2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தினமும் செல்லும் சாலை தான்.
“இன்று ஏனோ சாலையோடு சேர்ந்து நிற்கும் அந்த மரங்களும், கூட அழகாக தெரிந்தது”..
“விஜயா” வின் கண்கள் அங்கும் இங்குமாய் அலை பாய்ந்தது.
தினமும் ‘அதிகாலையில் 7 மணிக்கு வரும் விஜயா’, இன்று ஏனோ இவ்வளவு சீக்கிரம் விஜயம் செய்வது யாருக்கென புரியாத அவளின் தோழி அவளையே உற்று உற்று பார்க்கிறாள்.
“விஜயா” அவளைச் சற்றும் கண்டு கொள்ளாமல், வீதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ முழுகை சட்டையுடன் தலையை எடுத்து வாரி சீவி மின்னும் கைக் கடிக்காரத்துடன் தோளில் ஒரு தோல் பையை சுமந்து பளபளப்பான கன்னத்தோடு சிரித்தாள் வலப்புறமாய் ஒரு குழி விழுவதை பார்த்து விழுந்த பெண்கள் ஏராளம்” , ஆனால் அவனோ யாரையும் கண்டுக் கொள்ளாது அமைதியாக வந்து ‘ நிழற்குடைற்கு’ அருகில் நின்றான் “ ராஜா”
உதட்டில் ஒரு புன்னகை, புரிந்தால் விஜயாவின் தோழி, “லதா” அதற்கு எந்த சலசலப்பும் இல்லாமல் அவன் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய பேருந்து வந்து விட்டதா?
ரோட்டை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தான்..
அந்த வழியாக வந்த ஒரு பாட்டி சற்று “மூக்குக்கண்ணாடி” யை உயர்த்திய படி ராஜாவின் அருகில் வந்து நின்றாள்….
‘இந்தப்பா’ தம்பி, தெற்குவாசல் பஸ் எப்ப வரும் சொல்லும்மா?
அதுவா பாட்டி இன்னும் 15 நிமிசத்துலா வரும் பாட்டி.
மெதுவாக இந்த கம்பியை பிடித்து நில்லுங்கள் பஸ் வந்ததும் உங்களா? ஏற்றி விடுகிறேன்.
“விஜயா” பலவிதமான பரவசத்துடன் கண் கொட்டாது ராஜாவை பார்த்து கொண்டிருந்தாள்..
ராஜா, அதை பார்த்தும் பார்க்காது நின்றிருந்தேன்.
வழக்கம் போல வர வேண்டி பஸ் வருவதற்கு இன்னும் தாமதமானது பஸ் ஸ்டாண்டு எதிரில் வெண்ணிலா டீ கடையில் டீ தவிர்த்து திரையிசை பாடல்களை கேட்பதற்காகவே ஒரு கூட்டம் டீ குடிக்க வரும்..
செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண்ணொருத்தி
காதலனை தேடி வந்தால் கண்ணில் வண்ண மை எழுதி
என்று அனைவரின் செவிகளுக்கும் விருந்தாளிக்க அதில் பஸ் வருவதற்காக நின்றுக் கொண்டிருந்தா? களைப்பு தெரியாது சலிப்பில்லாமல் பாடலை பாடி தீர்த்தது அந்த வானொலி.
அன்றைக்கு மட்டும் ஏனோ தெரியாது காதல் பாடல்கள் நான்கைந்து கடந்து நின்றது….
“விஜயா” வின் மனமோ ! அந்த இடத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள அழகான இயற்கையை நோக்கி பயணித்தது….
ராஜாவோ எதிரிலுள்ள டீ கடைக்கு சென்று ஒரு டீ என்றதும்…
கடைக்காரர் ஸ்பெஷல் டீயா, சாதா டீயா எது போடா எ?
எனக்கு ஸ்பெஷல் டீ ஒன்னு போடுங்கா என்றான் ராஜா
டீயை வாங்கி மெதுவாக குடிக்க ஆரம்பித்தான்….
சற்று பஸ் ஆரன் சத்தம் கேட்டதும் அனைவரும் வேக வேகமாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நகர்ந்தன…
ராஜா குடித்த டீ க்கு காசை கொடுத்து விட்டு வேகமாக வந்தான்… பிறகு அந்த பாட்டியை பஸ்ஸில் ஏற்றி விட்டு தானும் ஏறினான்…
அன்று ஏனோ பஸ்ஸில் தாரளமாக அதிக இருக்கைகள் காலியாக இருந்தது…
அடுத்தடுத்து “ஸ்டாப்” களில் கூட்டம் கூட்டமாக ஏறினார்….
எப்படியாவது தனது காதலை ராஜாவுக்கு கூறிவிட வேண்டுமென்று அந்த பாட்டிக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தாள் விஜயா…
ராஜா ஏதும் தெரியாது பஸ் பாடும் இளையராஜா இசைக்கு தன் கையால் மெட்டு போட்டு கொண்டிருந்தான்…
கையில் ஒரு காகிதத்தை கசக்கி கொண்டு முகத்தில் பதட்டத்துடன் விழிகளை மேலும், கீழுமாய் நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயா…
வேறு வழியில்லாமல் “என்னங்க என்னங்க” வென ராஜா அழைத்தாள்… உடனே திரும்பி ராஜா கண்களை உயர்த்தி கண்களாலே என்ன? என் கேட்டான்…
அது வந்து கைகளில் வைத்திருந்த ஒரு லெட்டரை அவனிடம் கொடுத்தாள்….
அவன் அதை படித்து விட்டு பதில் பேசாது கீழே இறங்கினான்..
விஜயா இவருடைய பதிலுக்காக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…. அவன் பதில் பேசாது இறங்கியத்தை பார்த்து ஒரு வேளை அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ? அதான் கண்டுக்காம போறான்…
என்று தனது வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்…. ஆனால் மனம் அதை ஏற்க மறுக்காது கண்களில் நீர் வழிய தொடங்கியது….
அவள் தோழி விடு தான் அவன் கண்டுக்காம போறேன்… அவனுக்கு உன்ன பிடிக்கலா? போல தெரிகிறது என்றாள்…
உடனே விஜயா சில வருடங்களுக்கு முன்பு ராஜாவை எங்கு சந்தித்தாலே எந்த நினைவலைக்குள் மெதுவாக செல்ல தொடங்கினாள்…
ராஜாவோடு கல்லூரி ஒன்றாக சேர்ந்து படித்தவர்…. அப்போதெல்லாம் பெரிய அளவில் காதல் ஒன்னு வரவில்லை விஜயாவுக்கு, ஆனா! ஒரு வித ஈர்ப்பு மட்டும் இருக்கும் இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளவில்லை….
ஏன்னா! ‘ராஜா’ வுக்கு ‘ராதா’வை தான் பிடிக்கும் இருவரும் “உயிருக்கு உயிராக” விரும்பினார் ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ராதா வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள்….
ராஜாவும், ராதாவின் பெரியதாக கோபத்தைக் காட்டிக் கொள்ளாது…. தன்னை தானே காயப்படுத்திக் கொண்டான்….
விஜயா வீட்டிற்கு, பக்கத்து வீடு தான் ராஜா வீடு அவன் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் துயரப்பட்டு கொண்டிருந்த போது விஜயா நிறைய ஆறுதல் சொல்ல நினைக்கும் போதெல்லாம் அவளின் பயமானது அவளைத் தடுத்தது….
ராஜா “அப்பா மிகவும் நல்ல மனிதர்”, அவர் ராஜாவிற்கு சில மாதங்களாக அறிவுரைக் கூறி அவனை நன்றாக பார்த்துக் கொண்டார்…
ராஜாவும் தனது இயல்பு நிலைக்கு திரும்பி, அவனுடைய வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான்….
அப்போது ஒரு நாள் எதிர்பாராத விதமாக நானும், அப்பாவும் ஒரு வேளையாக தெற்கு தெருவிற்கு சென்று கொண்டிருந்தா போது திடீரென என் அப்பா மயங்கி கிழே விழுந்தார்….
அங்கு இருப்பவர்களை உதவிக்கு அழைத்த போது ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை…. ஒரு வேளையாய் அந்த வழியாக போன ராஜா என் கல்லூரி நாட்களில் கூட என்னைப் பார்த்து பேசியதில்லை….
சட்டென்று என்னாயிற்று அப்பாவுக்கென கேட்ட போது திடீரென மயங்கி விழுந்தார் என்னவென்று தெரியவில்லை…
சரி… வா ஆஸ்பத்திரி பக்கத்தில், தான் இருக்குவென்று வேகமாக அவரை தூக்கி நடந்து சென்று அட்மிட் செய்து அவரின் உயிரைக் காப்பாற்றினான்….
அதிலிருந்து சில நாட்களாக விஜயா வீட்டிற்கு வருவது அப்பாவை விசாரிப்பது, அவரிடம் ஜாலியாக பேசி விட்டு செல்வான்….
விஜயா அதிலிருந்து அவன காதல் கொண்டு அவன் வேலை பார்க்கும் இடத்திலேயே வேலைக்கு சேர்ந்தாள்….
ஆனால், ராஜாவுக்கு எல்லாம் தெரியும் தெரியாது போலவே இருந்தான்…
அவனால் “ராதாவை மறக்க முடியவில்லை”, போல அதான் பதில் பேசாது சென்று விட்டான் நினைக்கிறேன்…. விஜயா மனத்திற்குள்ளே நினைத்துக் கொண்டு வேலையைச் செய்து கொண்டிருந்தாள்….
ராஜாவோ அவள் கடிதம் கொடுத்தை பத்திரமாக வைத்து அதை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்…..
ராஜாவின் மனத்திற்குள் சில பிம்பங்களாக கல்லூரி நாட்களிலிருந்தே விஜயா நன்கு ராஜாவிற்கு தெரியும்….
இருந்தாலும் அவளிடம் பேசுவதற்கு பயம்…. ஏன்னென்றால் அவள் எங்க பக்கத்து வீட்டுக்காரின் பெண்.. மிகவும் அமைதியாவள்…
யாரிடமும் பேச மாட்டாள்…. இவள் ராதாவிற்கு மிகவும் நெருக்கமாக தோழி முதன் முதலாக நான் காதல் கடிதம் எழுதி இவளுக்கு கொடுத்து கடிதத்தை மாற்றி அவளுக்கு கொடுத்து விட்டாள்…
அதில் மாறி மலர்ந்தது தான் அந்த காதல் … அதனால் தான் அதை சில நாட்களுக்கு பிறகு புரிந்து கொண்ட ராதா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள்….
அப்போது இருந்தே இவளை தான் நான் உயிருக்கு உயிராக நேசித்துக் கொண்டிருக்கிறேன்…
அதை இவள் புரிந்து கொள்ள இவ்வளவு வருடமாகி உள்ளது….
அதான் சற்று சுத்த விட்டு பிறகு விருப்பத்தை தெரிவிப்போம்…. என்று தனக்குள்ளேயே பேசி சிரித்துக் கொண்டான் ராஜா….
மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது ராஜா விஜயாவின் பின்னால் சென்று அவளுக்கு தெரியாமல் அவள் தோழி லதாவிடம் ஒரு கடிதத்தை கொடுத்தான்…
அதில் “விஜயா என் காதலி”, என்று குறிப்பிட்டு இருந்ததை பார்த்த லதா விஜயாவிடம் கூறினாள்….
அவளின் முகமானது ராஜாவின் பார்க்கம் திரும்பியது… விழியானது ஆனந்தத்தில் கண்ணீரை வடித்தது…
ராஜா பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை உள் வாங்கி துடைத்த கண்ணீரில் காதலை வளர்த்தாள்….
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings