரர்கள்
இல்லை.ரமாவிற்கு கல்யாணம் செய்ய வேண்டும் .என் அப்பாவிற்கு
சொந்த வீடு கூட இல்லை. கீழ் நடுதர வர்கம் .நான் தான் இனி
குடும்பத்திற்கு உதவ வேண்டும் .ரமாவின் கல்யாணத்தில் சிக்கல்
உள்ளது.
ஆம்…!
மதம் ஒரு பிரச்சனை .ஆனால் எனக்கு அவளுக்கு நல்ல மாப்பிள்ளை
கிடைக்கும் என என் உள்ளுணர்வு சொன்னது . நான் வேலை தேடி வருகிறேன் .எனக்கு கல்கத்தாவில் புறநகர் பகுதியில் ஒரு வேலை கிடைத்தது .
ஆனால் ….
அது மிகவும் தூரம் . நல்ல சம்பளம் தான் . ஆனால் வீட்டிலிருந்து புறபட்டு அங்கு செல்லவே 2 மணி நேரம் ஆகும் . போகவர 4 அல்லது 5 மணி நேரம்
ஆகிவிடும் . பிறகு 9 மணிநேர வேலை . பலமுறை யோசித்தேன் . என் அப்பா , அம்மாவிடம் கேட்டு பார்த்தேன் . அவர்கள் இருவரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .நானும் ஒப்புக்கொண்டேன் . அது சரி என்றே எனக்கும் பட்டது .
ஆனால் …
சீக்கிரமே எனக்கு சென்னையில் ஒரு வேலை கிடைத்தது . ஒரு ஐ .டி நிறுவனம் .மூன்று சுற்று நேர்காணல் நடந்த்து . எல்லாம் ஆன்லைனில் தான் .எனக்கு வேலையில் சேர இமெயில் அனுப்பினார்கள் . நல்ல சம்பளம் . துவக்கமே
ரூபா 45,000. ..!
என் அம்மாவிற்கு திருநெல்வேலி பூர்வீகம் . என் அப்பாவிற்கு மதுரை
பூர்வீகம் .அதனால் எனக்கு நன்கு தமிழ் தெரியும் . என் அம்மா , அப்பா சம்மதம் கிடைத்து விட்டது . நான் சென்னை செல்ல முடிவு எடுதேன்.
எங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் இனி கஷ்டம் இருக்காது . என்
அப்பாவிற்கு மிகவும் உதவியாக இருக்கும் . அவர்கள் கொடுத்த
அவகாசம் ஒரு வாரம் தான். நான் என் மூட்டை முடிச்சுகளை கட்டினேன் .நான் ரெடி ஆகி விட்டேன் . இன்று ரயிலில் போக போகிறேன் .என் அப்பா ,அம்மா , ரமா எல்லோர்க்கும் கஷ்டமாக தான் இருந்த்து . எனக்கும் கூட .ஒரு நல்ல வழி கிடைக்கும் போது அதைவிட முடியுமா ..? நான் என்ன வெளி நாட்டிற்கா செல்கிறேன் …? இங்கு உள்ள சென்னைக்கு தானே செல்கிறேன். 2 நாள் லீவு போட்டால் வீடு . நான் ரயில் ஏறி விட்டேன் .வண்டியில் எனக்கு அப்பர் பெர்த் . வண்டி எறியதுமே பெர்த்தில் படுத்து கொண்டேன் .
யோசித்து கொண்டே போனேன்.
ரயில் சத்தம் கூட என் காதில் விழவில்லை .
ஆம்….!!
எனது முதல் சம்பளத்தில் என்ன என்ன செய்ய வேண்டும் என கணக்கு போட்டேன் .
அப்பாவிற்கு ரூபா 10,000….!
அம்மாவிற்கு ரூபா 5,000…!!
ரமாவிற்கு 2 செட் சுடிதார்…..!!!!
ரமா கல்யாணம் …அதற்கு ரூபா 10,000 சேமிக்க முடிவு செய்தேன். இன்னும் ஒரு வருடம் ….அதற்குள் என் சேமிப்பு மற்றும் லோன் போட்டு ரமாவின் கல்யாணத்தை ” ஜாம் ஜாம் ” என நடத்தி விடலாம் .
முதல் சம்பளம் வாங்கி 2 நாள் லீவு போட்டு கல்காத்தா வர முடிவு
செய்தேன்.
அப்பாவிற்கு ஒரு பாண்ட் , ஷர்ட் …!
அம்மாவிற்கு ஒரு புடவை …!!
ரமாவிற்கு ஏற்கனவே முடிவு செய்த படி 2 சுடிதார்கள் …!!!
மேலும் ஒரு யோசனை தோன்றியது . அப்பாவின் ரிடயர்மென்ட் இன்னும் ஒருவருடத்தில்….இனிநாங்கள்கல்கத்தாவில்இருக்கவேண்டியஅவசியம் லை. சென்னையிலே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து குடியேறி விடலாம் என முடிவு செய்தேன் .ஒரு நல்ல வீட்டை சென்னையில் பார்த்து குடியேறி விடலாம் என என் தீர்மானத்தை நான் அப்பா , அம்மாவிடம் சொல்லி
விட்டேன். அவர்களும் சம்மதம் சொன்னார்கள் .
என் மனதில் ஒரு குஷி …!
புது வீடு ..! புது வாழ்க்கை …!!
‘ வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ‘என்பார்கள் …
அது என் விஷயத்தில் உண்மை ஆகி விட்டது ……
பட …..பட….பட …..டங் …டங்…டங்……!
டூங்க் …டூங்க் ….டூங்க்….!!
டமார் …டமார் …டமார் …!!!
அம்மா ….!
ஒரே குலுங்கள் …பெரிய சப்தம் …! நான் தலைகீழாக வீழ்ந்தேன் …!
எனது நினைவுகள் ஓய்ந்தன …!
எனது வலது கால் ஒடிந்து விட்டது …!!
எனது இடது கையும் ஒடிந்து விட்டது …!!!
நான் என் கடைசி தருணத்தில் உள்ளேன் .!!!!
எனது மண்டையில் பெரும்காயம் .
திரவம் என் முகத்தில் …
கடைசியாக பார்த்தேன் …
‘ குபு குபு ‘ என ரத்தம் …
நான் கடைசியாக பார்த்தது …
சிவப்பு நிறம் …!
என் கண்கள் மூடின…!
நான்
செ
த்
து
வி ……
(ட்டேன் …! )
பி. கு. : கோரமண்டல எக்ஸ்பிரஸில் பலியான அனைத்து
உயிர்களுக்கும் இந்த கதை அஞ்சலி …!
எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings