in ,

ஐ லவ் மை மம்…! (சிறுகதை) – சத்யநாராயணன்

எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அவள் பெயர் கோமதி . . அவள் தேச பக்தி நிறைந்தவர் . அவள் பள்ளியில் படிக்கும் போதே தேச பக்தையாக இருந்தார் . காந்தி சூட்டு கொல்லபட்டதும் கோவையில் ஒரு பெரிய மைதானத்தில் அரை மணி நேரம் வீர அஞ்சலி

உரையை செய்தவள் . எவ்வித தயாரிப்பு இன்றி வீர உரை செய்தவர் .உரை முடிந்த்தும் பள்ளி சரித்திர ஆசிரியர் பானுமதி அம்மாவை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து உள்ளார் . என் அம்மாவின் பேச்சு மிக சிறந்த வீர அஞ்சலி உரையாக இருந்து உள்ளது. இதன் பிறகு அந்த கால வாலிபர்கள் அம்மாவை

” லவுட் ஸ்பீக்கர் ” என பட்டம் சூட்டி கலாட்டா செய்வார்களாம் .S.S.L.C பரிட்சையில் பேப்பரில் நம்பர் வார வில்லை. வீடே சோகத்தில் இருந்த போது ….

மறு நாள் …..

” தவறுக்கு வருந்துகிறோம் .

40694 எண்உடைய மாணவர்

தேர்ச்சி பட்டியலில் இல்லை .

40964 எண் உடையவர் தேர்ச்சி

பெற்றவர் “

என்ற செய்தியை உடைய தினசரியை சரித்திர ஆசிரியர் பானுமதி வீடு தேடி வந்து எண் அம்மாவை கட்டி பிடித்து தினசரியை காண்பிக்க மொத்த குடும்பமும் நிம்மதி பெற்றனர் .

அம்மா …!

அவள் ஒரு சிறந்த எழுத்தாளர் கூட .அவரது 3 சிறுகதைகள் அந்த காலத்தில் ” கல்கி “யில் வந்து உள்ளது பள்ளியில் படிக்கும் போதே பல நாடகங்களில் நடித்து பல பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வாங்கி உள்ளார் .அவர் எழுதிய சிறுகதைகளை  நான்  படித்தது இல்லை.நான்

சொல்ல மறந்து விட்டேன் . நான் ஊட்டியில் ஆரம்ப பள்ளியில் படிக்கும் போது ” காந்தி பிறந்த நாள் விழா ” ” சுதந்திர தின விழா போன்ற நிகழ்வுகளில் அவள் தான் சிறப்பு விருந்தினர் . பல முறை பள்ளியில்

சிறப்பாக பேசி உள்ளார்.

நான் கேட்டு இருக்கிறேன் .

எல்லாம் தாயாரிப்பு இல்லாமல் பேசியது . உரையை பாராட்டாதவர்கள் இல்லை. நான் ஒரு முறை பேச்சு போட்டியில் ” உப்பு சத்யாக்ரகம் “பற்றி பேசி 2-ம் பரிசு பெற்றேன் . இதில் விசித்திரம் என்னவென்றால் நான் என்

அம்மாவிடமிருந்து தான் பரிசு வாங்கினேன் .

என்னை பிரமிக்க வைத்த விஷயம் அவளது ” சுயசரிதை ” தான் .அவளது

சுயசரிதையில் முன் பக்கம் (பெரிய நோட் ) வண்ணத்தில் பாரதி புகை படம் . கீழே 2 மூவர்ண கொடிகள் ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ளது. நோட்டில் ஆங்காங்கே கோட்டை எழுத்துகளில் ” வந்தே மாதரம் “என எழுதி …அல்ல வரைந்து இருந்தார். திருமணம் முடிந்து ஊட்டி செல்லும்

போதும் , ஊட்டி பூங்கா , படகு இல்லம் , தொட்டபெட்டா சிகரம் பற்றி அவள் அழகாக வர்ணித்து இருந்தார். நான் படித்தது இல்லை. சில பக்கங்கள் மட்டுமே படித்து இருந்தேன்.

அவர் வர்ணனைகள் …

ஆசம் …!

அட்டகாசம் …!!

அருமையோ அருமை …!!!

ஒரு முறை குடும்ப தகராறு வந்த போது தனது சுயசரித நோட் புத்தகத்தை

மண் எண்ணை ஊற்றி எரித்து விட்டாள் . அதன் அருமை , பெருமை தெரிந்த நான் பதட்டம் அடைந்தேன் . ஓடி போயி தண்ணீர் ஊற்றி அணைத்தேன் .என்னால் 50% மட்டுமே காப்பாற்ற முடிந்த்து .

என் அம்மாவில் வாழ்கையில் …

பல கஷ்டங்கள் …

பல சோதனைகள் …

பல வேதனைகள் ….

எல்லாவற்றை பற்றியும் எழுதிய அவள் வாழ்க்கை பிரச்சனைகளால் எழுதுவதை நிறுத்தி விட்டார்.அவள் ஒரு தனி பிறவி. அவள் கடைசியாக என் மடியில் தான் உயிர் விட்டாள் . அவள் இறந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டன . அவளது

சுயசரிதை முதல் பாகமும் பின் கடைசி பாகமும் நான் தான் எழுத வேண்டும் .

வாழ்வில் என் லட்சியம்

அவளது சுயசரித்திரத்தை

பிருசுரிப்பதே …!

அவளுக்கு நிகர் அவளே …!!

எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மா…! அப்பா …!! (சிறுகதை) – சத்யநாராயணன்

    முட்டாள் (சிறுகதை) – சத்யநாராயணன்