2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘அட்டிபெலே’ தெரியுமா, அது எங்க ஊர். சின்னதுதான், ஆனா ரயில்வே ஸ்டேஷன் உண்டு. பெங்களூர் போற டிரெயின் நிக்கும். என் வீடு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிதான்.
வீட்டு வாசப்படில உக்காந்து தினம் போற ரெயில்களை பாக்கறதுல ஒரு சந்தோஷம் எப்பவும். 5வது வரை படிக்க ஸ்கூல் உண்டு எங்க ஊர்ல, அதுக்கப்பறம் ஹைஸ்கூல் காலேஜ்லாம் ஹொசகோட்டேலதான். சைக்கிள்ல போயிடலாம், 10 கிலோ மீட்டர் கூட இல்லை.
ஐய்யோ நான் யாரு சொல்லலை பாத்தீங்களா? நான் சித்ரா, எங்கப்பா எங்க ஊர் ரெயில்வே ஸ்டேஷன்ல, பெரிய வேலை… பாயின்ட்ஸ் மேன்.
ஸ்டேஷன் பக்கத்துலயே குவார்டர்ஸ். எஸ்.எம் வீடு மாதிரி பெரிசு இல்லை, சிறுசுதான். நான் ஒரே பொண்ணுதான். அப்பா செல்லம். அம்மாதான் ரொம்ப கடூஸ் இத்தாளே.
சொல்ப சொல்ப கன்னடம் வரும் என் தமிழ்ல, பொறுத்துக் கொள்றீ. ஸ்கூல் லீவ்ல ஒரு வருஷம் நான் ஓசுருக்கு அத்தை வீட்டுக்கு போவேன், இன்னொரு அத்தை மல்லெனஹள்ளி. அவங்க பொண்ணு காயத்ரி என்னை விட ஒரு வயசு சின்னவ. அவ கருப்பா இருப்பா, சண்டை போடுவா எனக்கு பிடிக்காத்.
ஓசூர் அத்தைக்கு ஒரே பையன் மாதவ், ரொம்ப அமைதி, என் கூட பேசக் கூட ரொம்ப வெக்கப் படுவான். அவனை சீண்டறதுல மஜா பர்த்ததே.
அத்தை மாமாக்கு கூட என் மேல ரொம்ப பிரியம். பெரிசா போயி எங்க மாதவை, மதுவே மாடிக்கோம்பாங்க. நன்கேனு கொத்தில்லாப்பா.
வருஷம் ஓடறது, இப்ப தமிழ் நல்லா வர்து. நான் 12வது படிக்கறப்ப ஓசூர் மாமா திடீர்னு இறந்துட்டாங்க. நானு அப்பா, அம்மா எல்லோரும் நைட் டிரெயின்லயே போனோம். அத்தையை சமாதானம் பண்றதுக்குள்ளே அப்பாவுக்கு சாக்கு சாக்காயித்து. மாமாவோட கடைசி ஆசையாம் மாதவ்க்கும், எனக்கும் மதுவே மாடி நோட பேக்குனு.
அப்பா, “நீ கவலைப்படாதே, சித்ரா 12வது முடிக்கட்டும், மாதவ் டிகிரி அடுத்த வருஷம் முடிச்சு வேலைக்கு போனவுடனே கல்யாணம் வச்சிப்போம்”னு. எனக்கொண்ணும் ‘தொட்ட’ மறுப்பு எதுவும் இல்லை மாதவ் நல்லாதான் இருப்பான். இப்ப இன்னும் ரொம்ப வெக்கப் படறான் மாதவ், நேரா பாக்கறது கூட இல்லை.
ஊருக்கு திரும்பறப்ப, ரகசியமா மேல் கைல நறுக்குனு ஒரு கிள்ளு கிள்ளிட்டு வந்தேன், பாவம் ரொம்ப வலிச்சிருக்கும். ஏன்பா கிள்ளினேனு கேட்டான். அப்பதான் என் ஞாபகம் எப்பவும் இருக்கும். சீக்கிரம் வேலைக்கு போ. வேறே எவளையாவது பாத்தே கொன்னுடுவேன், பர்த்தீனி. பாவம் தூரமா போய் திரும்பிப் பாத்தப்ப கூட கிள்ளின இடத்தை கையால தேச்சிட்டிருந்தான்.
12வது பாஸ் மாடித்தேனே, மாதவ்க்கு பங்களூர்ல கெலசா சிக்கித்து. அத்தை கொஞ்சம் அப்பாவுக்கு நெருக்கம் கொடுத்தா. ஆறே மாசத்துல பசவன்குடி தேவஸ்தானதல்லி மதுவே ஆயித்து. அப்பாவுக்கு இவ்வளவு சீக்கிரம் எனக்கு மதுவே மாடலிக்கி இஷ்டம் இல்லா. எப்படியோ அத்தை பிடிவாதம் பண்ணி கல்யாணம் தானே? அது முடிஞ்சது.
இப்ப பெங்களூர் மல்லேஸ்வரத்தில சின்ன ஃபிளாட், பாத்திருக்கானாம். என் பிரியமான அட்டிபெலே ஊர், இந்த ரெயில் சத்தம் அடிக்கடி கேக்கற வீடு, எல்லாத்தையும் விட்டு போகணுமா? அதோ தடதடனு ஓடற சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சத்தம். இனிமே தினம் இதை கேக்க முடியாதே.
மூணே மாசம்தான். பெங்களூ்ர்ல கல்யாணம் பண்ணினதுக்கு அப்பறம், மாதவ்க்கு வெளிநாடு போக ஆபீஸ்ல வாய்ப்பு. அவனுக்கு என்னை விட்டு போகவும் மனசில்லை, வெளிநாடு போற வாய்ப்பை விடவும் மனசில்லை.
நானே தைரியம் சொன்னேன் 6 மாசம்தானே ஹோகி பானு. என்னை அட்டிபெலாக்கு டிரெயின் ஏத்த கூட வந்தான். எனக்கு உள்ளூர மாதவை பிரியற வருத்தம் இருந்தாலும் என் ஊருக்கு என் அப்பாகிட்ட போறதுல சந்தோஷம்தான்.
நான் தனியா ஊருக்கு வந்ததுல அப்பாவுக்கு வருத்தம் நான் சமாதானப்படுத்தினேன், குட்டி மாதவ் வயித்துல இருக்கறதை கேட்டு அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் சந்தோஷம்.
“மாப்பிள்ளை லண்டன் போறாறா, அமெரிக்காவா?”னு அப்பா கேட்டார்.
“இல்லைப்பா இவர் கெமிகல் என்ஜினியர் ஆச்சே பாலஸ்தீனம்ன்னு தேசம் அதுல ‘காசா’ னு ஒரு சிடில கெமிகல் பிளான்ட் மெஷினரி இன்ஸ்டால் பண்ண போயிருக்கார் 6 மாச பிராஜக்ட், அடுத்த வருஷம் அதாவது 2024 பிப்ரவரி வரை அங்கே இருப்பார். மார்ச் முதல் வாரம் வந்துடுவார்”
அப்பா, “காசா – ஊர் பேரே கேட்டதில்லையே, எந்த கன்ட்ரில இருக்கு? யூரோப்பா?”
“போப்பா இது ‘பாலஸ்தீனத்துல’ல இருக்கு, இஸ்ரேல் பக்கம் அங்கே எப்பவும் ஹமாஸ்னு தீவிரவாதிகள் போராட்டமாம் அதான் என்னை கூட்டிட்டு போகலை”
சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வழக்கத்தை விட வேகமா போற மாதிரி, படபடனு மெஷின்கன் சுடற மாதிரி ஒரே சத்தம். சித்ரா வயிற்றை புரட்டியது இதுவரை அறியாத ஒரு பயம்.
‘குட்டி மாதவ் வயித்துல இருக்கறதாலயா? ஏன் இப்படி இனம் தெரியாத பயம் வருது திடீர்னு. காத்திருக்கேன் இன்னும், இஸ்ரேலில் போராமே, ஆயிரக்கணக்கில் சிவிலியன்களை இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை ராணுவம் மீட்கப் போராடுதாம். பகவானே என் மாதவ் முழுசா வரணும், நீங்களும் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்களேன். செய்வீர்களா?’
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings