மறக்க முடியாத தீபாவளி எனவும்
பறந்து சென்றது என் மனம் 1975க்கு
தலைதீபாவளி அமைந்தது எமக்கு
விலை கொடுத்தாலும் திரும்ப வராது.
பேருந்தினின்றும் இறங்கினேன் என்னவருடன்
பேருவகையுடன் எதிர்கொண்டழைத்தார் தந்தை
எந்தையின் கரம்கோர்த்து நடைபயின்ற எனக்கு
பிந்தை தொடர்ந்த கணவர் சிந்தையில் இல்லை.
ஈடில்லா பேரன்புடன் உரையாடியே சென்றோம்,
வீடு அடைந்ததும் என் கணவர் வினவினார்
என்னை மறந்தனையோ, நின்தந்தையைக் கண்டதும்?
என்றும் நினைவில் வாழ்பவரை மறத்தலுமாமோ?
மறக்க மனம் இயலவில்லை தோழி!
சிறக்க வாழ்ந்த நல்வாழ்வும் வளமும்
அவரால் அன்றோ அமைந்தது தோழி!
சிவபிரான் அருளால் எல்லாம் நலமே
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
GIPHY App Key not set. Please check settings