in ,

இனி இல்லை இந்தக் கொலை (குறுநாவல் – பகுதி 2) – சுஸ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1

லதா சற்று நேரம் ஃபோனையே பார்த்தாள், அலுப்புடன் ஒரு ‘ச்’ கொட்டி விட்டு அதை அப்போதே   மறந்து விட்டாள்.

இது நடந்து ஒரு நாலு நாள் இருக்குமா? இன்னிக்கு பாஸ் உள்ளே 11 மணி அளவில்தான் வந்தார்   ஆபீசுக்கு. நேராக தன் அறைக்கு செல்லும் முன், “ லதா கொஞ்சம் உள்ளே வா”

தான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு பாஸை பின் தொடர்ந்தாள் லதா.

தினேஷ் அன்றைய தினத்தந்தியில் முகத்தை புதைத்தவாறே, “ லதா நீ என்ன பண்றே இந்த மயிலாப்பூர் பெண் மர்டர் சம்பந்தமா வந்த எல்லா செய்திகளையும்   தமிழ், இங்லீஷ் ரெண்டும் கட் பண்ணி பைல் போட்டு கொண்டு வா, ஒரு மணி நேரம் உனக்கு.   அப்படியே எனக்கு ஒரு மசாலா டீ, வில்ஸ் பாக்கெட் சோட்டு கிட்ட சொல்லிடு. பாஸ்கரையும்,   பாண்டிராஜையும் உடனே வரச் சொல்லு. தட்ஸ் ஆல் ஃபார் நவ் , யூ கேன் கோ.”

லதாவை பற்றி கொஞ்சம் பாப்போமா, லதாவுக்கு இப்ப 28 வயசு, இன்னும் திருமணம் ஆகலை,  அதற்கு பல காரணங்கள் ஏழ்மை உட்பட. ரொம்ப அழகுனு சொல்ல முடியாது, ஆனாலும்   கவர்ச்சியான பெண். தினேஷ் கிட்ட வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷமாகிறது, மெதுவாக இந்த  வேலையில் பிடிப்பு வந்து விட்டது.

ஆண்கள்னாலே கொஞ்சம் பயம், கொஞ்சம் வெறுப்பு. அதற்கும் காரணங்கள் பல உண்டு. 15 வயசில் ரகு அங்கிள், 16 வயசில் தாய்மாமன், 18 வயதில் பாலு மாமா தூரத்து சொந்தம், 22 வயதில் மாடில குடி இருந்த பேச்சுலர் பையன் சுரேஷ் ,லதாவும் கூட அவனை விரும்பினாள்,   வீட்டில் யாரும் இல்லாத நேரம் மாடிக்கு போன லதாவை கட்டிலில் தள்ளி ஆழமாய்   ஆக்ரமிக்கும் வரை. விபத்துதான், யாரிடம் சொல்லலை, கையில் கிடைத்த பீர் பாட்டிலால்   தலையில் தாக்கி விட்டு ஓடி வந்தாச்சு.

அவன் பைக் ஆக்சிடென்ட்னு சொல்லி தலையில் கட்டு போட்டுக் கொண்டு நாலு நாள் திரிந்தான்   கடைசியில் போன இடம் தெரியலை. அதற்கு பிறகு ஆண்களை நினைக்க கூட பயந்தாள்.

ஆனால் இந்த பெங்காலி பாஸ் தனிப் பிறவி, இந்த ரெண்டு வருஷத்தில் தலை நிமிர்ந்து பாத்தது   கூட இல்லை. திட்டினா கூட மரியாதையாகத்தான்.மெதுவாக இந்த பெங்காலி மனசை   ஆக்ரமிக்கிறானோ? ஏன் இந்த ஆள் இது வரை கல்யாணம் பண்ணலை?காதல் தோல்வியோ? நினைவுகளை தட்டி விட்டு வேலையில் புகுந்தாள் ஒரு மணி நேரத்தில்   பாஸுக்கு ஃபைலை கொடுக்கணுமே.

ஒவ்வொரு பேப்பரா எடுத்து அழகா கட் பண்ணி A4 ஷீட்ல ஒட்டினாள்.பன்ச் பண்ணி ஃபோல்டரில்   போட்டாள் அடுத்த 50வது நிமிஷம் ஃபோல்டர் தினேஷோட குப்பை டேபிள் மேல்.

புன்னகையோட நிமிர்நத தினேஷ் லதா உட்கார்னான், இது வரை இப்படி சொன்னதில்லை.  புடவையை சரி செய்து கொண்டு எதிரில் பவ்யமா உக்காந்தாள் லதா.

இந்த ஃபோல்டரில போட்ட செய்திகள்ல இருந்து ஏதாவது ஐடியா வருதா லதா? ஏன் அந்த பள்ளி   குழந்தை கொல்லப் படணும். லஸ்டா, காதல் மறுப்பினால் வந்த கோபமா எது லதா?  அந்த அழகான குழந்தை முகம் பாத்தா கேடு செய்ய எப்படி மனம் வரும், ஒரு வேளை   சைக்கோபாத்தா? ஏதாவது தோணுதா லதா உனக்கு?

லதா,” சார் இது லஸ்டுக்காக இல்லை போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் ‘unaffected private parts’ கிளியரா சொல்லுது, காதல் மறுப்புன்னா பையனும் சின்னவனா இருக்கணும் ஆனா   தாக்கப் பட்ட விதம் கூர்மையான ஆயுதம் தொப்புளில் இருந்து தொண்டை வரை கிழிச்சு   ரத்தம் வீணாயிருக்கு, உங்க கடைசி எண்ணம் சரியாக இருக்கலாம்.

தினேஷ் சிலாகித்து லதாவை பார்த்தான் சிகரெட்டை ஆழமாக இழுத்து புகை விட்ட பின்  “குட் லதா யூ ஆர் ஸ்மார்ட்” சரி நீ போ பாண்டிராஜ் வந்தா உள்ளே அனுப்பு.

சார் என லதா தயங்கி நின்றாள்,

தினேஷ், “ என்ன சீக்கிரம் வீட்டுக்கு போகணுமா?,அட்வான்ஸ் ஏதும் வேணுமா? “.,

லதா , “ இல்லை சார் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.”

என்ன சீக்கிரம் சொல்லிட்டு போ நிறைய வேலை இருக்கு”

லதா தயங்கிய படியே ,” அது வந்து 3 நாள் முன்னால சாயந்தரம் நீங்கல்லாம் போனப்பறம் ஒரு போன் வந்தது உங்களை கேட்டு, உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்.ரிகார்ட் பண்ணி வச்சிருக்கேன்”,

தினேஷ் “ சரி விடு யாராவது நாய்க்குட்டி காணோம்னு பண்ணி இருப்பான்.”

லதா, “ இல்லை சார் இந்த பெண் கொலையுண்ட சுசிலாதான்னு நினைக்கிறேன்”,

ஒரு நிமிடம் பைலை டேபிளில் விசிறி விட்டு லதாவின் முகத்தை பார்த்தான் தினேஷ், முகம் சிவந்தது,” ஸ்டுபிட், இடியட் கொண்டு வா அந்த ரிகாரடிங்கை யூ ஃபூல்”

பயந்து வெளியே ஓடினாள் லதா

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மூக்கு நுனியில் வாழ்க்கை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 9) – தி.வள்ளி, திருநெல்வேலி