2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஸாரி ஜகத், நான் ஒன்னு கேட்கறேன் தப்பா நினைச்சுக்காத. நான் உன்கிட்ட பேசுவதிலும் பழகறதிலும் ஏதாவது…”, சிறிது தயக்கத்துடன்… “உன்ன கவர்ற மாதிரி நடந்துகிட்டேனா?”
“இல்ல யஷ்வி, நீ என்கிட்ட கண்ணியமான நட்போட தான் பழகுற. நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னதனால நீயும் என்ன தப்பா நினைக்காதே” என்றான் ஜகத் சிறிது மெல்லிய குரலில்.
“அப்புறம் எப்படி உனக்கு என் மேல லவ் வந்தது? இந்த கல்லூரியில சேர்ந்ததிலருந்து நாம நாலு வருஷமா ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். இந்த அஞ்சாவது வருஷம் படிப்போட நாம இந்த மருத்துவக் கல்லூரியை விட்டு பிரிய போறோம. ஓ… அதனால…. இப்போ உனக்கு என் மேல லவ் வந்ததா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு எனக்கு” என்றாள் புருவத்தை உயர்த்தியபடி யஷ்வி.
“எனக்கும் கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது”
இரண்டு நாள் முன்னாடி…
“டேய் ப்ரஜேஷ்… என்னடா இவ்வளவு ரோஸஸ் வாங்கி வெச்சிருக்க?” என்று ஆர்வமாக கேட்டான் ஜகத்.
“என் லவ்வருக்கு ப்ரெசன்ட் பண்ணத்தான் காதலர் தினம் வருதே. ஆமா… நீ இந்த வருஷமாவது யஷ்விகிட்ட ப்ரபோஸ் பண்ணப் போறியா இல்லயா?” என்றான் ப்ரஜேஷ்
“எதுக்கு? அவ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். தட்ஸ் ஆல்” என்றான் ஜகத்.
“ஓ…. அதனால்தானோ. தூக்கத்துல அடிக்கடி அவ பெயரைச் சொல்லி புலம்பறியா?” என்று கேட்டான் ப்ரஜேஷ் சிரிப்புடன்.
“ஏய்… நெஜமாவே சொல்றேனா? சும்மா என்னைக் கலாய்க்கிறியா?” ஆச்சர்யமாக கேட்டான் ஜகத்.
“சரி, நீ காதலர் தினத்தன்று அவகிட்ட ப்ரபோஸ் பண்ணிப்பாரு. அப்பத் தெரியும் உன்னோட மனசுல அவளும், அவ மனசுல நீயும் இருக்கறது” என்றான் ப்ரஜேஷ்.
ஜகத் இதை சொன்னதும், யஷ்வி சிரித்தாள். ஜகத்தும் சேர்ந்து சிரித்தான்.
“நாம எப்போதும் சேர்ந்து சுத்தறோமாம் ஒண்ணாவே உட்கார்ந்து படிக்கறோமாம், அதனால முடிவு பண்ணிட்டாங்க” என்றான் ஜகத் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு.
“அது சரி, அவங்க சொல்றது இருக்கட்டும். நீ என்ன நினைக்கற?” அவன் கண்களை கூர்ந்துப் பார்த்துக் கேட்டாள்.
“நான் உன்னை என் நெருங்கிய சிநேகிதியாகத் தான் நினைக்கறேன். பிரஜேஷ் கம்பல் பண்ணினதனால உன்கிட்ட அப்படி பேசினேன். ஜஸ்ட் லீவ் இட்.. ஏன்? லவ்னா அன்பு தானே? நான் உன்னை என் நண்பியா செலுத்தறேன்” என்று அவசரமாக பதிலுரைத்தான்.
மனதில் அவள் நட்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்துடன், அவள் மேலுள்ள தன் காதலை மறைத்து.
“ஓ… ஃபன்னி. சரி விடு. நாளைக்கு பீடியாட்ரிக்ஸ் ப்ளெட் செல்ஸ் பத்தி ப்ராக்டிக்கல் இருக்கு. வா, ப்ரிப்பேர் பண்ணலாம்” என்று மரத்தடியில் அமர்ந்து புத்தகத்தை விரித்தாள்.
இருவரும் டிஸ்கஷனில் ஈடுபட்டனர்.
மருத்துவப்படிப்பில் இறுதியாண்டு முடிந்ததும், “ஜகத்… டேக் கேர். எம்.டி நல்லாப் பண்ணு, வீக்லி ஒன்ஸ் எனக்கு அப்டேட் பண்ணு” என்று அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கப் போகும் ஜகத்தை உற்சாகப்படுத்தி வாழ்த்தினாள் யஷ்வி.
“தேங்க்யூ யஷ்வி, நீயும் பீடியாட்ரிக்ஸ் நல்லா பண்ணு. டெய்லி கால் பண்ணு ஓ.கே… கிளம்பறேன்.”
இருவரின் கண்களிலும் நீர் தளும்பியது.
அன்றிலிருந்து இரண்டு மாதம் தொடர்ந்து வீடியோ காலில் பேசினர். பின்பு இருவருக்கும் நேரம் ஒத்துப் போகாததால் வெறும் ஃபோன்காலாக மாறியது. அதுவும் சிறிது சிறிதாகக் குறைந்தது.
வாரம் ஒருமுறை பேசுவது, மாதம் ஒருமுறை ஆனது. இருவரும் தங்கள் படிப்பிலும், பிராக்டீஸிலும் பிஸி ஆயினர்.
“யஷ்வி கண்ணு, உனக்கு மாப்பிள்ளைப் பார்க்கலாம்னு இருக்கேன். வாட் யூ திங்க் அபௌட்?” என்று தன் அப்பா கேட்டதும்
சிறிது நேரம் யோசித்துவிட்டு, “ம்… ஓ.கே. குட் டிஸிஷன்… கோ…அகெட்…” என்றாள்.
இரண்டு வாரத்தில் மேட்ரிமோனியல் ஈமெயிலில் ஒரு வரன் இவளை ஓ.கே என்றது.
“ஹாய், ஐ’யாம் டாக்டர் ரிஷப்….மை இன்ட்ரஸ்ட் இஸ்..”
யஷ்வியும், ரிஷப்பும் ஒரு மணிநேரம் ஸ்கைப்பில் பேசினர். யஷ்வி நிறைய சிரித்தாள்.
“அப்பா, ஹீ இஸ் லுக் ஸ்மார்ட் பா. நல்லா பேசறார். எனக்கு சரியா மேட்ச் ஆகும்னு நினைக்கறேன்…பா..”
“ஓ.கே..மா. அவங்ககிட்ட சொல்லிடறேன். நேர்ல பார்த்தும் பேசலாம். உன் மனசுக்கு பிடிச்சா மேற்கொண்டு ஆரம்பிக்கலாம்” என்றார் மகிழ்ச்சியாக.
அன்று இரவே ஜகத்திற்கு ஃபோன் செய்தாள் யஷ்வி.
“ஓ…வெரிகுட்…வெரிகுட்….உனக்குப் பிடிச்சிருக்கா…?” கேட்டான் ஜகத் சந்தோஷம் குரலில்.
“ம் ..நல்லா பேசறார், உன்னை மாதிரி சோஷீயலா, காமெடியா. ஓ.கே அப்புறமா நேர்ல பார்த்துட்டு சொல்றேன்” என்று யஷ்வி சொன்னாள்.
மறுநாள் சாயங்காலம். அந்த ரெஸ்டாரண்டின் அரையிருட்டில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர் ரிஷபும், யஷ்வியும்.
“யூ லுக் ஸோ ஸ்மார்ட் இன் திஸ் ஃபுல் ஃபிராக்” என்று பாராட்டினான் ரிஷப்.
“ஓ…தேங்க்யூ…” என்று வெட்கப்பட்டாள்.
“உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்? உனக்கு ஸ்டார்ட்டர் என்ன ஆர்டர் செய்ய?” என்று அவளிடம் ஒவ்வொன்றாக கேட்டு கேட்டு ஆர்டர் செய்தான்.
தனக்கு விருப்பமானவையும் தனியாக ஆர்டர் செய்தான். அவனது அந்த மனப்பான்மை யக்ஷ்விக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒற்றை சிவப்பு ரோஜாவை எடுத்து அவள் முன் நீட்டினான்.
“இன்று காதலர் தினம். நமக்கு கல்யாணம் ஆக இன்னும் மூன்று மாதம் இருக்கிறது. அதுவரைக்கும் நாம் காதலர்கள்.என்ன சரியா? என்று சொல்லிவிட்டு சிரித்தான்.
ஜகத் தன்னிடம் ரோஜா மலரை நீட்டிய காட்சி யஷ்விக்கு ஞாபகம் வந்தது. மனதை என்னவோ செய்தது.
அவள் வாங்க தயங்குவது கண்டு, “ஓகே பரவால்ல.” என்று சொன்னவாறே ரிஷப், பூவின் நீளமான காம்பை உடைத்து விட்டு “தலையில் வைத்துக் கொள்” என்ற டேபிளில் வைத்தான்.
அதன் பிறகு அவளுக்கு அவன் பேசுவது ஒன்றும் சரியாக காதில் விழவில்லை. உணவு சரியாக உட்கொள்ள முடியவில்லை. வயிற்றை என்னமோ செய்தது. சாப்பிட்டு முடித்து அருகிலிருக்கும் ஜவுளிக்கடையில் பிடித்த உடையை செலக்ட் செய்ய சொல்லிவிட்டு காத்திருந்தான்.
யஷ்விக்கு கொஞ்சம் மனம் ஆசுவாசமானது. பிடித்த ஆடை எடுத்தாள். மகிழ்ச்சி மீண்டது. இருவரும் லிஃப்ட்டில் கீழே இறங்கும்போது தனிமையும், தனக்கானவள் என்கிற உரிமையும் உணர்ச்சியை உந்த ரிஷப் சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவளும் தன்னை மறந்து உணர்ச்சிவசப்பட்டு, பட்டென்றுகன்னத்தில் அறைந்தாள். அடுத்த நிமிடம் இருவரும் என்ன பேசுவது? என்ன செய்வது? என்று தடுமாறினர்
அவன் ‘ஸாரி’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென காரில் ஏறினான். அவள் வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை இருவரும். இருவருக்குள்ளும் மனதில் அலையடித்தது வெவ்வேறு திசையில்.
வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக தன்னறைக்கு வேகமாக சென்று லேப்டாப்பை ஆன் செய்தாள், ஜகத்திடம் அத்தனையும் கொட்டி விட வேண்டும் என்று. மனதில் பதுங்கியிருந்த ஏக்கம் வெடித்துச் சிதறி அவளை ஆக்ரமித்தது.
அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவள் காமிராவை ஆன் செய்த உடனே ஜகத் தோன்றினான். தான் அழைக்கும் முன்னே தனக்காக காத்திருப்பதைக் கண்டு ஆச்சர்யமானாள்.
இருவரும் ஒருவரையொருவர் ஆசையோடு பார்த்துக் கொண்டனர். இருவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. மனதும் மனதும் பேசிக்கொண்ட பாஷை அவர்களுக்கே புரியவில்லை.
சிறிது நேரத்தில் ஜகத் சுதாரித்துக் கொண்டு, “யஷ்வி என்னாச்சு? எனிதிங் ராங்?” என்று கேட்டான்.
யஷ்வி, விசும்பலை கட்டுப்படுத்திக்கொண்டு நடந்ததைக் கூறினாள்.
“நீ அவனை அக்செப்ட் பண்ணியதால் தானே அந்த உரிமை எடுத்துகிட்டான். அதான் “ஸாரி “கேட்டான்…ல” என்றான் ஜகத்.
“ம்…எஸ்….யூ ஆர் ரைட் , ரிஷப் மேல மிஸ்டேக் கிடையாது, ஆனா…நான்தான் இத்தனை நாள் புரியாம இருந்துட்டேன். ரிஷப் என்னைத் தொட்டதும், என்னை என் ஜகத்தை தவிர வேற யாரும் நெருங்க கூடாதுன்னு ஒரு குரல் என் அடி மனசிலேர்ந்து பெரிசா கத்திச்சு. அப்பத்தான் உணர்ந்தேன். நான் உன்னை காதலிக்கிறேன்னு. நட்பு காதலா மாற முடியாது. நண்பன் காதலனா இருக்க முடியாதுன்னு நான் பிடிவாதமாக இருந்ததை ரிஷப் உடைச்சுட்டான்” என்றாள் அழுகையினூடே.
“நான் உன்னிடம் நிஜமாகவே என் காதலை அன்று சொன்னேன். ஆனா.. உன்னுடன் நட்பாவது தொடரட்டுமே…ன்னு தான் என் மனதை மூடினேன். இன்னிக்குத்தான் முழுசா உணர்ந்தேன். இங்கே எனக்கு லவ் ப்ரபோஸ் வந்தது. என்னால…. அந்த இடத்துல உன்னைத் தவிர வேற யாரையும்… ஏத்துக்க முடியல…” கண்களைத் துடைத்துக் கொண்டான் ஜகத்.
மனம் நெருங்கிய நட்பு தான் ஆழமான காதலின் அஸ்திவாரம் என இருவருக்கும் அன்றைய காதலர் தினம் உணர்த்தியது.
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings