in ,

புவனா… ஒரு கேள்விக்குறி (சிறுகதை) – அர்ஜுனன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ஹேய் புவனா.. உன்னைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்..”

“சொல்லு விஜி..”

“நேத்து உங்க மேனேஜரை அசிங்கப்படுத்தி  அனுப்பிச்சிட்டியாமே..?”

“முதல்ல ஒரு திருத்தம் விஜி.. நான் தான் இப்போ இங்கே மேனேஜர்..”

“உங்க மேனேஜர் இரண்டு மாசம் மெடிக்கல் லீவு போட்டுட்டு போனதால உன்னை ‘இன்-சார்ஜ்’ ஆக போட்டிருக்காங்க..”

“இன்-சார்ஜ் ஆக தற்காலிகமாக போட்டாலும் மேனேஜர் கேபின்ல‌ உட்கார்ந்து அந்த போஸ்டுக்கு உள்ள வேலையையும், என்னோட வேலையையும்  சேர்த்து பார்த்துட்டு இருக்கேன்.. ஞாபகம் வைச்சிக்கோ விஜி..”

“ஹேய்.. கூல் டவுன்.. அந்த மேனேஜர் மேல உனக்கு அப்படி என்ன கோபம்.. புவனா?”

“கோபமெல்லாம் ஒண்ணும் இல்ல.. அந்த ஆளு ஏற்கனவே ஒரு பொம்பள பொறுக்கினு உனக்குத் தெரிஞ்சது தானே.. லேடி ஸ்டாஃப்பை அந்த ஆளு பார்க்குற விதமே வேறயா இருக்கும்.. “

“ஆமா..”

“அந்த ஆளு அவரோட மெடிகிளைம்‌ டாகுமெண்ட்ஸ்களை கொண்டு வந்து ஹெட் ஆஃபிஸ்க்கு அனுப்பனும்னு சொல்லி கேபினுக்கு வந்து என்கிட்ட கொடுத்தார்.. மெடிகிளைம் பார்க்கிறவங்க ஒரு லேடி ஸ்டாஃப்.. ஏற்கனவே அவங்க ஒருதடவை இவரோட பிஹேவியரை வார்ன் பண்ணியிருக்காங்க.. அதனால என்கிட்ட கொடுத்து அங்கே கொடுக்கச் சொன்னார்..”

“நீ என்ன சொன்னே..?”

“தப்பா ஒண்ணும் சொல்லல.. ஸார் அவங்கள உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே.. நீங்களே கொடுத்திடுங்கனு சிரிச்சிட்டே சொல்லி என் வேலையை பார்க்குற மாதிரி தலையை குனிஞ்சிக்கிட்டேன்.. அவ்வளவு தான்.. நான் செஞ்சது சரிதானே..?”

“ஹ.ஹா.. புவனா ஒரு கேள்விக்குறினு சரியா தான் சொன்னாங்க..”

“விஜி.. அதில புவனா என்பது அந்த கதாநாயகியின் பெயர்.. பேச்சு வாக்கில நான் ஆண் என்பதையே மறந்துட்டியே..?” என சொல்லி சப்தமாக சிரித்தான் புவனேந்திரன், தன் நண்பன் விஜயகுமாரிடம்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புத்தகத் திருவிழா (சிறுகதை) – ரேவதி பாலாஜி

    புத்தகம் (கவிதை) – ச. பூங்குழலி, வடசேரி தஞ்சாவூர் மாவட்டம்