in

கங்கையின் சங்கமம் (சிறுகதை) – ✍ கீதா இளங்கோ, புதுச்சேரி

கங்கையின் சங்கமம் (சிறுகதை)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். மாலை மணி நான்கு. காசிக்கு போகும் எக்ஸ்பிரஸ் ரயில் கிரிச் என்ற சத்தத்துடன் வந்து நின்றது.

“காயத்ரி சீக்கிரமா ஏறு” என்று சரவணன் மகன் கவினையும், காயத்ரியையும் கை பிடித்து ரயிலில் ஏற்றிவிட்டு நம்பர் சரி பார்த்து அமர்ந்தார்கள்.

ரயில் பயணம் என்பதால், குழந்தை கவின் மிகவும் சந்தோஷமாக விளையாடி கொண்டு இருந்தான்.

அப்போது ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாவும், ஒரு பெரியவரும் உட்கார சீட் நம்பரை சரி பார்த்தபடி வந்து அமர்ந்தார்கள். எதோ ஒரு சோகத்துடனே அமர்ந்திருந்தார்கள் இருவரும்.

இதை பார்த்து கொண்டு இருந்த சரவணனுக்கும், காயத்ரிக்கும் அவர்கள் மேல் பிரிதாபம் கலந்த அன்பு ஏற்பட்டது. சரவணனுக்கு அவர்களை பார்க்கும் போது எதோ ஒரு உணர்வு தோன்றியது..

ரயில் கிளம்பியது. அந்த பெரியவர் சரவணனிடம் பேச ஆரம்பித்தார்.

“தம்பி நீங்க எங்க போறீங்க?” என்று கேட்டார்.

“தந்தை இறந்து ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், அவருடைய அஸ்தியை கறைக்க காசிக்கு சென்று கொண்டு இருக்கிறோம்” என கூறினான் சரவணன்.

அதைக் கேட்ட அவரின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது. “உன் தந்தை மிகவும் கொடுத்து வைத்தவர்” என்று கூறினார் அந்த பெரியவர்.

இதை கேட்டு கொண்டு இருந்த அந்த அம்மாவும் முந்தானையால் கண்களை துடைத்து கொண்டதை சரவணனும், காயத்ரியும் பார்க்க தவறவில்லை.

அந்த தம்பதியர் எதோ நினைவுகளில் முழகினர்.

“பாவம்ங்க இரண்டு பேரையும் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கு… ஏன்னு தெரியல?” என்று காயத்ரி சொன்னதும், சரவணனுக்கும் அவர்கள் மேல் பரிவும் பாசமும் தோன்றியது

“எனக்கும் அப்படித்தான் இருக்கு காயத்ரி” என்றான் சரவணன்.

இரவு நேரமானது. காயத்ரி கொண்டு வந்த இட்லி, சப்பாத்தியை அந்த அம்மா, பெரியவர் இருவருக்கும் கொடுத்து சாப்பிட சொன்னாள் காயத்ரி.

“நானும் கொண்டு வந்து இருக்கேம்மா” என்று அந்த அம்மாவும் தான் கொண்டு உணவுகளை பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டு முடித்தார்கள்.

கவின் தூங்குவதற்கு அடம் செய்ய, அதை பார்த்துக் கொண்டு இருந்த அந்தம்மா, “இங்க வா, பாட்டி ஒரு கதை சொல்றேன்” என்றழைக்க

கவின் ஓடிப் போய், “பாட்டி” என்று ஒட்டிக் கொண்டான்.

அந்த பெரியவரும் இணைந்து இருவரும் கவினுக்கு கதை சொல்ல, ஆர்வமுடன் கேட்டுக் கொண்டு இருந்தான் கவின்.  இதை பார்த்து சரவணனும், காயத்ரியும் இது போல் நம் வீட்டிலும் வயதான பெரியவர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று இருவருமே நினைக்க ஆரம்பித்தனர்.

காயத்ரிக்கு சிறு வயதிலே அவள் பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்து விட அவளின் உறவினர்களால் ஹோமில் சேர்க்கப்பட்டாள். அந்த ஹோமிலே படித்து வேலைக்கும் சென்று வந்தாள்.

அப்போது தான் சரவனணை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து இருவரும் விரும்பி கல்யாணம் செய்து கொண்டார்கள். பாசத்திற்காக ஏங்கும் மனம் உடையவன் சரவணன். தாய் தந்தையும் இப்போது இல்லை, அதுவும் வளர்ப்பு பெற்றோர் தான்

அதனால் அந்த முதிய தம்பதி கவினுடன்  கதை சொல்லி பாட்டு பாடி விளையாடி கொண்டிருப்பதைப் பார்த்த போது, மிகவும் சந்தோஷமாக உணர்ந்தார்கள் சரவணனும், காயத்ரியும்

அப்படி அவர்கள் சந்தோஷமாக பேசும் போதே கண்கள் கலங்குவதும் புடவை தலைப்பால் துடைப்பதுமாக இருந்தார் அந்த அம்மா.

முதியவர்கள் இருவரும் இவர்களை பார்த்து, “நீங்க படுத்துக்கோங்க, குழந்தையை நாங்க பார்த்துகிறோம்” என்று சொன்னதை கேட்டு காயத்ரிக்கும், சரவணனுக்கும் எதோ ஒரு உணர்வு எட்டி பார்த்தது.

ஸ்டேஷனில் வண்டி நின்றது. காசியில் கோயிலுக்கு போக ரெடியானார்கள் எல்லோரும்.

சரவணன் கேட்டான், “யாராவது வருவார்களாமா? உங்களை தனியாக விட்டு போக மனமில்லை” என்று கூறினான்.

“எங்களுக்கு யாரும் இல்லப்பா. நாங்கள் இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னாள் இங்கு ஒரு பொருளை தொலைத்து விட்டோம் அதை தேடித்தான் இப்போது இங்கு வந்துருக்கோம். கிடைச்சா சந்தோஷம், இல்லைனா இந்த காசியிலேயே வாழ்நாள் முழுதும் இருந்துடலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்” என்றாள் அந்த அம்மா.

“அப்படி என்னமா தொலைச்சீங்க, சொல்லுங்க. சொன்னால் நானும் உங்களுக்கு தேடுவதற்கு என்னால் முடிந்த உதவி பண்ணுகிறேன்” என்றான் சரவணன்.

இதைக் கேட்ட அந்த நிமிடம் இருவரும் ஓவென்று அழத் தொடங்கினர்கள். 

“அம்மா அழாதீங்க சொல்லுங்க எனக்கு கஷ்டமா இருக்கு” என்று அவர்களை சமாதானபடுத்தினர்கள் சரவணனும் காயத்ரியும்.

“நாங்கள் தொலைத்தது பொருள் இல்லப்பா, எங்கள் மகனை. என் பிள்ளையை இதோ இந்த காசி ஷேத்ரம், இங்க தான் தொலைச்சிட்டோம்” என்று கண்ணீர் வடித்தார்கள் இருவரும்

இதைக் கேட்ட சரவனணுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. 

“நீங்க வாங்கம்மா, என்னை உங்க மகன் போல நினைச்சிக்கோங்க, வாங்கம்மா” என்று இருவரையும் கை பிடித்து அழைத்து சென்றான் சரவணன்.

காசி விஸ்வநாதன் கோயிலில் பூஜை முடிந்து முறைப்படி அஸ்தியையும் கரைத்து கரை ஏறி வரும் போது, அவன் மனதில் வளர்ப்பு தந்தையின் நினைவுகள் வந்து நிழலடியாது. 

பாசத்திற்கும் அன்பிற்கும் குறை இல்லாமல் வளர்த்த தந்தை நல்ல வேலை கிடைத்து நல்ல நிலைமையில் இருக்கும் போது திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் இறந்துப் போனர். அதனால் மிகவும் மனம் வருத்ததோடு இருந்தவனுக்கு இந்த தம்பதிகளை தனியாக விட மனம் வரவில்லை சரவணனுக்கு.

இவர்களை ஏன் நான் என்னோடு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கேள்வியோடு கரையேறி வந்த சரவணன் காயத்ரியை அழைத்தான், விஷயத்தை சொன்னான். காயத்ரிக்கு அளவில்லா சந்தோஷம், கவினுக்கு அதை விட சந்தோஷம். 

“அம்மா,  அப்பா… நீங்க என் கூட வாங்க, நாங்க உங்களை பார்த்துகிறோம். எனக்கு அம்மா அப்பா வேணும், உங்களுக்கு உங்கள் மகன் வேணும். அது ஏன் நானா இருக்க கூடாது, வாங்கம்மா” என்று அழைத்த அடுத்த வினாடி, சரவணனின் கை பிடித்து தோளில் சாய்ந்தார்கள் இருவரும். 

அங்கு எல்லோர் கண்களிலும் ஆனந்த கண்ணீர். அவர்கள் இருவரையும் அணைத்தபடி காயத்ரியையும், கவினையும் சேர்த்து கொண்டு ‘இனி இவர்கள் தான் என் உலகம்’ என்று கங்கை கரையை கடந்து வரும்போது, அவனின் வளர்ப்பு தந்தையின் ஆன்மா மிகவும் சந்தோஷத்துடன் ஆசிர்வதித்தது 

ஏனெனில் அவர் சரவணனை கண்டெடுத்ததும் இதே காசியில் தான். இப்போது அவனை பெற்ற தாய், தந்தையோடு சேர்ந்து போவதை பார்த்து அந்த அஸ்தி பானை மலர்களோடு தண்ணீரில் அசைந்து, அசைந்து சென்றதை பார்க்கும் போது, சரவணனை ஆசிர்வாதம் பண்ணுவது போல் இருந்தது.

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இரு மகள்கள் (சிறுகதை) – ✍ தமிழ்செல்வன் ரத்தினபாண்டியன், சென்னை

    வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை