in ,

கலப்பையும், கணினியும் (சிறுகதை) – கீதா இளங்கோ

எழுத்தாளர் கீதா இளங்கோ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அவணிப்பூர் ஒரு அழகிய கிராமம். பார்க்கும் இடம் எங்கும் பச்சை பசேலன்று இயற்கை அன்னை கொஞ்சி விளையாடும் இடமாக இருந்தது பனையூர் கிராமம்.  

அங்கே வயலில் தெம்மாங்கு பாட்டுடன் வேலை செய்து கொண்டிறிந்த பெண்களின் நடுவில் மெலிந்த தேகத்தோடு கையில் நாற்றுகட்டுடன் நாற்றுநடும் வேலையில் மும்மரமாக இருந்தாள் வடிவு. 

அம்மா என்று கூப்பிட்டு கொண்டே சிரிப்பும் சந்தோஷமுமாக வேகமாக ஓடிவந்தாள் பூங்கொடி.

நாற்று கட்டுடன் இருந்த வடிவு ஏன்டி இப்படி மூச்சிறைக்க ஓடிவற? என்று மகளை செல்லமாக கடிந்து கொண்டாள் வடிவு. 

அம்மா எனக்கு சென்னையில் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு!!அடுத்த வாரமே நான் கிளம்பனும் என்று அந்த சந்தோஷ செய்தியை சொல்ல வடிவிற்கு ஏனோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை…..

மகளை தனியாக அனுப்ப விருப்பமில்லை. இருந்தாலும் மகளின் சந்தோஷத்திற்காக அனுமதித்து இருந்தாள்.

என்னம்மா உன் முகத்துல சந்தோஷமே இல்லையே ஏம்மா? என்ற மகளிடம்

உன்னை பிரிந்து நான் மட்டும் எப்படி தனியா இருக்கறதுனு யோசிக்கிறேன். நீ எப்படி அங்க தனியா இருப்ப? பயமா இருக்கு பூங்கொடி என்று சொன்ன தாயை பாIர்த்து வேகமாக சிரித்தாள் பூங்கொடி. 

காலம் எவ்வளவுவோ முன்னேறி இருக்குமா நீ ஒன்றும் கவலைப்படாதே தினம் நான் உன்கூட பேசறேன் என்று அம்மாவை கட்டிப்பிடித்து கொண்டாள். வீடியோ கால் பண்றேன். தினமும் நீ என்னை பார்க்கலாம், பேசலாம்மா கவலைப்படாதே என்ற மகளின் தைரியத்தை தலை நிமிர்ந்து பார்த்தாள் வடிவு.

தனக்கு வந்த நியமன கடிதத்தோடு அவளுக்கு தேவையான பொருட்களுடன் சென்னையை நோக்கி விரைந்தாள் பூங்கொடி. அங்கு தன் தோழியின் மூலமாக தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து வைத்து இருந்ததால் நேராக அவள் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தால் பூங்கொடி. 

தோழியை பார்த்ததும் மிகவும் ஆவலாக அவளை வரவேற்று பூங்கொடிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தாள் அவள் தோழி கவிதா. கவிதா ஏற்கனவே அந்த கம்பெனியில் பணிபுரிபவள். அது ஒரு சாப்ட்வேர் கம்பெனி. 

இரவு தூக்கம் இல்லை பூங்கொடிக்கு. பொழுது விடிந்தது. முதல் நாள் தன் அலுவலகதிற்குள் நுழைந்தாள் பூங்கொடி. சில்லென்ற ஏசியின் காற்று அவளை வரவேற்றது. உள்ளே நுழைந்த பூங்கொடிக்கு இது என்ன தேவலோகமா என்று நினைக்கும் அளவிற்கு எங்கும் மின்விளக்குகள் அலங்காரித்தது. செயற்கையான செடி, கொடிகளும், பூக்களையும் ஆச்சிர்யத்துடன் பார்த்து ரசித்தவாறு தலைமை நிர்வாகியை பார்க்க ஒருவித பயத்துடனும், தயக்கந்துடனும் வேகமாக நடந்தாள் பூங்கொடி.

கிராமத்தில் வளர்ந்த அவளுக்கு இது மிகவும் புது அனுபவமாக இருந்தது. தலைமை நிர்வாகியை சந்தித்து தன் நியமன கடிதத்தை காட்டினாள் அவள். அவரும் அதை பார்த்து முடித்து வாழ்த்துக்களுடன் அவளின் இருக்கையில் அமரவைத்து அவளின் பணிகளை பற்றி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நாகர்ந்தார் அவர்.

அவளின் இருக்கையில் அமர்ந்தாள் பூங்கொடி. சுற்றும், முற்றும் பார்த்தாள். அவளின் எதிரே புது கம்ப்யூட்டர். இப்போது பூங்கொடிக்கு தான் கண்ட கனவையும், லட்சியத்தையும் அடைந்துவிட்ட பெருமையுடன் கம்ப்யூட்டரை இயக்க ஆரம்பித்து தன் பணிகளை தொடர்ந்தால் அவள்….

களை எடுத்த அவளின் கைகள் இப்போது கம்ப்யூட்டரில் விளையாடின. இன்னும் சாதிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வேலையில் முழ்கிப்போனால் பூங்கொடி.

முகத்தில் அலங்கார ஒப்பனையோ ஆடையில் எந்தவித மாற்றமோ இன்றி எப்பொழுதும் தான் ஒரு கிராமத்து பெண்ணாக வலம் வந்த பூங்கொடியை அங்கு வேலை செய்த இளம் பெண்களுக்கு இவள் சற்று வித்யாசமாகவே தெரிந்தாள். 

ஆனாலும்…. தான் ஒரு கிராமத்து பெண் என்று சொல்வதில் பெருமை கொண்டாள் பூங்கொடி. நாட்கள் நாகர்ந்தது. சம்பளம் என்று அள்ளி கொடுத்தது அந்த ஐடி கம்பெனி. தன் செலவு போக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து தந்தை பட்ட கடனை அடைத்தாள்., கூரை வீட்டை சரிசெய்து அழகான வீடாக மாற்றியமாத்தாள், நிலம் வாங்கினாள் பூங்கொடி. 

தன் தாயை எப்பொழுதும் சந்தோஷமாக பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள் பூங்கொடி. தை பிறந்தது. பொங்கலும் வந்தது. பொங்கல் விடுமுறையில் அவரவர் தம் ஊருக்கு கிளம்பினர்கள். பூங்கொடியும் தன் அம்மாவையும், தன்னை வளர்த்த தான் பிறந்த ஊரையும் பார்க்க மிகவும் ஆனந்தமாக கிளம்பினாள் பூங்கொடி.  

கிராமத்தில் தன் மகளையும், தை மகளையும் வரவேற்க வீட்டில் வெள்ளையடித்து, வாசலை சுத்தப்படுத்தி காவி வைத்து கோலம் போட்டு மிகவும் அழகாக வைத்து இருந்தாள் வடிவு. கண்கள் மகளின் வரவுக்காக காத்து இருந்தது.

ஆவணிப்பூர்….!! இதுவே அவளின் கிராமம்… அவளை அழகாக சுமந்து வந்து அந்த ஊரில் இறக்கி விட்டு சென்றது அந்த கிராமத்து டவுன் பஸ்.   

இறங்கியவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், பூங்கொடி என்ற குரல் கேட்டு திரும்பியவள்….அங்கே பஞ்சாயத்து தலைவர் நின்று கொண்டிறிந்தார்..

என்னங்கய்யா எப்படி இருக்கீங்க என்று மரியாதையுடன் கேட்க நான் நல்லா இருக்கேன்மா நீ எப்படி இருக்க? வேலை எப்படி இருக்கு என்று கேட்டவர் அதோடு விடவில்லை. 

அம்மா பூங்கொடி உன்னை பார்ப்பதற்கு ரொம்ப பெருமையை இருக்குமா. இந்த சின்ன வயசுல இவ்வளவு பொறுப்பா குடும்பத்தை பார்த்து உங்கப்பா பட்ட கடனை அடைத்து ஒரு பெண் பிள்ளையா உன் குடும்பத்துக்கு நீ செய்றதை பாக்கும்போது நீ நம்ம ஊர் பிள்ளை சொல்லிக்கறது ரொம்ப பெருமையை இருக்கும்மா உங்கம்மா முகத்துல இப்பதாம்மா நா சிரிப்பையே பார்க்கிறேன் என்று அவர் சொல்லி முடிக்கும்போது அவள் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது. 

மீண்டும் நடக்க தொடங்கியவள் வரும் வழியில் எல்லாம் இவளை எல்லோரும் மிக பெருமையுடனும், பாசத்துடனும் பார்த்து பேசுகையில் இவள் ஒரு பெருமிதத்துடன் அம்மாவை பார்க்கும் ஆவலில் எட்டி நடைப்போட்டாள். அந்த செம்மன் பாதையில் அவள் நடந்து வரும் போது சுற்றும் முற்றும் பார்த்தாள்

நிறைய வீடுகள் பூட்டி இருந்தது. வயல்கள் எல்லாம் முட்புதர்களாக இருந்ததையும், நிலங்கள் எல்லாம் வீடுகளாக உருமாறி இருந்ததையும் கவனித்தாள் பூங்கொடி. பசுஞ்சோலையாக இருந்த அந்த கிராமம் இன்று அந்த களையை இழந்து விட்டிருந்தது.

வீட்டை நெருங்குகையில் வாசலில் தனக்காக அம்மா காத்து கொண்டிறுப்பதை பார்த்ததும் பூங்கொடி முகம் மிகவும் பிரகாசமானது. மகளை பார்த்த வடிவு தன் மகளை அனைத்தபடி இந்த அம்மாவை பார்க்க இப்பதான் ஊருக்கு வரணும் தோணிச்சா பூங்கொடி என்று பொய்க்கோபத்தை காட்டி சரி சீக்கிரமா வாம்மா. உனக்கு பிடிச்ச சாப்பாடு பண்ணியிருக்கேன் என்று சொல்லியபடி அடுக்களையில் நுழைந்தாள் வடிவு…

இரவு நேரம்!!

அம்மா உங்களிடம் கேட்கணும் இருந்தேன் நான் வரும்போது பார்த்தேன் நம்ம ஊருக்கு என்ன ஆச்சு என்று கேட்டாள் பூங்கொடி. ஏன் அப்படி கேக்கற? என்றால் வடிவு.

ஊரே களையிழந்து இருக்கற மாதிரி இருக்கு. நிறைய வீடுகள் பூட்டி இருக்கு ஏம்மா? என்ற பூங்கொடியின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள் வடிவு.

அத ஏம்மா கேக்குற? நீ வெளியூர் போய் சம்பாதிக்க ஆரம்பித்து நமக்கு ஓரளவு வசதிகள் வந்து தோப்பு, வீடு என்று வந்த பிறகு எல்லோருக்கும் அந்த ஆசை வந்து பூங்கொடி மாதிரி நல்லா படிக்கணும் நகரத்துக்கு போகணும் நிறைய சம்பாதிக்கணும் சொல்லி அவங்க பிள்ளைங்களை கம்பெனி வேளைக்கு அனுப்பிட்டாங்க. உன்னையே ஒரு உதாரணமா எடுத்துக்கிட்டு எல்லோரும் நகரத்தை நோக்கி கிளம்பி விட்டனர். எதிர்த்த வீட்டு சுப்பு, பக்கத்து வீட்டு பர்வதம் அவங்க பிள்ளைங்களையும் அனுப்பிட்டு அவர்களும் கூடவே இருக்கனும் சொல்லி நகரது பக்கம் போய்ட்டாங்க. இப்படியே போனால் விவசாயத்தை யார்தான் பார்க்கறது. வருங்காலம் சந்ததியினர் விவசாயத்தை மறந்துவிட போறாங்களோ என்று  ரொம்ப கவலையா இருக்கு பூங்கொடி என்று தான் ஆதங்கத்தை கொட்டிவிட்டு படுக்கைக்கு போனால் வடிவு. 

இதை கேட்டதும் ஒரு நிமிடம் மூச்சுடைத்து பூங்கொடி.!!!!!

பூங்கொடி ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவள். சிறுவயதில் இருந்தே பூங்கொடியும் அப்பாவுடன் கைகோர்த்து நிலத்தில் களை எடுக்கும் வேலையில் இருந்து கதிர் அறுக்கும் வேலை வரை தெரிந்து வைத்து இருப்பவள். இதோ ஓரளவுக்கு வசதி வாய்ப்பை தன் குடும்பத்திற்கு ஏற்படுத்தி கொடுத்து இருந்தாலும் விவசாயத்தை விடவில்லை வடிவு. தன் நிலத்தில் இன்றும் பயிர் வைத்து விவசாயம் பார்த்து கொண்டு இருந்தாள் வடிவு.

பூங்கொடிக்கு உறக்கம் வரவில்லை. அவள் எதோ பெரிய தவறு செய்து விட்டது போல் நினைக்க ஆரம்பித்தாள். இந்த கிராமம் மாறியதற்கு நான் காரணமா என்று நினைகையில் ஒரு குற்ற உணர்ச்சியில் உறைந்து போனால் பூங்கொடி.

இதற்கு ஒரூ முடிவு எடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்தவாறு உறங்கியும் போனள். பொழுது விடிந்தது. அவசரமாக உடையை மாற்றி கொண்டு கிளம்பினாள்.

பூங்கொடி இவ்வளவு சீக்கிரமா எங்க கிளம்பிட்ட என்று கிட்ட தாயின் கேள்விக்கு ஒரூ வேலை இருக்கு சீக்கிரமா வந்துடறேன் என்று சொல்லி காலில் செருப்பை மாட்டிக் கொண்டு ஊர் தலைவரின் இல்லம் நோக்கி விரைந்தால் பூங்கொடி.

வாசலில் இவளை பார்த்ததும் வாம்மா,, எங்க இவ்ளோ தூரம் என்று நலம் விசாரித்தவரிடம்

ஐயா உங்களிடம் கொஞ்சம் பேசணும். பேசலாமா? என்று அனுமதி கேட்க பேசலாம் உட்காரும்மா என்றார்..

ஐயா, நம்ம ஊர் இப்ப விவசாயம் இல்லாம ரொம்ப காடா மாறிட்டு இருக்கு. அம்மா எல்லாம் சொன்னங்க விவசாயத்தை நம்பி பலன் இல்லை என்று நம்ம ஊர் மக்கள் அனைவரும் நகரத்தை நோக்கி போய்ட்டாங்க சொன்னாங்க. இப்படியே போன நல்லா இருக்காது அப்புறம் யார் தான் விவசாயம் பார்க்கிறது. எதோ இதுக்கு நானும் ஒரூ காரணமா ஆகிட்டேன் அதனால் நானே இதை சரி பண்ணலாம் இருக்கேன்.

அப்போது பள்ளி சீருடையில் அவரின் பேத்தி அங்கு வர அந்த குழந்தையிடம் இதோ இங்க பார் யார் வந்து இருகாங்க பாரு இவங்க தான் பூங்கொடி அக்கா. இவங்களை போலவே நீயும் நல்லா படிக்கணும் இவங்களை போலாம் நீயும் பெரிய வேளைக்கு போய் நிறைய சம்பாதிக்கணும் என்று சொன்னதை கேட்டதும் ஒரூ நிமிடம் மூச்சிவிட மறந்து போனல் பூங்கொடி.

ஐயா இது போலவே எல்லோரும் என்னை காரணம் காட்டி வேலைக்காக ஊர் விட்டு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. நான் நம்ம ஊர் ஜனங்களை பார்த்து பேசணும். ஊர் கூட்டம் ஒன்று எனக்கு ஏற்படுத்தி குடுக்கணும் என்று சொன்னதை கேட்ட ஊர் தலைவர் அதை உடனே கூட்டத்திற்கு ரெடி பண்ணியும் குடுத்தார்.

அந்த நாளும் வந்தது எல்லோருக்கும் ஒரூ வணக்கத்தை வைத்து விட்டு பேசினாள். அவள் வேலை செய்யும் இடத்தில் தான் படும் கஷ்டங்களையும், மன அழுத்தங்களையும் சொல்லி புரிய வைத்தாள்…

யாரும் விவசாயத்தை விட்டு செல்ல வேண்டாம். நான் ஏன் வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன். யாருக்கோ நான் உழைத்து கொடுப்பதை விட அந்த உழப்பை என் சொந்த ஊரில் உங்களுடன் விவசாயம் செய்வது என்று முடிவு எடுத்து இருக்கிறேன் என்று சொன்னதும்,,,,

ஒரூ பெரியவர் விவசாயம் பண்ணி வாழ முடியாத நிலைமைக்கு நாங்க வந்துட்டோம் பூங்கொடி என்று சொன்னதை கேட்டு

நிலைமையை மாத்துவோம் ஐயா, கவலைப்படாதீங்க எனக்கு நீங்க உறுதுணையா இருங்க. நாம எல்லோரும் சேர்ந்து உழைக்கலாம் என்று உழைப்பின் பெருமையையும்,. வேகமான நகரத்து வாழ்க்கையின் கஷ்டங்களையும் சொல்லி புரிய வைத்தாள் பூங்கொடி. அவளின் பேச்சை கேட்ட ஊர் மக்கள் அவளை தன்னம்பிக்கையை பாராட்டி அனைவரும் கலைந்து சென்றனர்..

வீட்டிற்குள் நுழைந்த பூங்கொடி தாயிடம் விவரத்தை சொன்னாள். இதை கேட்ட வடிவு தன் மகள் தன் கிராமத்தின் மேல் வைத்திருக்கும் பாசத்தையும், விவசாயத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பார்த்த வடிவிற்கு கண்ணில் நீர் கசிந்தது.

உனக்கு என்ன தோணுதோ செய் பூங்கொடி என அனுமதி கொடுக்க அவளின் ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தினாள் பூங்கொடி.

நண்பர்களிடமும் பேசினாள் விவசாயத்தை பற்றியும் ஊரின் நிலைமையையும் விளக்கினாள். நண்பர்களும் கைகோர்த்தனர். பாரம்பரியமான விதைகளை கண்டுபிடித்து அதன் தன்மையை பெரியோர்களிடத்தில் கேட்டறிந்து அவளின் கால்கள் மீண்டும் நிலத்தில் கால் பதித்தது.  

நாற்று நடுவது, களைப்பறிப்பது, என்று காலநேரம் பார்க்காமல் அணைத்து வேலைகளையும் செய்தாள். கம்ப்யூட்டரில் விளையாடிய அவள் கைகள் இப்போது மீண்டும் அருவா தூக்கி களை எடுத்தது. அவளின் குறிக்கோள் விவசாயத்திலும் நம் வாழ்க்கையைசெம்மையாக்கலாம் என்பதை ஊர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்புடன் செயல் பட்டால் பூங்கொடி. 

தன் மகளின் வேகத்தை பார்த்த வடிவு வாயடைத்து மகளுக்கு துணையாக நின்றாள். தாயும், மகளும் ஊருக்காகவும், விவசாயத்திற்காகவும் நேரம் பார்க்காமல் உழைப்பதை பார்த்து விவசாயத்தின் அருமையை உணர்ந்து அவரவர் நிலங்களில் காலத்துக்கேற்ப நெல்மணிகளையும், மா, தென்னை, பனை என்று இப்போது விதைக்க ஆவணிப்பூர் கிராமம் பசுஞ்சோலையாக மாறியது. 

இயற்கை அன்னை பச்சை புடவைகட்டி வெட்கத்தில் தலை குனிந்தவாறு இருந்தது ஒவ்வொரு நெற்கதிறும். விவசாயத்தை மேம்படுத்த புதுவிதமான முற்சிகளை புகுத்தி விளைச்சளை பெறுக்கினாள் பூங்கொடி. மற்ற கிராமங்கள் இந்த கிராமத்தை மேற்கோள் காட்டியது. பூங்கொடியை ஊரே பாராட்டியது. இந்த ஊர் மக்களின் வாழ்க்கை வசந்தமானது. இப்போது பள்ளிக்குழந்தைகள் விவசாயத்தை ஆர்வமுடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனார்.

குறுகிய காலத்தில் அதிகமான விளைச்சளை குடுத்து விவசாயத்தில் ஒரூ பெண் சாதித்ததால் பசுமை புரட்சி என்ற அமைப்பு உழவர் திருநாளன்று வேளாண்மையின் தங்கமங்கை என விருது வழங்கி பூங்கொடியை கௌரவித்தது. காதைப்பிளக்கும் ஓசையில் விண்ணையும் தாண்டி கைத்தட்டின் ஓசையில் மேடையில்,,

கைகளில் விருதும், கழுத்தில் மாலையும் நம்மாழ்வார் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நின்றிருந்தால் நம் பூங்கொடி.

சரித்திரம் படைப்பவர்கள் மட்டும் சாதனையாளர்கள் அல்ல.

சாதிக்க பிறந்தவர்கள் அனைவரும் சாதனையாளர்கள் தான்.

  “மண்ணை மதிப்போம்.

விவசாயத்தை காப்போம் “.

எழுத்தாளர் கீதா இளங்கோ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குறை ஒன்றும் இல்லை (சிறுகதை) – கீதா இளங்கோ

    பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்