2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இனிதே நடந்து முடிந்தது நதியா, ராமுவின் கல்யாணம். நதியா கிளம்பு என்று மாப்பிள்ளை வீட்டார் சொன்னாலும் அவள் அழுது கொண்டே இருந்தாள்.
ராகு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, அதற்குள் நாம் கிளம்பியாக வேண்டும் என்று மாமியார் ராணி அதிகாரத்தோடு மருமகளை கிளம்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நதியாவின் அப்பா பிரசாத் ராகு காலம் முடிந்து செல்லுங்கள், இங்கிருந்து ஒரு மணி நேரம் தானே, என் பெண்ணையும் நாங்கள் ஆசுவாசப்படுத்தி சொல்லி அனுப்பி வைக்கிறோம் என்றார்.
என்ன? பிள்ளையை வளர்த்து இருக்கீங்க, பொம்பள புள்ள திருமணமானல் கணவர் வீட்டுக்கு போக வேண்டியது தானே முறை, இதெல்லாம் நீங்க சொல்லி வளர்க்கவில்லையா என்று சம்பந்தியிடம் முறையிட்டாள் ராணி.
ஒரே பெண் குழந்தை என்பதால் நாங்கள் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோம், கல்லூரி படிப்பை முடித்தவள் தானே, அதனால் எளிதாக புரிந்து கொள்வாள். சின்ன பிள்ளை கிடையாது, என்னதான் இருந்தாலும் தாய் வீட்டில் இருந்து பிரியும் போது ஒரு வருத்தம் இருக்க தானே செய்யும் என்றார் நதியாவின் தாய் வசந்தி.
என்னம்மோ சொல்றீங்க நீங்க, எப்படியோ என் மகனோட குடும்பம் நடத்தினால் சரி. ராகு காலம் முடிந்தே நாங்கள் கிளம்புகிறோம். அதுவரை உங்க பெண்ணுக்கு நல்ல அறிவுரையை சொல்லி அனுப்புங்கள் என்றாள் மாப்பிள்ளையின் தாய்.
ராம் தன் மனைவியிடம் எங்க அம்மா ஒரு மாதிரி, அவங்க சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா தான் அவர்களுக்கு பிடிக்கும். இல்லாவிட்டால் எதையாவது சொல்லிக் கொண்டு டார்ச்சர் செய்து கொண்டே இருப்பாள், அதனால நீ இப்பவே கிளம்பிடு, அதுதான் உனக்கும் நல்லது என்று கணவர் சொல்ல நதியா கணவரின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் தன்னுடைய தாய் தந்தையின் கண்ணீரைப் பார்த்து மீண்டும் அழுது கொண்டே காரின் ஏறி அமர்ந்தாள்.
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் கணவனின் வீட்டை நோக்கி நதியா, கணவர் ராம் உள்பட மாப்பிள்ளை வீட்டார் கிளம்பி போய்க் கொண்டிருந்தார்கள்.
பொண்ணும், மாப்பிள்ளையும் சென்று கொண்டிருந்த கார் டயர் பஞ்சர் ஆகி ஒரு மரத்தின் மீது மோதி நின்று விட்டது. இதில் மாப்பிள்ளைக்கு நெற்றியில் பலத்த அடிபட்டு ரத்தம் போய்க் கொண்டிருந்தது. நதியாவுக்கு முழங்கையில் லேசாக அடிபட்டதோடு மற்றபடி பெரிசாக எதுவும் அடிப்படாமல் தப்பித்து விட்டாள்..
பின்னாடி வந்து கொண்டிருந்த ராமின் அம்மாவும் அப்பாவும் கார் ஆக்சிடென்ட் ஆனதை பார்த்து தன்னுடைய காரை நிறுத்தி இறங்கி ஓடிச் சென்று பார்க்கும்போது தன்னுடைய மகனுக்கு மிகவும் பலத்த அடிபட்டு இருப்பதைக் கண்டு கலங்கி போய் நின்றார்கள் இருவரும்.
மருமகள் நதியா மயக்கம் அடைந்து இருப்பதை பார்த்து இருவரையும் அவசர அவசரமாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
மருத்துவமனைக்கு அனைத்து செல்லப்பட்ட சிறிது நேரத்தில் நதியா மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்தாள. அருகில் தன்னுடைய பெற்றோர் நிற்பதை பார்த்து, என் கணவர் எங்கே மா? என்று கேட்டாள்.
அவருக்கு நெற்றியில் அடிபட்டு இருப்பதால், ஒரு சிறிய அறுவை சிகிச்சை உடனே செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பதால் அதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாள் நதியாவின் தாய்.
அம்மா எனக்கு அவரை உடனே பார்க்க வேண்டும், என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
நதியாவின் கையைப் பிடித்து ராமை பார்ப்பதற்கு மெதுவாக அழைத்துச் சென்றார்கள் நதியாவின் தாய்..
நநதியாவை பார்த்தவுடனே மாமியாருக்கு கோபம் சுர்ரென்று ஏறியது. நீ இப்போது எதற்காக இங்கே வந்தாய், ஏதோ நாங்கள் கும்பிட்ட எங்களுடைய குலதெய்வம் என் மகனை காப்பாற்றி விட்டது. இல்லாவிட்டால் என்னுடைய மகனின் கதி வேறு விதமாக இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
என் மகனை கைப்பிடித்த நேரம் சரியில்லை, அதனால் சிறிது காலத்திற்கு உன்னுடைய வீட்டில் இருக்கவும். நான் எங்களுடைய குடும்ப ஜோதிடரை பார்த்துவிட்டு வேறு ஒரு நல்ல நாள் பார்த்து உன்னை அழைத்து செல்கிறேன் அதுவரைக்கும் நீ என்னுடைய மகனை பார்க்கவும் கூடாது, நீ கிளம்பி உன்னுடைய அம்மாவுடன் வீட்டுக்கு போ என்று சொல்லிக் கொண்டிருந்தாள் நதியாவின் மாமியார்.
என்ன சம்பந்தி அம்மா பேசுறீங்க, கல்யாணம் ஆகி மறு வீட்டு கூட போகல அதுக்குள்ள உங்க வீட்ல இரு, என்றால் என்ன அர்த்தம் என்று நதியாவின் அம்மா கேட்க,
அதற்கு நதியாவின் மாமியார் எனக்கு உங்க பெண்ணை பிடிக்கவில்லை என்று அர்த்தம், இதை நீங்களாக புரிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போறதுக்குள்ளயே விபத்துக்குள்ளாகி விட்டது என்றால் என் வீட்டிற்கு உன் பொண்ணை அழைத்துச் சென்று போனால் இன்னும் என்னென்னமோ நடக்குமோ என்று தெரியவில்லை.
அதனால் நான் ஜோசியரை பார்த்துவிட்டு உங்க பெண்ணுக்கு என் பையனுடன் வாழ்வதற்கு கொடுப்பினை இருந்தால் அவசியம் உங்க பெண்ணை என் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன் என்றாள் நதியாவின் மாமியார்.
அப்போது நர்ஸ் வேகமாக ஓடி வந்து இங்கே நதியா என்பவர்கள் யார், அவரைப் பார்க்க வேண்டும் என்று ராம் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கூறவே நதியா யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நான்தான் நதியா என்று சொல்லிக் கொண்டு நர்சை பின் தொடர்ந்தாள்.
அறைக்குள் சென்று ராமை பார்த்ததும், ராமின் கையை பிடித்து நதியா அழுது கொண்டிருந்தாள்.
நதியா, நான் நன்றாக தான் இருக்கிறேன் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை நீ எப்படி இருக்கிறாய் உனக்கு எதுவும் காயம் ஏற்பட்டதா என்று கேட்க, இல்லைங்க, முழங்கையில் தான் லேசாக அடி. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை, நான் நலமாக தான் இருக்கிறேன் என்றாள் நதியா.
உங்களுடைய பெற்றோர்கள் சொன்னது மாதிரி ராகு காலம் முடிந்து 6:30 மணிக்கு மேல் சென்று இருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. அதற்காகத்தான் கடவுள் உன் மூலமாக தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். என் அம்மாவிற்காக பயந்து கொண்டு நான் தான் உன்னை கிளம்ப சொன்னேன். தவறு என் மேல் தான் என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தான் நதியாவின் கணவன் ராம்.
நடந்து முடிந்ததை இனிமேல் எதுவும் பேச வேண்டாம், நடந்தது யாவும் நல்லதுக்கே என்று சொல்லி ராமை தேற்றிக் கொண்டிருந்தாள் மனைவி நதியா.
இன்றைய ராத்திரி நமக்கு மருத்துவமனையில் தான் என்று எழுதி இருக்கிறது, என்று சிரித்துக் கொண்டே ராம் சொல்ல, நதியா வெட்கத்துடன் தலை குனிந்து சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்
கணவர் நம் பக்கம் இருக்க நமக்கேன் பயம் என்று சந்தோசத்துடன் அன்றைய இரவை கணவனுடன் மருத்துவமனையில் சந்தோசமாக கழித்தாள் நதியா.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமையான கதை மா!
மிகவும் நன்றி மா🙏
அருமை. முன்னோர்கள் கூறியுள்ள விஷயங்களை பத்தாம் பசலி தனம் என கருதாமல் இருக்க இது ஒரு பாடம்.
அருமையான கணவன்.
👍👍👍
மிகவும் நன்றி மா🙏