in

காமராஜர் (கவிதை) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.

*காமராஜர்*

 கருத்து பெருத்த தலைவனே

 கருத்த உடல் உழவனே

 சிந்தை உயர்ந்த மனிதனே 

 கந்தை உயர்த்த உழைத்தவனே

 மதிய உணவு  மகானே

 அன்னைக்கும் சமநீதியா மகனே

 கதர் சட்டை புத்தனே

 முதிர் திட்டம் கொண்டவனே

 

 திட்டம் தீட்டுவாய் தீண்டாமை ஒழிக்க

 கல்வியை ஊட்டுவாய் அறியாமை எரிக்க

 வெளிச்சம் ஏற்றுவாய் ஏழை வீட்டில்

 சாதிக்கூச்சம் ஓட்டுவாய் மனிதன் கூட்டில்

 

 ஏழை மாணவனுக்கும் கொடுத்தாய்  ஏட்டை

 போட்டாய் பள்ளம்  இல்லா  ரோட்டை

 உயர்த்த நினைத்தாய்  நம் நாட்டை

  அறிவோம் நீ பட்ட பாட்டை

 

பாலகனை பள்ளிக்கு வரவழைக்க பாசத்தோடு சோறு பரிமாறி

நேசத்தோடு கல்வி கோர்த்து பரிமாறிய எங்கள் குலதெய்வம் கருமாரி

ஒத்தவனே……

 

 உன் உருவம் ஒரு மாறி

என மக்கள் சொன்ன போதும்

 கருத்து மிகுந்த உன்னை கண்டு கர்வம் கொள்ள தோணுதய்யா  

 உன் வழி நிற்போம்  சத்தியம்

 உலகை வெல்வோம் நிச்சயம்

 

 உலகில் விதைப்பவன் உழவன் என்றால் மிகப்பெரிய உழவன் நீ தானே

 ஏனெனில் கருத்தை விதைத்தாய் காமராஜரே….

 

 உன்னை வணங்கி உன் புகழ் ஏற்றிடுவேன் உச்சத்தில்

 நீ நிம்மதியாய் உறங்கு சொர்க்கத்தில்……….

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வரட்டி மனிதர்களும், வைரப் பசுக்களும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    ஏரி காத்த மாரியம்மா (சிறுகதை) – அர்ஜுனன்