in ,

இன்றே தொடங்குவானா பாலகுமாரா? (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

கடந்த காலத்தின் தோல்விகளையும், கசப்புகளையும், சறுக்கல்களையும் இறுக்கமாய் மனதினுள் வைத்துக் கொண்டு, அவற்றைப் பற்றியே திரும்பத் திரும்ப அசை போடுவதை விடுத்து, நிகழ் காலத்தை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நம்பிக்கையுடன் சந்தித்தால், எதிர்கால நந்தவனத்தில் ஏற்றப் பூக்களும்… உயர்வுக் கனிகளும்… ஏகமாய்ச் செழிக்கும், என்பது அனுபவங்கள் கூறும் அற்புத நெறியாகும்..

      சிலர், நிகழ் காலத்தில் வாய்க்கும் நல் வாய்ப்புக்களை, நம்பிக்கையோடு  பயன்படுத்தாமல் விட்டு விட்டு, எதிர்காலத்தில் எப்போதோ கிடைக்கக் கூடிய ஏதோ ஒன்றின் மீது ஈடுபாடு கொண்டு அதை அடையும் முயற்சியில் மூர்க்கத்தனமாய் ஈடுபட்டு, கடைசியில் எல்லாவற்றையும் இழந்து விட்டு நிராயுதபாணியாய் நிற்பர். எதிர்காலக் கனவுகளில் மூழ்கிக் கொண்டு நிகழ்காலத்தைக் கழிப்பது பெரும் தவறில்தான் முடியும்.  உண்மையில். நிகழ் காலக் கடமைகளை எதிர்காலத்திற்கு தள்ளிப் போடுவதன் மூலம், அவர்களுக்கு அக்கடமைகளைச் செய்ய மனமில்லை என்பதை அவர்களே தெளிவுபடுத்தி விடுகின்றனர்.

      தள்ளிப்போடுவது என்பது அவநம்பிக்கையான மனப்பான்மை, சோம்பேறித்தனம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றின் வெளிப்பாடாக இருக்கலாம். தள்ளிப்போடுவதால் முன்னேற்றம் தடைபடும்.

தள்ளிப்போடுவதால் ஏற்படும் விளைவுகள்

முன்னேற்றம் தடைப்படும்

தோல்வி ஏற்படும்

மனச்சோர்வு ஏற்படும்

வேலை இழப்பு ஏற்படும்

பயன் இல்லாமல் வேலைகள் இருக்கும்

பின்னாளில் வருந்துவோம்

வேலையைத் தள்ளிப்போடுவதை எப்படிச் சமாளிப்பது?

பெரும்பாலான பழக்கவழக்கங்களைப் போலவே, காலம் கடத்தும் பழக்கத்தையும் கடந்து செல்ல முடியும்.

காலத்தைக் கடத்தும் பழக்கத்தைச் சமாளிக்கத் தொடங்குவதற்குமுன் அதற்கான காரணங்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, விருப்பமில்லாத காரியங்களைத் தள்ளிப்போடுவதற்குப் பதிலாக அவற்றை விரைவில் முடித்து விட்டால் மற்ற பணிகளில் கவனம் செலுத்தலாம்.

பட்டியல்கள், பயனுள்ள அட்டவணைகளை உருவாக்குவதால் பணிகளைச் சீரமைக்க முடியும். எந்தெந்தப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம், எவற்றுக்கு காலக்கெடு உள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் எளிதில் பணிகளைக் காலம் கடத்தாமல் உரிய நேரத்தில் முடிக்க முடியும். “நாளை என்பது வேளை தவறும்” எனும் அனுபவ மொழியை அறிந்து கொண்டு இன்றைய கடமைகளை இன்றே முடிப்பவர்கள், சற்றும் சந்தேகமின்றி எதிர்காலத்தில் மகுடம் சூடுவர்.

மக்கள் ஏன் தள்ளிப்போடுகிறார்கள்?

உளவியலாளர்களின் கூற்றுப்படி, மக்கள் தள்ளிப்போடுவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில சோம்பேறித்தனத்திற்கான சாக்குப்போக்குகள்.

உளவியலாளரும் ‘The Now Habit: A Strategic Program for Overcoming Procrastination’ என்ற புத்தகத்தின் ஆசிரியருமான நீல் ஃபியோர், தள்ளிப்போடுபவர்களை கீழ்கண்டவாறு பிரிக்கிறார்.

பரிபூரணவாதி: 

தவறுகளைச் செய்து விமர்சிக்கப்படுவார்களோ என்று பயப்படுபவர்.  இந்த நபர் பணியை தாமதப்படுத்துகிறார், அதிகமாகச் சிந்திக்கிறார், அதிகமாக சுயவிமர்சனம் செய்கிறார். நேரத்தை திறம்பட நிர்வகிக்க முடியாமல், இந்த வகையினர் பணியைக் கைவிடுகிறார்கள் அல்லது கடைசி நேரத்தில் அதை முடிக்க விரைகிறார்கள்.

பயம் நிறைந்தவர்:

தான் அந்த வேலையைச் செய்யத் தயாராக இல்லை என்று பயப்படுகிறார், இதனால் தாழ்ந்தவர் அல்லது திறமையற்றவர் என்று வெளிப்படும் அபாயத்தைத் தவிர்க்க அதைச் செய்வதைத் தொடர்ந்து தவிர்க்கிறார். இந்த வகை பயம் மற்றும் பதட்டத்தை அனுபவிக்கிறது மற்றும் தொடர்பில்லாத பிற பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தப்பிக்க முயல்கிறது.  இருப்பினும், காலக்கெடு தவிர்க்க முடியாமல் நெருங்கி வருவதால், இந்த தப்பித்தல் குறுகிய காலமாகும். பதட்டம் அதிகரிக்கிறது மற்றும் எதிர்மறையின் ஒரு தீய சுழற்சி கட்டமைக்கப்படுகிறது.

மன அழுத்தம்: 

ஒரு பணியை முடிப்பதை தாமதப்படுத்துவதற்கான உண்மையான காரணம் இதுதான். செய்ய வேண்டியது மிக அதிகம். அத்தகையவர்களுக்கு எது முக்கியம், எது அவசரம் என்பதை வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகி, உறைந்து போகிறது. எங்கு தொடங்குவது என்று முடிவு செய்ய முடியாமல், அவர்கள் எதையும் செய்வதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை, ஏனெனில் இது அதிகரித்த மன அழுத்தம் மற்றும் உளவியல் ‘எரிச்சலுக்கு’ வழிவகுக்கும்.

சலிப்பு: 

சில நேரங்களில் பணி சவாலானதாகவோ அல்லது உற்சாகமாகவோ இல்லாததால் தவிர்க்கப்படுகிறது. பணியின் சோர்வு மற்றும் மனதை மரத்துப்போகச் செய்யும், சாதாரணமான ஏகபோகம் அந்த நபரைத் தள்ளிவிடுகிறது.

      சில வாய்ச்சொல் வீரர்கள் “எதிர்காலத்தில் நான் இதைச் சாதிப்பேன்!…அதைச் சாதிப்பேன்!” என்று வீராவேசமாய்ப் பேசிக் கொண்டு திரிவதை நாம் பார்த்திருக்கிறோம்.  அது தவறில்லைதான்.  ஆனால், அவர்கள் தாம் சாதிப்பதாகக் கூறும் செயல்களுக்கான திட்ட வடிவங்களை இன்றே தொடங்கி…இன்றிலிருந்தே உழைத்தால்தானே முடியும்?… என்பதை அறவே மறந்து விடுகின்றனர்.   “அட… அந்த நேரத்தில் ஆரம்பிப்போமே!” என்று காலம் கடத்தி விட்டு, இறுதியில் தோல்வியைத் தோளில் ஏற்றிக் கொண்டு திரிவர்.

      எதிர்காலம் என்பது எல்லோருக்கும் மனதிற்குள் மட்டுமே உள்ள விஷயம். ஆனால், நிகழ் காலம் மட்டுமே எல்லோராலும், நேருக்கு நேர் காண முடிகின்ற விஷயம்.. எதிர்கால வாழ்வையே நிகழ் காலம்தான் கணிக்கின்றது. அதனாலேயே இந்த நிகழ் காலம் மிக மிக அவசியமானதாகின்றது.  ஆம்!… இந்த நிகழ் காலத்தில் எந்த அளவிற்கு ஆர்வத்துடனும்… அர்ப்பணிப்புடனும்…. முயற்சியுடனும்… ஒருவன் செயல் படுகின்றானோ அந்த அளவிற்குத்தான் அவன் எதிர்கால வாழ்வே அமையும்.

      சிலர் எதிர்காலத்தை எண்ணி அளவுக்கு மீறி கவலைப் படுவர் அது அவர்களின் அறியாமையே!… எப்படியென்றால்… நிகழ் காலம் அவர்களின் கையில் அளிக்கப் பட்டுள்ளது. அதை சரியாகப் பயன் படுத்த முனையாமல் எதிர்காலத்தைப் பற்றி கவலைப் படுவதை அறியாமையின் வெளிப்பாடென்று சொல்லாமல் வேறென்ன சொல்லுவது.

      மனித வாழ்க்கையென்பது, பிள்ளைப் பருவம்… இளமைப் பருவம்… முதுமைப் பருவம் என்ர மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது.  இதில் பிள்ளைப் பருவத்தில் நம்மை  பெற்றோர்கள் கவனிக்கிறார்கள்.  முதுமைப் பருவத்தில் நம்மை நம் பிள்ளைகள் கவனிக்கிறார்கள்.  இடைப்பட்ட இளமைப் பருவத்தில்தான் நாம் நம் எதிர்கால வாழ்வைத் தேட வேண்டும். குறிக்கோள்களை வகுத்துக் கொள்ள வேண்டும், திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

அறிஞர்களும், சான்றோர்களும் பிறக்கும் போதே அவ்வாறு பிறந்திடவில்லை. தாம் வளர… வளர எதிர்கால ஆசைகளையும், திட்டங்களையும் வளர்த்துக் கொண்டு, அதை அடையும் முழு நம்பிக்கையோடு வாழ்க்கையை தொடர்ந்தனர்.  தொடர்ந்து வெற்றியும் கண்டனர்.

திட்டம், தன்னம்பிக்கை, விடா முயற்சி… இவைகளின் கூட்டணிதான் எதிர்காலத்தில் வெல்லும்!.. வாழ்க்கைத் தேர்தலில்.

(முற்றும்)      

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாக்கினில் இனிமை (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    தூய்மை இந்தியா (சிறுகதை) – மணிராம் கார்த்திக்