2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பாஸ்கர் காலை 6 மணிக்கே பெரியமேட்ல இருந்த தன் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டான்.இது வரை ஜெகநாதப் பெருமாள் கோவிலுக்குள்ளே போனதில்லை, பெருமாளும், கோவில் புளியோதரையும் ரொம்பவே விசேஷம்னு கேள்விப். பட்டிருக்கான்.
சந்தோஷமாய் பைக்கில் புறப்பட்ட பாஸ்கருக்கு அங்கே காத்திருந்த அபாயம் தெரியாது.
காலை நேரத்தில் ஓரளவு காலியாக இருந்த பூந்தமல்லி சாலையில், பாஸ்கரனின் ஹோண்டா சீறிப் பறந்தது. பூந்தமல்லி பைபாஸ் ஒட்டி வலது பக்கம் திருவள்ளூர் ரோடில் அனாயசமாக திரும்பி இடது பக்கம் இருந்த சங்கீதா ரெஸ்டாரன்டில் ஒரு நெய்ப் பொங்கல், ஸ்டிராங் காபி.நிதானமாய் வெளியே வந்து வில்ஸ் பில்டரை ரசித்து புகைத்தான்.ஹா இப்ப 2 மணி வரை தாங்கும். அந்த திருமழிசை நாயரை கழுவிப் பாக்க
தெம்புடன் பைக் புறப்பட்டது பாஸ்கரை சுமந்து. அங்கிருந்து 10 நிமிட தூரம்தான் ஆனாலும் காலி ரஸ்தா ஹோண்டாவுக்கு சவால் விட்டது,வேகம் 100 கி.மீ., அந்த சாலையோர ஜிம்மிக்கு ஹோண்டாவின் வேகம் பிடிக்காமல் குறுக்கே பாய்ந்தது, கட்டுப் பாட்டை இழந்த ஹோண்டா வலது பக்கம் திரும்பி டிவைடரை தாண்டி வலது சாலை கடந்து வயலில் பாய்ந்து அங்கிருந்த சதுரக் கிணற்றின் சுவற்றை முத்தமிட்டு படுத்தது .
இத்தனையும் சில நொடிகளில், பாஸ்கரின் நெத்தியில் சுவர் மோதியதில் ரத்தம், வலது கால் கொஞ்சம் ரிப்பேர். சுதாரித்து எழுந்த பாஸ்கர் கைக்குட்டையில் நெத்தி ரத்தத்தை துடைத்துக் கொண்டான்,
கொஞ்சம் நொண்டியவாறு பைக்கை நிமிர்த்தினான், அதிக சேதமில்லை போகலாம் என தீர்மானம் செய்தான். யாரும் பார்க்கவில்லை அந்த ஜிம்மிதான் தன் மொட்டை வாலை ஆட்டிக் கொண்டு சாலையிலிருந்து சந்தோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தது.
பாஸ்கர் கீழே குனிந்து கைக்கு கிடைத்த சிறு கல்லை எடுத்து அதை நோக்கி வீசினான் அது என்னவோ கொலையே விழுந்தது போல கத்திக் கொண்டு ஓடியது.வலியை மீறி சிரிப்பு வந்தது பாஸ்கருக்கு.
சொகுசாய் சுவரில் சாய்ந்து படுத்திருந்த வண்டியை நிமிர்த்தி சாலைக்கு கொண்டு வர நினைத்த போது கிணற்றின் பக்கச்சுவர் பக்கம் ஒரு சிவந்த கொலுசுக்கால், வித்யாசமான கோணத்தில் தெரிந்தது.
பைக்கை பக்கவாட்டு ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு கிணற்று சுவரை சுற்றி வந்தான், மறு பக்க சுவரை ஒட்டி அதை பார்த்து விக்கித்து கண் மூடிக் கொண்டான்.
சுமார் 14 வயது பெண் குழந்தை, வெறும் அன்டர் வேர் மட்டும், மற்றபடி பிறந்த மேனி, துணிகள் பள்ளி பை புஸ்தகங்களுடன். சுருட்டி பக்கத்தில் கிடந்தன.
அழகான முகம், சிவந்த இதழை ஒட்டி சிறு ரத்தத் துளி உறைந்து போய் , காதில் தங்க கம்மல்,கழுத்தில் மெல்லிய தங்க செயின், வயதுக்கேற்ற மார்பகங்கள், இடது மார்பிலிருந்து தொப்புள் வரை ரத்தக் கோடு சற்று ஆழமான காயம்தான். உயிர் போய் 4,5 மணி நேரமாவது இருக்கும் போல தோன்றியது இறுகிய சதைகளை பார்த்தால்.
பக்கத்திலிருந்த துணியை எடுத்து மூடினான் பாஸ்கர், கட்டுப்பாடின்றி கண்ணில் நீர் வழிந்தது.
தன் கை பேசியில் தினேஷை அழைத்தான், நடந்ததை கூறினான், அதிர்ந்து போன தினேஷ், பாஸ்கர் நீ நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் ரிபோர்ட் பண்ணு, பாப்போம் , நானும் வரேன் அங்கே. அவ்வளவுதான்,
நேரே வண்டியை தெருவுக்கு கொண்டு வந்தான், ஜிம்மி கூட நிலைமையை புரிந்தாற் போல மெளனமாய் பக்கம் வந்து வாலை ஆட்டியது.
போலீஸ் ஸ்டேஷன் பக்கம் தான் . இவன் போனப்ப ரெண்டு நைட் கான்ஸ்டபிள், ஒரு தலைமை காவலர் அவ்வளவுதான்.
தலைமை காவலரிடம் நடந்ததை சொன்னான், அவர் “எங்கே? ராவுத்தர் வயல் சதுரக் கிணறாண்டயா? அந்த பெஞ்சில உக்காரு சப் இன்ஸ்பெக்டரை கூப்படச் சொல்றேன்.”
பத்தே நிமிடத்தில் அவர் வந்தார் , ஒல்லியான தேகம் ஆனா முரட்டு மீசை.பெயர் நெஞ்சுல தெரிஞ்சது வைரவன். அவர் நேராக தன் இருக்கையில் அமர்ந்து தொப்பியை கழட்டி மேசையில் வைத்தார், யோவ் யாரையாவது டீ வாங்கியாரச் சொல்லு.
ரைட்டர் இதோ வருது சார், சொல்லும் போதே இரும்பு டீ தூக்கியில் 4 டீயுடன் பையன் வந்தான்.
டீயை மேசையில் வைத்து பாக்கெட்ல இருந்து சிகரட் பற்ற வைத்தார்.ஒரு சிப் டீ, ஒரு தம் சிகரெட், வினோதமான பழக்கம்.
தலைமை காவலரை பாத்து யோவ் இப்ப வரச் சொல்லு அந்த ஆளை. பாஸ்கர் முன்னால வந்து நின்றதும் உக்காரக் கூட சொல்லலை.
“சொல்லுய்யா என்ன பண்ணினே? “
“சார் நான் ஒண்ணும் பண்ணலே, ஒரு பெண்ணோட டெட் பாடியை வழில பாத்தேன் அதை ரிபோர்ட் பண்ண வந்தேன்.”
“எங்கே? ஜீப்பை எடுய்யா போய் பாக்லாம் இந்த ஆளு என்ன பண்ணி வச்சிருக்கான்னு.”
“பாஸ்கர் நான் எதவும செய்யலைன்னதை காதிலயே போட்டுக்காமல், நீயும் கூட வா என் கண் முன்னாலயே இருக்கணும் நான் சொல்ற வரை, புரியுதா.”
தலைமை போலிஸ், வைரவன், பாஸ்கர் மூணு பேரும் அந்த கிணற்றை அடைந்தனர்.அந்த உடலை , ஒரு குச்சியால் துணியை விலக்கி பாத்தார் வைரவன், முகம் மாறியது,
திரும்பி பாஸ்கரை முறைத்தார்,”என்ன நடந்தது உண்மையை சொல்லு, யாரு இது , என்ன பண்ணினே கெடுத்துட்டயா? முரண்டு பண்ணிச்சா? கொன்னுட்டயா?”
பாஸ்கர் சற்றும் எதிர் பாராதப்ப அவர் கை அவன் கன்னத்தில் வெடித்தது.அவருடைய குச்சி உடம்பில் இவ்வளவு பலம் பாஸ்கர் எதிர் பார்க்கவில்லை.
அவனுடைய பாடி பில்டர் தேகம் வைரவனுக்கு பிடிக்கவில்லை, அடுத்த அறை விழு முன் சுதாரித்து பின் வாங்கினான்.
கூட வந்த காவலரை பாத்து,”இந்த ஆளை லாக்அப்ல கொண்டு போய் வை, ஜாக்கிரதை விலங்கு போட்டு கூட்டிட்டு போ , நான் மத்த ஏற்பாடுகளை பண்ணிட்டு வந்து கவனிக்கிறேன் இவனை.”
அடுத்த பத்தாவது நிமிஷம் திருமழிசை போலீஸ் ஸ்டேஷன் லாக் அப்ல.தினேஷ் சாரை கான்டாக்ட் பண்ண கூட வழி இல்லை, கைபேசியை பிடுங்கி வைத்து விட்டனர்<stro
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings