2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அம்மா, நீங்க என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னதாக சொன்னீர்களே, நான் வந்திருக்கிறேன், கண்ணை திறந்து பாருங்கம்மா… நான் சொல்வது உங்கள் காதில் விழுகிறதா என தன்னுடைய அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து வந்த மகள் ஸ்வேதா அழுது கொண்டே பேசினாள்.
நீங்கள் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கூட நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தார்கள், அதற்குப் பிறகு எனக்கு என்னமோ போல் இருக்கிறது என சொன்னார்கள். உடனே மருத்துவரை அழைத்து வந்தேன் என சொன்னாள் குமாரி.
மருத்துவர் என்ன சொன்னார் என ஸ்வேதா தன்னுடைய அண்ணன் மனைவி குமாரியிடம் கேட்டதற்கு அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே உயிர் பிழைப்பது கஷ்டம் என சொன்னதால்தான் உனக்கு தகவலை தெரிவித்தோம் என்றாள் குமாரி.
உன்னுடைய தம்பி பொண்டாட்டி நித்யா மாடியில் தானே குடியிருக்கின்றாள், விருந்தாளி மாதிரி வந்து பார்த்துவிட்டு உடனே மேலே சென்று விடுகிறாள். என்னால் பார்க்க முடியாது. நீங்கள் வந்து என்ன செய்வீங்களோ ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது. நான் நாளை மறுநாள் என்னுடைய அம்மா வீட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு இங்கே முடியாமல் இருக்கும் உங்க அம்மாவை விட்டுவிட்டு ஊருக்கு போய் விட்டாள்.
இருந்தாலும் நம்மால் அப்படி இருக்க முடியவில்லை. உடனே நானும் உங்க அண்ணனும் கிளம்பி உங்க அம்மாவை பார்க்க வந்து விட்டோம் என்றால் குமாரி.
அந்த அண்ணியை வேறு உறவிலிருந்து தானே பெண் எடுத்தோம், நீங்கள் அப்படி கிடையாது அல்லவா? எங்க அம்மாவுடைய அண்ணன் பொண்ணு நீங்கள், உங்களால் அப்படி இருக்க முடியாது ஒரே ரத்தம் அல்லவா அதனால் தான் ஓடி வந்து விட்டீர்கள்.
அவர்கள் என்னதான் இருந்தாலும் ஒன்றுவிட்ட சொந்தம் தான். அதனால் அவர்களுக்கு அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துக் கொண்டாள் என்றாள் ஸ்வேதா.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துப் போகத் தான் சொன்னார்கள். ஆனால் மனது கேட்காமல் எப்படியாவது பிழைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் கடவுள் மீது பாரத்தை போட்டு அத்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம் என்றாள் குமாரி.
திடீரென்று ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தால் அம்மா மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள். உடனே மருத்துவரை அழைத்து வந்து பார்த்தார்கள். அவ்வளவுதான், முடிந்துவிட்டது என்று சொல்ல உடனே தன்னுடைய கணவருக்கு தகவல் சொன்னாள் குமாரி.
உடனே ஓடி வந்தான் குமாரியின் கணவன் அருண். மேற்கொண்டு ஆக வேண்டியதை அனைத்தும் முடித்துக் கொண்டு அம்மாவின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.
ஸ்வேதாவின் அப்பா, அம்மாவின் உடல் வந்தது கூட தெரியாமல் தன்னுடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து அம்மாவின் இறப்பைக் கண்டு அழுது கொண்டிருந்தார்கள்.
அம்மா இறந்து விட்டார்கள் என ஸ்வேதா அப்பாவிடம் சொன்னதற்கு அப்படியா என கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார். அனைத்தும் முடிந்து நல்லடக்கம் செய்த பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டார்கள்.
வீட்டிற்கு வந்த உறவினர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டார்கள். அதன் பிறகு சுவேதா, அண்ணி இரண்டு பேர் அண்ணன் இரண்டு பேர் என அனைவரும் அப்பாவை யார் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது.
ஸ்வேதா அமெரிக்காவில் இருப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று ஒதுங்கி விட்டாள். பணம் கூட ஏதாவது தருகிறேன் யாராவது பார்த்துக் கொள்ளுங்கள் என்றாள்.
மூத்த அண்ணன் அருண் பெங்களூரில் அப்பாவை எல்லாம் அழைத்துக் கொண்டு போய் வைத்திருக்க முடியாது. மருத்துவமனை கூட அருகில் கிடையாது. இரண்டு பேரும் வேலைக்கு செல்வதால் எங்களால் பார்த்துக் கொள்ள முடியாது என சொல்லி விட்டான்.
உடனே நித்யா என்னால் உங்க அப்பாவை பார்த்துக் கொள்ள முடியாது. நல்லா இருக்கும் காலத்தில் என்னை எவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள் உங்க அம்மாவும் அப்பாவும். இவர்கள் செய்த கொடுமையை மறக்க வேண்டும் என நினைத்தால் கூட மறக்க முடியவில்லை என்றாள்.
நீங்கள் தானே மாடியில் இருக்கின்றீர்கள் கீழே தனியாக தானே அப்பா இருக்கிறார்கள். நீங்கள் சாப்பாடு மட்டும் கொடுத்தால் போதும் என்றாள் ஸ்வேதா.
நான் என்ன ஆங்கிலத்திலா சொல்கிறேன், தமிழில் தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன், என்னால் பார்த்துக் கொள்ள முடியாது. நீங்கள் அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வேண்டுமானால் போங்கள். அங்கே நேரத்துக்கு நல்ல சாப்பாடு, தூக்கம், மருத்துவ சிகிச்சை அனைத்தும் இருப்பதால் நீங்களும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நிம்மதியாக இருப்பீர்கள் என்றாள் நித்யா.
வேற வழி இல்லாமல் அப்பாவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு அப்பா பயன்படுத்தும் சில பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டு அப்பாவை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் முதியவர் இல்லத்தை நோக்கி சென்றார்கள்.
அப்பாவிற்கு நினைவுகள் கொஞ்சம் தவறியதால் ஏதும் அறியாமல் குதூகலத்துடன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார், தன்னை முதியவர் இல்லத்தில் விடப்போவது தெரியாமல்!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings