இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என்ன brother, ரொம்ப அமைதியா வர்றீங்க, போறீங்க.
எங்களோடு கூட பேச ஐடியாவே இல்லையா?
அப்படியெல்லாம் இல்லை brother வேலையே சரியாய் இருக்கு அதான்.
காலையில அலுவலகம் செல்லும்போது ஏதோ ‘டென்ஷன்’ஆன மாதிரி இருந்தது.
இவன்கிட்ட சொல்லலாமா? வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தேன். பின், இவன் மூலம் ஏதாவது ஐடியா கிடைக்குதான்னு பார்ப்போம், என்று விரிவாக சொல்லாமல், இரத்தின சுருக்கமாக கயலைப் பற்றி சொன்னேன்.
ஒண்ணுமில்லை brother நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கு ஒரு friend இருந்தாங்க. பள்ளிப்படிப்பு முடிச்சபிறகு, தொடர்பு இல்லாமல் போச்சு. அவங்க, ஒரு பிரச்சினையில் இருக்காங்க. என்னால, அவங்களுக்கு ஏதாவது உதவ முடியுமான்னு பார்க்கிறேன். என் friend கைபேசி எண் எனக்கு கிடைக்கலை. கல்லூரியில் என் friendடோடு சேர்ந்து படிச்சவங்க, எண் கிடைச்சுது. காலையில போன் பண்ணினேன். அவங்ககிட்ட இருந்து சரியா தகவல் எதுவும் கிடைக்கல. அதான் யோசிச்சிட்டு இருக்கிறேன்.
என்ன bro. எந்த காலத்துல இருக்கீங்க. facebook-ல் தேடுனா எல்லா தகவலும் கிடைச்சிடப் போகுது.
பார்க்காம இருப்பேனா brother. தேடிப் பார்த்திட்டேன். என் friend facebook-ல் இல்ல. மற்ற appயும் தேடிப் பார்த்திட்டேன். எந்த தகவலும் கிடைக்கல.
Brother, friend, friendனு சொல்றீங்களே, boy friend or girl friend?
Girl friend தான். Ok.Ok. அது உங்கள் தனிப்பட்ட விஷயம். இப்போ விஷயத்திற்கு வருவோம் காலையில் நீங்கள் போன் பண்ணி பேசினவங்கள உங்களுக்கு எப்படி தெரியும். எனக்கு அவர்களைத் தெரியாது.
கல்லூரியில் என் தோழி கயல் உடன் சேர்ந்து படித்ததாக என் பள்ளி தோழி மலர் கூறினாள். இன்னொரு விசயமும கூறினாள். நாங்கள் படித்த அதே பள்ளியில் தான் அறிவழகி பயின்றதாகவும், வர்த்தகம் (Commerce) குழுவில் இருந்ததாகவும் கூறினாள்.
ஒரே பள்ளி என்று சொல்கிறீர்கள். நீங்கள் சந்தித்ததே இல்லையா?
பார்த்திருக்கலாம். ஆனால் பெயர் தெரிய வாய்ப்பில்லை.
விளையாட்டு விழா, ஆண்டு விழா இப்படிப்பட்ட நேரத்தில் சந்திருக்கலாம் இல்லையா.
நீங்கள் குழுவாக இருந்தபோது, ஏதாவது நிகழ்ச்சி சுவாராஸ்யமாக நடந்திருந்தால் அதைப் பற்றி கூறிப் பாருங்கள் ஞாபகம் வர வாய்ப்பிருக்கும். மற்றபடி, இந்த பெண் பிள்ளைகளிடம் தகவல் பெறுவது என்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
சிவா, சொல்வதிலும் அர்த்தம் இருப்பதாக தோன்றியது எனக்கு.
பள்ளியில் எல்லா குழுவும் சேர்ந்து இருக்கும்போது நடந்த நிகழ்ச்சிகளை சிந்தித்துப் பார்த்தேன். எனக்குள் உதயமானது விளையாட்டு விழா நிகழ்ச்சி.
நாளைக்கு, மதியம் நேரத்தில் போன் செய்து பள்ளி விளையாட்டு விழாவில் நடந்ததை கூறி பார்க்கலாம். ரொம்ப நன்றி சிவா என்றேன்.
Ok brother. நீங்க உங்கள் தோழியை சந்திச்சா எனக்கு சந்தோஷம்.
சரி Good night.
Good night சிவா.
மறுநாள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டுமென்பதால் தூங்கச் சென்றோம்.
காலையில் எழுந்து, வேக வேகமாக அலுவலகத்திற்கு கிளம்பினேன். அலுவலகத்திற்கு செல்ல அரைமணி நேரம் ஆகும். சாப்பிட்டுவிட்டு சென்றால் தாமதமாகி விடும். அலுவலக உணவகத்தில் ஏதாவது காலை உணவிற்கு பார்த்துக் கொள்ளலாம் என்று பைக்கில் அலுவலகத்திற்கு கிளம்பினேன்.
காலையில் இருந்து வேலை, விறுவிறுப்பாக போய் கொண்டிருந்தது. இன்று எப்படியாவது அறிவழகியிடம் பேசி விட வேண்டும் என்று மதியம் சாப்பாட்டிற்கு பிறகு ஒரு மணிநேரம் அனுமதி (permission) போட்டுவிட்டு உணவகத்திற்கு சென்றேன்.
மதியம் சாப்பிட்டுவிட்டு, நமக்கு தேவையான தகவல்கள் எப்படியாவது கிடைக்க வேண்டும், என்ற எண்ணத்தோடு, அறிவழகிக்கு போன் செய்தேன்.
ஹலோ, அறிவழகி, here. ஹலோ, நான் மதி பேசுகிறேன். போனை வைத்து விடாதீர்கள். ஒரு நிமிடம் நான் பேசுவதை கேட்டுவிட்டு பேசுங்கள்.
நானும் காமராஜபுரத்தில் இருந்த அரசுப் பள்ளியில் தான் பயின்றேன். கணிதம்-கணினி அறிவியல் பிரிவு (Maths-Computer Science Group) தேர்வு செய்திருந்தேன்.
என்னை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். பள்ளி விளையாட்டு விழா அன்று விளையாட்டு மைதானத்தில் ஒரு பெரிய கட்-அவுட் இருந்தது. ஏதோ அரசியல் தலைவர்க்கானது. அது விழும் நிலையில் இருந்ததால் யார் மேலும் விழுந்திடக் கூடாது என்று நாம் எல்லோரும் சேர்ந்து அதை அப்புறப்படுத்தினோம். தலைமை ஆசிரியர் கூட நம் அனைவரையும் பாராட்டினார். அன்று எல்லோரும் சேர்ந்து இருந்ததால் மணி அடித்ததும், ஒரே நேரத்தில் வீட்டிற்க்கு கிளம்பினோம்.
பள்ளியிலிருந்து, பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற போது, இடையில் ஐஸ்கிரீம் வண்டி வந்தது. பேருந்து வர கொஞ்சம் நேரம் இருந்ததால் எல்லோரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தோம். எல்லோரும் அவர்களிடமிருந்த பணம் போட்டு, இல்லாதவர்களுக்கும் சேர்த்து பால் ஐஸ், மற்றும் சேமியா ஐஸ் வாங்கி பகிர்ந்து சாப்பிட்டோம்.
சரி, சரி எனக்கு எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது. என்னை மன்னித்துவிடு. அன்று ஏதோ கோபத்தில் தவறுதலாக பேசிவிட்டேன்.
ஆனால் நாம் அன்று சாப்பிட்ட பால் ஐஸ் போல் இப்போது எல்லாம் கிடைப்பதில்லை. அதன் சுவையே தனிதான். ஒரு சதுர வடிவ பெட்டியை சைக்கிளில் வைத்து, மணி அடித்துக் கொண்டே, கொண்டு வருவார்கள்.
மரத்தாலான பெட்டியின் உள்ளே ஐஸ் கட்டித் துண்டுகள் இருக்கும். அதற்குள் பால் ஐஸ், சேமியா ஐஸ், மஞ்சள் நிற ஐஸ், சிவப்பு நிற ஐஸ் என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள்.
ஐஸ் கட்டி பெரிய துண்டுகள் இருப்பதால் ஐஸ்கிரீம் உருகிவிடாமல் இருக்கும். பெட்டிக்குள்ளே எட்டிப் பார்க்க ஆசைப்பட்டு ஐஸ்கிரீம்காரரோடு எல்லாம் நட்பை தொடருவோம். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அதெல்லாம் ஒரு பொற்காலம். ரொம்ப ஜாலியாக இருந்தது. அந்த காலம் திரும்பி வராதா என்ற ஏக்கம் இருக்கிறது.
இப்போதெல்லாம், இந்த காலத்து பிள்ளைகள் கைபேசி, கணினி என்று வெகுநேரம் மூழ்கியிருக்கிறார்கள்.
ஆமாம் அறிவழகி. இப்போ காலம் மாறிவிட்டது. இந்த காலத்து பிள்ளைகளிடமும் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன.
சரி மதி சொல், கயலைப் பற்றி கேட்டாயல்லவா. நான் இப்பொழுது வேலையில் இருக்கிறேன். நாம் நேரில் சந்தித்து பேசலாம். இடம், நேரம் நான் தகவல் அனுப்புகிறேன், வந்துவிடு. சனிக்கிழமை மாலை சந்திக்கலாமா என்று கேட்டாள்.
சரி மாலை 5 மணிக்கு சந்திக்கலாம் என்றேன்.
கைபேசி அழைப்பை அணைத்துவிட்டு அறிவழகி பேசியதை எண்ணிப் பார்த்தேன். உண்மையிலே, நாம் படித்த காலம் வசந்த காலம் தான். இனி நமக்கு கிடைக்கப் போவதில்லையே என்ற யோசனையோடு அனுமதி (permission) போட்ட நேரம் முடிவதற்குள் அலுவலகம் செய்ய விரைந்தேன்.
வார நாட்கள் அனைத்தும் வேகமாக கடந்துவிட்டன. சனிக்கிழமை வரவிற்காக நான் காத்திருந்தேன்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings