நாடா / ரிப்பன் பகோடா என்பது ரிப்பன் தேன்குழல் என்றும் அழைக்கப்படும். இது பண்டிகைகளுக்கு மிக எளிதாக சுவையாக செய்ய கூடிய கார வகை
தேவையான பொருட்கள்
- கடலை மாவு – 2 கப்
- அரிசி மாவு – 2 கப்
- பெருங்காய பொடி – சிறிதளவு
- கார பொடி – 1/2 ஸ்பூன்
- வெண்ணெய் – 1 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- பொறிப்பதற்கு தேவையான எண்ணெய்
செய்முறை
- அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணையை சூடு செய்யவும்
- ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் கடலை மாவு, 2 கப் அரிசி மாவு, 1/2 ஸ்பூன் கார பொடி, 1 ஸ்பூன் வெண்ணெய், பெருங்காய பொடி, உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இலகுவாக பிசைந்துக் கொள்ளவும்.
- முறுக்கு பிழியும் அச்சில் நாடா அச்சை பொருத்தி எண்ணெய் தடவிக் கொள்ளவும்
- முறுக்கு பிழியும் அச்சில் பிசைந்த மாவை நிரப்பிக் கொள்ளவும்.
- சூடான எண்ணெயில் மிதமான தீயில் ரிப்பன் முறுக்கை பிழியவும்.
- ரிப்பன் பகோடா முக்கால் பாகம் வெந்தவுடன் திருப்பி போட்டு வேக விடவும்
- எண்ணெயின் சல சல ஓசை நின்றவுடன் ரிப்பன் பகோடா எடுத்து எண்ணெய் வடிகட்டியில் எடுத்து விடவும்.
சுவையான மொறுமொறு நாடா/ரிப்பன் பகோடா ரெடி.
குறிப்பு
முறுக்கு பிழியும் அச்சில் கடைசியில் மீதம் இருக்கும் மாவு கொஞ்சம் இருந்தால், அதை சிறு சிறு உருண்டைகளாக குணுக்கு போல போட்டு பொரிக்கவும்.
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
கொஞ்சம் பொட்டுக்கடலை மாவும் சேர்த்துக்கலாம். கரகரப்புக்கு உத்திரவாதம்.
Good suggestion. Thank you