in ,

குறை ஒன்றும் இல்லை (சிறுகதை) – கீதா இளங்கோ

எழுத்தாளர் கீதா இளங்கோ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காலை மணி 8. மணியை பார்த்தவன் வேகவேகமாக கடைக்கு கிளம்பினான் கணேசன். கடைக்கு சென்றவன் அவன் புனிதமாக நினைக்கும் தன் தொழிலை நினைத்து கடவுளை மனதிற்குள் தியானித்தபடி பூட்டை திறந்து கடைக்குள் நுழைந்தவன் கடையை சுத்தம் செய்து சுவாமி படத்திற்கு வத்தி ஏற்றி வைத்துவிட்டு நெற்றியில் திருநீறு வைத்தபடி தன் வேலையை ஆரம்பித்தான் கணேசன்.

அது கடவுளின் சிலைகளை செய்யும் ஒரு கலைக்கூடம். அங்கே தெய்வீகம் நிறைந்து காணப்பட்டது. சுத்தமான களிமண் கொண்டு கடவுளின் உருவங்களை அச்சில் வைத்து மிக அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யும் ஒரு சிற்பக்கூடம். விநாயகர் சதுர்த்தி வருவதால் களை கட்டியிருந்தது.

சிலைகளை அழகாக செய்வதில் மிகவும் கைத்தேர்ந்தவன் கணேசன். தன் வேலையை ஆரம்பித்தான். அப்போது தொண்டையை கனைத்தவாறு உள்ளே நுழைந்தார் ரத்தினம்.  தன் தொழில் மீது மிகுந்த பக்தி உள்ளவர். மீன்விசிறியை சுழல விட்டப்படி தன் இருக்கையில் அமர்ந்தார் ரத்தினம். 

என்ன கணேசா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட போல இருக்கு என்றார்.

ஆமாங்க ஐயா பண்டிகை வருதுல்ல அதுதான் சீக்கிரம் வந்துட்டேன். விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைக்கு நிறைய ஆர்டர் வந்து இருக்குங்க ஐயா என்றான் கணேசன்.

அப்படியா சரி நீ வேலையை பாரு கணேசா நான் கொஞ்சம் பேங்க் வரைக்கும் சென்று வருகிறேன். சரியான நேரத்திற்கு நாம ஆர்டர் முடித்து குடுத்துடனும் கணேசா என்று சொல்லிவிட்டு வெளியில் கிளம்பினார் ரத்தினம்.

தன் வேலையை தொடர்ந்தான் கணேசன். அவன் கைகளில் ஒரு விநாயகர் சிலை. தெய்வீகமாக அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தது. அதனை மிகவும் அழகாகவும், மிகவும் ரசனையோடு வடிவமைத்து கொண்டிருந்தான் கணேசன். 

தன் கைகளில் இருந்த விநாயகர் சிலையை உற்று கவனித்தான். எதோ ஒரு குறை இருப்பது போலவே அவனுக்கு பட்டது. கூர்ந்து கவனித்தவன் விநாயகரின் பாதாங்களில் ஒரு விரல் சற்றே வளைந்து இருந்ததை கவனித்து பதறியவனய் உடனே கொஞசம் மண் எடுத்து குழைத்து விரல் வடிவமாக செய்து அங்கே பதிய வைத்து அந்த விரல்களை சரிசெய்ய முனைந்தான். அவன் செய்து கொண்டிறிந்த விநாயகர் அவனுக்கு மிகவும் நெருக்கமான விநாயகர்.

அச்சில் வார்க்காமல் ஒரு குழந்தையை உருவாக்குவது போல் தன் கைகளாலே பார்த்து, பார்த்து கலை அம்சத்தோடு, அழகாக வடிவமைத்து கொண்டிறிருந்தான் கணேசன்.

அவன் செய்யும் சிலைகளில் ஒரு சின்ன குறை கூட வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். அவன் கைகள் பட்ட கடவுள் சிலைகள் கலைவண்ணத்துடன் மிக ரம்மியமாக காட்சி அளித்தது. குறையுடன் காணப்பட்ட அந்த விநாயகரின் விரல்களை சரி செய்து அழகாக வடிவமைத்து சிலையை அமர வைத்து அழகு பார்த்தான் கணேசன்.

கடவுளின் சிலைகளை ஒரு நிமிடம் பார்தாலே மனம் அதில் லயித்து விடும்போது சிலைகளின் கூடவே வாழ்பவன். அதனால் அவைகளுடன் வாழவே தொடங்கினான் கணேசன் அவைகளை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்தான்.

அதிலும் முக்கியமாக ஒரு குழுந்தையை போல் பார்த்து, பார்த்து செய்த அந்த விநாயகர் மட்டும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக மாறினார். அந்த விநாயகரிடம் பேசுவதும் தன் மனதில் உள்ள கவலைகளை பரிமாறி கொள்வதும் அதனுடன் சண்டை போடுவதுமாக இருந்த கணேசனுக்கு அந்த சிலை கடவுளாகவும், ஒரு குழந்தையாகவுமே தெரிந்தது……

விநாயகர் சதுர்த்தியும் வந்தது. கடைகளில் கூட்டம் அலைமோதியது. கணேசன் கடையிலும் மக்கள் நிரம்பி வழிந்தனார். சிலைகள் ஒவ்வொன்றாக விற்று தீர்ந்தன. ஐந்து வயது உள்ள ஒரு சிறுமியை தோளில் சாய்த்தபடி வந்தார் ஒருவர். 

 தம்பி எனக்கு ஒரு விநாயகர் சிலை குடுப்பா என்றார் அவர்,. 

கணேசணும் அவனுக்கு முன்னாள் டேபிளில் அடுக்கி வைத்திருந்த சிலைகளை காண்பித்து ஒவ்வொரு சிலையின் விலையையும் சொல்லிக்கொண்டே வந்தான். அவரின் வசதிக்கேற்ப விலையை சொல்லி இந்த விலையில் ஒன்று குடுப்பா என்றார் அவர்.

அந்த விலையில் ஒரு சிலையை எடுத்து வைத்து இது எப்படி இருக்கு பார்த்து சொல்லுங்க என்று எடுத்து வைத்தான் கணேசன்…..  

சிலையை பார்த்த அவர் இது நன்றாக இருக்கு இதையே குடுப்பா என்ன விலை என்று கேட்டார்? அப்பா என்று கூப்பிட்டது அவர் தோளில் கிடந்த அந்த குழந்தை,, அப்பா எனக்கு அந்த பிள்ளையார் சிலை தான் வேண்டும் என்று தன் பிஞ்சு கரத்தை நீட்டி ஒரு சிலையை காண்பித்தது.

அந்த குழந்தை கை நீட்டி காண்பித்த சிலை கணேசனுக்கு மிகவும் நெருக்கமான அந்த பிள்ளையார்தான். 

அந்த சிலையை பார்த்த அவர் வேண்டாம் குட்டிமா அது அதிகமான விலையாக இருக்கும் நினைக்கிறேன். அது ரொம்ப பெரிசா இருக்கு இங்க பாரு இந்த குட்டி பிள்ளையார் எவ்வளவு அழகாக இருக்கு பாரு நாம இந்த சிலையை எடுத்துக்கலாம் என்றவுடன் எனக்கு அந்த பிள்ளையார்தான் வேண்டும் என்று அடம்பிடித்து ஓவன்று அழ ஆரம்பித்தாள் அந்த சிறுமி.

அப்போது தான் அந்த சிறுமியை கவனித்தான் கணேசன். தோளில் சாய்த்து வைத்தபடி இருந்த அந்த குழந்தையின் கால்களை கவனித்த போது அந்த கால்கள் செயற்கை கால்கள் பொருத்தி இருந்ததை கவனித்தான் கணேசன். அவனுக்கு மனதை என்னவோ செய்தது. அந்த குழந்தை விரும்பின சிலையை பார்த்த கணேசன் அதிர்ச்சியாகினான்.

ஏனெனில்…..

அது அவனுக்கு மிகவும் நெருக்கமான விநாயகர் சிலை தான் அது. இதை விற்க வேண்டாம் என்ற முடிவோட மற்ற சிலகளுக்கு விலை பேசியவன் அந்த சிலைக்கு மட்டும் விலையை சொல்லாமலே இருந்தான்.

அந்த குழந்தையின் தந்தை அந்த சிறுமியின் அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தார். ஆனால் அந்த சிறுமியோ அழுகையை நிறுத்துவதாக இல்லை. கணேசனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அந்த சிறுமி அழுவதை பார்க்க முடியவில்லை அவனால்.

ஐயா இருங்க என்று தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து மெதுவாக எழுந்து தன்னுடைய வளைந்த ஊனமான கால்களை சரி செய்து தாங்கியப்படி நடந்து சென்று அந்த சிலையை எடுத்து வந்தான் கணேசன்.

தனக்கு நெருக்கமான அந்த பிள்ளையாரை தன் கைகளால் எடுத்து அந்த சிறுமியின் கைகளில் குடுத்து இதோ நீ கேட்ட சிலை என்று கொடுத்தவுடன் அந்த குழந்தையின் முகத்தில் சிரிப்பையும் ஆனந்தத்தையும் பார்த்த கணேசனுக்கு கண்களில் கண்ணீர் எட்டிபார்த்தது. தம்பி இது விலை அதிகமாக இருக்கும் போல இருக்கு. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்றார் அந்த சிறுமியின் தந்தை. 

நீங்க எவ்வளவு குடுக்க முடியுமா அதை குடுங்க சார். பாப்பாவின் சிரிப்புக்கு விலை இல்லை என்று சொல்லி அவர் கொடுத்த பணத்தை வாங்கி பணம் போடும் பெட்டியில் போட்டுவிட்டு முதலாளியிடம் சொல்லிக்கலாம். திட்டினாலும் பரவாயில்ல தன் சம்பளத்தை குடுத்துக்கலாம் என்று மனதில் நினைத்தவாறு அடுத்த சிலை செய்ய ஆரம்பித்தான் கணேசன்.

என்னைத்தான் நீ ஊணமாக படைத்துவிட்டாய் கடவுளே.. ஆனால் உன்னை நான் ஒரு போதும் குறையுடனோ, ஊனமகவோ படைக்க மாட்டேன் என்று மனதில் நினைத்தப்படி களிமண்ணை பிசைய ஆரம்பித்தான் கணேசன் அடுத்த கடவுள் சிலையை உருவாக்க……

அப்போது அவன் காதுகளில் விழுந்தது சிவரஞ்சினி ராகத்தில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் குரலில்

“குறை ஒன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா” என்ற வரிகள்.,,,

ஊனம் உடலில் இருக்கலாம், உள்ளத்தில் இருக்க வேண்டாம்

எழுத்தாளர் கீதா இளங்கோ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    கலப்பையும், கணினியும் (சிறுகதை) – கீதா இளங்கோ