in , ,

இதயமடி நீ எனக்கு (அத்தியாயம் 6) – பு.பிரேமலதா, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சனிக்கிழமை மாலை 5 மணி அறிவழகி சொன்ன ஒரு உணவகத்தில் காத்திருந்தேன். வந்ததும் நலம் விசாரித்து விட்டு, என்ன சாப்பிடுகிறாய் மதி, டீயா, காபியா.

நான் ‘டீ’ சொன்னேன்.

Ok. இரண்டு ‘டீ’ சொன்னாள்.

மதி சொல்லு, உனக்கு life எப்படி போய்கிட்டு இருக்கு.

ரொம்ப சுவாரஸ்யமாகவும் இல்லாமல், ஆனா, எந்த பிரச்சினையும் இல்லாம போய்கிட்டு இருக்கு.   

Ok. கயலைப் பற்றி கேட்டுக்கிட்டு இருந்தியே.

நானும், கயலும் கல்லூரியில் சேர்ந்து தான் (இதழியல்) Journalismம் படித்தோம். அவள் Journalism-எடுத்து படித்தது அம்மாவிற்கு பிடிக்கவில்லை. பெண் பிள்ளைகளுக்கு இந்த படிப்பு தேவையில்லை, என்று அவளின் உறவினர்கள் கூறினார்களாம்.  அவளின் அப்பா இல்லாததால், குடும்பத்தில் பெரிதாக வருமானம் எதுவும் இல்லை. அவள் தங்கையின் படிப்பிற்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது. கயல் சீக்கிரம் சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று அம்மா எதிர்ப்பார்த்ததாக ஒரு முறை என்னிடம் கூறினாள்.

          அதனால் தான் படிப்பு முடிந்ததும், சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை என்று “சிறகுகள்” என்ற பத்திரிகை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள். நானும் பத்திரிக்கை துறையில் இருப்பதால், என்னிடம் “சிறகுகள்” நிறுவனத்துக்கான (visiting card) விலாசம் உள்ளது. அதை  கையோடு எடுத்து வந்துள்ளேன். இதை வைத்துக் கொள். உனக்கு உபயோகமாக இருக்கும்.

          நான் கயலிடம் பேசி வெகு நாளாகி விட்டது. அவள் கைபேசி எண்ணை கூட மாற்றிவிட்டாள் என்று நினைக்கிறேன்.

          “சிறகுகள்” பத்திரிகை அலுவலகத்தின் விலாசத்தை வாங்கிவிட்டு, அறிவழகிக்கு நன்றி சொல்லிவிட்டு, ‘டீ’ யிற்கான பணத்தை கொடுத்துவிட்டு புறப்படத் தயாரானேன்.

          அறிவழகிக்கு, கயலின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை என்று நினைக்கிறேன். கயல் தற்கொலைக்கு முயன்றது கூட தெரியாது என்று நினைக்கிறேன்.

          ஆனால், அறிவழகியை சந்தித்ததில் கயல் வேலை செய்யும் இடம் தெரிந்துவிட்டது. இனி எப்படியும் கயலை சந்தித்துவிடலாம் என்று உள்ளுக்குள் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

          பைக் நிறுத்தத்திற்கு வந்துவிட்டு, பைக்கை start செய்தேன், பைக் start ஆகிவில்லை. பைக் டயர் பஞ்சர் ஆகி இருந்தது.

          பக்கத்தில் விசாரித்ததில் அரை கிலோமீட்டர் தள்ளி ஒரு பைக் ரிப்பேர் செய்யுமிடம் இருந்தது. ஆனால் கடையில் உதவியாளர் மட்டும் தான் இருந்தார்.

          ஒரு பத்து நிமிடம் காந்திருந்தேன். பஞ்சர் சரி செய்பவர் வருவதுபோல் தெரியவில்லை.

          கடையில் இருந்த பையன், “அண்ணா, வண்டியை விட்டுட்டு போங்க. பஞ்சர் ஒட்டுபவர் வந்ததும் பஞ்சர் ஒட்டிடலாம். நாளைக்கு வந்து எடுத்துக்கோங்க” என்றான்.

          நாளை ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் செல்ல வேண்டாம் என்பதால் வண்டியை விட்டுவிட்டு, நடந்து பேருந்து நிறுத்தத்திற்கு சென்றேன். பேருந்தை பார்த்ததும் பள்ளி ஞாபகம் வந்தது.

          எங்கள் பள்ளியில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்ல ஒரு எட்டு நிமிடம் ஆகும். அரசுப்பேருந்தில் பயண அடையாள அட்டை (Bus pass)  உண்டு. பயண அடையாள அட்டை (Bus pass)  காண்பித்தால் போதும். மாணவர்களாகிய எங்களுக்கு டிக்கெட்டிற்கு  பணம் கிடையாது. Bus pass  ஐ கல்வி வருடத் தொடக்கத்தில் பள்ளியில் கொடுப்பார்கள். அதற்கு பள்ளியில் புது கல்வி வருடம் சேர்ந்தவுடன் Bus pass   ற்கான படிவம் கேட்டு வாங்கி அதை நிரப்பி, நம் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (pass port size photo) ஒட்டி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். பின் ஒரு திக்கான அட்டையாக அரசு முத்திரையிட்டு நம் கைகளுக்கு கிடைக்கும். அதை அந்த வருடம் முழுவதும் அரசுப் பேருந்தில் உபயோகித்துக் கொள்ளலாம்.

          கட்டணம் கிடையாததால், மாணவ மாணவிகள் எல்லோரும் 5.20 க்கு வரும் அந்த பேருந்துக்காக காத்திருப்போம். 5 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்துவிடும். இந்த 5.20 பேருந்தை விட்டுவிட்டால், அதன் பிறகு 6.30  மணிக்கு தான் அடுத்த அரசுப் பேருந்து வரும்.

          6.30 மணி பேருந்தை பிடித்தால் வீட்டிற்கு செல்ல நேரமாகிவிடும் என்பதால் எல்லா மாணவ, மாணவர்களும் 5.20 பேருந்தில் ஏறிவிடுவார்கள். அதிக கூட்டமாக இருக்கும். சில நேரங்களில் கால் வைப்பதற்கு கூட இடம் கிடைக்காது.

          பெரும்பாலும், மாணவர்கள் படிக்கட்டில் தான் பயணம் செய்வார்கள். நடத்துனர் மாணவிகள் எல்லாரையும் பேருந்தின் உள்ளே ஏற வைத்துவிடுவார். சில நேரங்களில் பேருந்தில் இடம் இருந்தால் கூட சில மாணவர்கள் படிக்கட்டில் தான் பயணம் செய்வர். நடத்துனர் எவ்வளவு கூறினாலும் கேட்பதில்லை.

          ஒரு முறை கயல் என்னிடம், “இந்த ஒரு விஷயத்திற்காகவாது ஆண் பிள்ளையாக பிறந்திருக்கணும்பா” என்று கூறினாள்.

          என்ன விஷயம் என்றேன். நீங்க பசங்களா இருக்கிறதனால படிக்கட்டுல பயணம் செஞ்சா தப்பு இல்லை. ஆனா எங்களைப் பார். பேருந்தில் இடம் இல்லனா எங்களை இறக்கி விடுவாங்களே தவிர படிக்கட்டில் பயணம் செய்ய யாரும் விடுறதில்லை.

          எல்லாம் உங்க பாதுகாப்பிற்காகத்தானே என்றேன்.

          “ஆமா. பொல்லாத பாதுகாப்பு. எனக்கு எவ்வளவு நாள் ஆசை தெரியுமா? பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யணும்னு.

          முடியல அதான் சொன்னேன். இதுக்காகவாது ஆண் பிள்ளையா பிறந்திருக்கணும்னு” என்று சொல்லி சிரித்தாள்.

          நாட்கள் வேகமாக நகர்ந்தன. பதினொன்றாம் வகுப்பை முடித்து – 12ம் வகுப்பிற்கு அடியெடுத்து வைத்தோம்.

          12ம் வகுப்பு வந்த பிறகு கண் இமைக்க கூட நேரம் இல்லாததுபோல் பரபரப்பாக போய் கொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் படிப்பின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தோம்.

          12ம் வகுப்பு இறுதித் தேர்விற்கு  2 மாதத்திற்கு முன்னால் பள்ளியில் இரவு நேரப் படிப்பிற்காக (night study) ஏற்பாடு செய்திருந்தார்கள்.

          மாணவர்களும், மாணவிகளும் இருப்பதால், மாணவர்களுக்கு தனி ஆசிரியரும், மாணவிகளுக்கு தனி ஆசிரியருமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆசிரியர்களை பொறுத்தவரை ஒரு வாரத்திற்கு ஒருமுறை ஒரு ஆசிரியருக்ரு இரவு தங்க வேண்டியிருக்கும்.

          இரவு நேரப் படிப்பு என்கின்ற போது, காலை பள்ளிக்கு வந்த பிறகு, மறுநாள் காலைதான் வீட்டிற்கு செல்ல முடியும்.

          காலை 9.30 மணிக்கு பள்ளிக்கூட படிப்பு தொடங்கும் மாலை 5 மணிக்கு (study time) படிக்கும் நேரம் முடிந்த பிறகு, ஒரு மணி நேரம் ஓய்வு நேரம் கொடுப்பார்கள். மாணவர்களுக்கு தனி அறை தூரமாக ஒதுக்கப்பட்டிருக்கும். மாணவிகளுக்கு கழிவறை வசதிகளோடு கூடிய தனி அறை பெரிதாக ஒதுக்கப்பட்டிருக்கும்.

          ஒரு மணி நேரத்திற்குள் சிற்றுண்டி ஏதாவது சாப்பிட்டுவிட்டு, துணிகள் கொண்டு வந்ததை மாற்றி விட்டு, 6 மணிக்கெல்லாம் படிப்பதற்காக  அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கூடி விட வேண்டும். இரவு முழுவதும் படிப்பு. தேர்வு என்று போகும். 10 மணி வரை படிக்க வேண்டும். அதன் பிறகு தூங்க செல்லலாம். பாய், படுப்பதற்கு பள்ளிக்கூடத்தில் வைத்திருப்பார்கள். போர்வை நாம் தான் கொண்டு போக வேண்டும்.

          விடியற்காலை 4.30 மணிக்கு அலாரம் வைத்து எழுப்பி விடுவார்கள். ஏழு மணி வரை படிப்பு பிறகு வீட்டிற்கு சென்று குளித்து, கிளம்பி காலை உணவை முடித்துவிட்டு, மதிய உணவு, இரவு உணவு எடுத்து வர வேண்டும். மறுபடி 9.30 மணிக்கெல்லாம் பள்ளியில் இருக்க வேண்டும்.

          இரவு உணவு பெரும்பாலும் மாணவ, மாணவிகள் கையோடு கொண்டு வருவதில்லை. இரவு உணவு, தினமும் வீட்டில் இருந்து கொடுத்து விடுவார்கள்.

          வீட்டில் இருந்து யாரும் வந்து கொடுக்க முடியவில்லை என்றால், கையோடு காலையில் எடுத்து வருவார்கள்.

           அப்படியே, யாருக்காவது உணவு வரவில்லை,என்றாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து சாப்பிடுவோம்.

          அன்று, உணவு கொண்டு வராதவருக்கு அதிகமான சாப்பாடு என்றாகிவிடும்.

          நாங்கள் யாரும் பசியோடு இருந்தது இல்லை.

          காலை ஏழு மணிக்கு பள்ளி விடும்போது 7.15 க்கு ஒரு அரசுப் பேருந்து வரும். அதைப் பிடித்து எங்கள் ஊருக்கு சென்றுவிட்டு, கிளம்பி மறுபடி பள்ளிக்கு வருவோம். காலை நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் இருக்காது. நடத்துனர் சில நேரம் இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டு இருப்பார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கயல் இரண்டு, மூன்று தடவை படிக்கட்டில் நின்று பயணம் செய்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டாள்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இதயமடி நீ எனக்கு (அத்தியாயம் 5) – பு.பிரேமலதா, சென்னை

    இதயமடி நீ எனக்கு (அத்தியாயம் 7) – பு.பிரேமலதா, சென்னை