எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
குழந்தை பிறப்பு:
“டே அஷோக் என்னடா குழந்தை பெத்துக்கப் போறயாமே உன் மேட் ஒத்துக்கிட்டாளா , லைசன்ஸ் வந்தாச்சா?”
“அப்ளை பண்ணி லைசன்ஸ் இப்பல்லாம் 2 மாசத்துலயே கிடைக்குது.”
“ஆபீசரை தனியா கவனிச்சிருப்பே.”
“என்ன இன்னும் 2023ல இருக்கயா? பிரைப்ன்ற வார்த்தையை டிக்ஷ்னரில இருந்தே எடுத்தாச்சு”
“ஆமாண்டா அந்த பீரியட்ல என் பர்த் சர்டிபிகேட் வாங்க அலையா அலைஞ்சு, அப்பறம் ருபீஸ் கொடுத்துதான் கிடைச்சதாம். அப்பா சொல்லி இருக்கார், ஞாபகம் இருக்கு.”
“அதான் இப்ப பிறந்த குழந்தை மேலயே DOB மார்க் பண்ணிடறாங்களே பெர்மனண்ட் மார்கிங்.”
“ஓகே பெஸ்ட் ஆப் லக், ரெண்டு மாசம் ஆனவுடனே எடுத்து பிரிசர்வ் பண்ணிடுங்க ரொம்ப இழுக்காம, இல்லைன்னா பக்கத்துல இருக்கற சென்டர்ல இடம் இல்லைன்னு வேற எங்கயாவது அனுப்பிடுவாங்க, குரோத் பாக்க அலையணும், ஓகே பிரேமாதானே இப்ப, என் வாழ்த்துக்களை சொல்லிடு”
பள்ளிப் படிப்பு:
அஷோக் தன் 3 வயது பெண் குழந்தை கிரேசியுடன் குளோபல் எஜுகேஷன் சென்டர்-5 போறான்.
அட்மின் மேனேஜர், “எஸ் மிஸ்டர் அசொக், யு ரிஜிஸ்டர்ட் லிட்டில் லேட். பேபி கைல மார்க் போட்டவுடனே ஆன்லைன் ரிஜிஸ்டர் பண்ணணும். நீங்க சாவகாசமா குழந்தைக்கு ஆறு மாசம் ஆனவுடனே ஆன்லைன்ல ரிஜிஸ்டர் பண்ணி இருக்கீங்க.”
அஷோக், “சாரி, இது என் ஃபர்ஸ்ட் பேபி சரியா யாரும் கைட் பண்ணலை, பேபி டெலிவரி எடுக்கறப்ப கொடுத்த ஃபோல்டர் எங்கேயோ மிஸ்பிளேஸ் ஆயிடுச்சு. அதை காபி வாங்க கோர்ட் பெர்மிஷன் போட்டு கிடைக்க லேட் ஆயிடுச்சு”
“ஓகே ஓகே நான் அட்மிட் கோட் அனுப்பியாச்சு, உங்க லக் எந்த சென்டர்ல கிடைக்குதோ அங்கே உடனே அக்செப்ட் பண்ணி சேத்துடுங்க, டிஸ்டன்ஸ், லொகாலிடினு லேட் பண்ணிடாதீங்க, பெஸ்ட் ஆப் லக். கீப் ஆன் செக்கிங் யுவர் ஃபோனோபேட்”
அவங்க ஒன் ரூம் காண்டோல இருந்து 35 மைல்ஸ் தள்ளி இருக்கற குளோபல் எஜுகேஷன் சென்டர்-14ல அட்மிஷன் கன்ஃபர்ம் ஆச்சு. பிரேமாவுக்கும், அஷோக்குக்கும் படு சந்தோஷம். காலனி நெய்பருக்கு 128 மைல் தள்ளிதான் அட்மிஷன் கிடைச்சதாம்.
தினசரி வாழ்க்கை:
ஏய் பிரேமா ஐ வில் பி லேட் டுடே, பிக் கிரேசி ஃபிரம் சென்டர் பிளீஸ்.
சாரி அஷோக், ஐ ஆம் அல்ரெடி கமிட்டட் . மிஸ் பண்ண முடியாது. புக் வித் புரொபஷனல் சைல்ட் கலெக்ஷன் பீப்பிள். அவங்க ரொம்ப நைஸ். நம்ம வந்தவுடனே வீட்ல டெலிவரி பண்ணிடுவாங்க.
பிரேமாக்கு ஆபீஸ் முடிஞ்சவுடனே செலிப்ரேஷன் சென்டர்ல டேட்டிங். திஸ் ஃபெலோ அஷோக் இஸ் போரிங் நவ்வ டேஸ்.
அந்த நெதர்லாண்ட் பெண் அஷோக்கை தன் வீட்டுக்கு டின்னர்க்கு கூப்டிருக்கா. ஷி இஸ் சச் எ டால். அதை மிஸ் பண்ண அவனுக்கு மனசில்லை. குழந்தையை இந்த கம்பெனிக் காரங்க சேஃபா கலெக்ட் பண்ணிடுவாங்க, நோ வொரீஸ்.
ஆச்சு பிரேமா கூட 5 வருஷமா இருந்தாச்சே, ரிகார்ட்தான். அவளுக்கும் நம்ம மேல மரியாதை இருக்கு, ஆன பழைய ஈர்ப்பு, ஆசைல்லாம் இல்லை. ஆஃப்டர்ஆல் ஷி டூ நீட்ஸ் சேன்ஜ் இன் லைஃப்.
எனக்கு ஞாபகம் இருக்கு முந்தியெல்லாம் அம்மா வேலைக்கும் போவா வீட்லயே குக்கிங் பண்ணுவா. எப்பவாவது வெளில போய் சாப்பிட்டுருக்கோம். இப்ப யாருமே வீட்ல சமைக்கறது இல்லை. ஒரு நாளைக்கு ஒரு மெனு வீட்டுக்கு டெலிவரி ஆயிடுது. மொத்தமா டோக்கன் புக் வாங்கி தினம் கொடுக்கணும். ஆனா தினம் ஃபிரெஷ் ஃபுட் டயத்துக்கு வந்துடும்.
பாப்பாவை 16 வயசு வரை கவர்ன்மென்டே பாத்துக்கும், ஃபுட் படிப்பு எல்லாம். அப்பறம் அவங்களே அவங்களை பாத்துப்பாங்க, எங்களுக்கு ஒரு கவலை இல்லை. என்ன இதுக்கெல்லாம் சேத்து சம்பாதிக்க ஆரம்பிச்சவுடனே கிட்டத்தட்ட பாதி சம்பளம் டாக்ஸ்ல போயிடும்.
65 வயசானவுடனேயே கவர்ன்மென்ட் ஹோம்ல போய்தான் இருக்கணும். அங்கே இருக்கறவங்கதான் இறுதி வரை உறவு.
போக்குவரத்து:
பெட்ரோலிய பொருட்களின் தேவை கணிசமாக குறைந்தாச்சு, கிட்டத்தட்ட தேவை இல்லாமலே போச்சுனு வச்சிக்கங்களேன். சூரிய ஒளி, மற்றும் மின்சாரத்தால் எல்லாம் செயல்படுது. மின்தடை என்ற பேச்சே கிடையாது. குடி தண்ணீர் மட்டும் இப்போது பிரச்சனை, ரேஷன்தான் கொஞ்ச நாளைக்கு. கடல் நீரை குடி நீராக்கும் பிராஜக்ட் இன்னும் நடக்குது.
சின்ன சின்ன கிராமங்கள் கூட வசதியான ரயில்களால் இணைச்சாச்சு. பஸ், டாக்சி இன்னும் இருக்கு ஆனா அதிகம் உபயோகிப்போர் இல்லை. ஆட்டோ ரிக்ஷா பேருக்கு எங்கயோ ஒண்ணு ரெண்டு இன்னும் இருக்கு. பெட்ரோலியப் பொருட்களுக்கு பதில் அரபு நாடுகளில் இருந்து குதிரைகள் வருகின்றன.
குதிரை போக்குவரத்துக்கு நகர சாலைகளில் தனி டிராக். இப்போதெல்லாம் உயர்ஜாதி குதிரை வைத்திருப்பவர்கள் பெரும் தனவந்தர்களாக மதிக்கப்படுகிறார்கள்.
முதியோர் இல்லத்தில முதியவர்கள, எங்க இளம் வயசுல தியேட்டர்ல சினிமா பாப்போம், ஹீரோக்களை கொண்டாடுவோம், அவர்களை பார்ப்பது பேசுவது பெரிய பெருமைக்குரிய விஷயம் எனப் பேசுகிறார்கள். இப்ப சினிமா குறைஞ்சு போச்சு, நாடகம், லைவ் ஷோனு ஆயிடுச்சு. நடிகர்களுக்கு அவ்வளவு வருவாய் இல்லை. எல்லாம் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்தான்.
ஏய், அஷோக் எந்திரி எந்திரி என்ன கனவு, ரம்பா மேனகையா, இல்லை சினிமா நடிகையா? சனிக்கிழமைன்னா பிரண்ட்ஸ் கூட ஆட்டம் போடறது, ஞாயித்துக்கிழமை 11 மணி வரை தூங்கறது. பாப்பாவை பாட்டுக் கிளாஸ் கூட்டிண்டு போகணும்.
பாலு மாமா ஃபேமிலி லன்ச்சுக்கு வரா நிறைய வேலை இருக்கு. பிடிச்சு உலுக்கின பிரேமாவை கையை பிடித்து படுக்கைக்கு இழுத்தான் அஷோக்.
“அச்சோ போறும் விடு அஷோக், இப்பதான் குளிச்சேன்,”
அவன் நெற்றியில் சின்ன முத்தமிட்ட பிரேமா, அவன் பிடியிலிருந்து விடு பட்டு அன்புக் கணவனை செல்லமாக ஒரு அடி கொடுத்து விட்டு அவனுக்கு காபி கலக்க சமையலறைக்கு ஓடினாள்.
காலங்கள் மாறலாம், அன்பு, காதல், பாசம் என்றும் மறையாது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings