அரை வேக்காடு என்றால் என்ன?
அரை வேக்காடு என்பது அறிவு. அதாவது, ஒரு விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் அதன் பற்றி மிகுந்த ஆதாரங்கள் அல்லது சான்றுகளைப் பரிசோதிக்காமல் அதைப் பற்றி கருத்து வைப்பதை குறிக்கும்.
அரை அறிவின் விளைவுகள்:
பெரிய தவறுகள்:
அரை அறிவு கொண்டவர்களுக்கு தங்கள் கருத்துக்கள் தவறானவையாக இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும். இது பெரும்பாலும் பிறருக்கு தீமையான முடிவுகளை ஏற்படுத்தும்.
பொதுவாக மந்திரமான எண்ணங்கள்:
அரை அறிவு பொதுவாக அந்த விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ளாத தன்மையை கொண்டிருக்கும். இதனால், சில சமயங்களில் அறிவு தவறாக அல்லது வெறுமனே ஊக்கமளிக்கும் விதமாக பரப்பப்படும்.
தவறான முடிவுகளுக்கான காரணம்:
அரை அறிவு கொண்டவர்கள் எளிதாக அவசியமான விசாரணைகள் செய்யாமல் முடிவுகளை எடுக்கிறார்கள், இது தவறான முடிவுகளை ஏற்படுத்த முடியும்.
அரை அறிவை தவிர்ப்பது எப்படி?
முழுமையான ஆராய்ச்சி செய்யுங்கள்:
எந்த விஷயத்தையும் தெளிவாக புரிந்துகொள்ள கையாளவேண்டிய முதன்மையான வழி அது தொடர்பாக முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
விசாரணை செய்யுங்கள்:
எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பிடுங்கள்:
உங்களிடம் உள்ள தகவல்களை தொடர்ந்து பரிசோதித்து, அனைத்து கோணங்களையும் பார்க்க வேண்டும்.
அரை அறிவை வெளிப்படுத்தும் வகையில் சொற்றொடர்கள்:
“அது ஏதோ ஒரு… விஷயம். ஆனா, முழுசா தெரியல.”
“கொஞ்சம் தான் ஞாபகம் இருக்கு. மீதி… மறந்து போச்சு.”
“அது இப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா, உறுதியா சொல்ல முடியாது.”
“அவங்க சொன்னாங்க… என்ன சொன்னாங்கன்னு சரியா தெரியல.”
“அந்த இடம்… ஆமா, அந்த இடம். அங்க ஏதோ நடந்தது.”
“இது… இது, ஒரு… ஒரு வகை பொருள்.”
“அது ஒரு… சரி, விடுங்க, எனக்கு சரியா தெரியல.”
“அவங்க சொன்னாங்க… ஆனா, அது என்னன்னு எனக்கு புரியல.”
“அது ஒரு… ஒரு… சரி, மறந்துட்டேன்.”
“கொஞ்சம் தெரிஞ்ச மாதிரி இருக்கு, ஆனா… இல்ல, தெரியல.”
ஒரு நிறுவனத்திற்குச் சென்று வேலைக்கான விண்ணப்பத்தைட் தருகிறான் ஒரு இளைஞன். அதைப் பரிசீலித்த உயர் அதிகாரி கேட்டார், “ஏம்பா… சி.என்.சி.மெஷினை ஆபரேட் செய்வதோடு… ப்ரோகிராமிங் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தோமே… உனக்கு புரோகிராமிங் தெரியுமா?”
ஒரு சிறிய தயக்கத்திற்குப் பின், “ம்.. ம்.. தெரியும் சார்” என்றான் அவன்.
மற்ற தகுதிகளையும், அனுபவங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்களையும் ஆராய்ந்து விட்டு, சில சம்பிரதாயக் கேள்விகளுக்குப் பிறகு அந்த இளைஞனை வேலைக்கு அமர்த்துகிறார் உயர் அதிகாரி.
சில தினங்களுக்குப் பிறகு, அந்த இளைஞன் பணியாற்றும் துறைத் தலைவரிடமிருந்து ஒரு புகார் வர, நேரில் சென்று ஆராய்ந்த உயர் அதிகாரிக்கு ஒரே அதிர்ச்சி. அந்த இளைஞன் சி.என்.சி.மெஷினை ஆபரேட் செய்யக் கூடத் தெரியாமல் திணறி, விழி பிதுங்கி, பரிதாபமாய் நின்று கொண்டிருந்தான்.
“என்னப்பா… சி.என்.சி.மெஷின்ல… ஆபரேடிங்… புரோகிராமிங்… எல்லாமே தெரியும்ன்னு சொன்னாயே… இப்ப முழிக்கறியே… இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனில என்ன மாடல் சி.என்.சி.மெஷினை ஆபரேட் செய்தே?”
“அது வந்து… சார்… நான் லேத் மட்டும்தான் ஆபரேட் பண்ணியிருக்கேன்!… என் மெஷினுக்கு பக்கத்தில்தான் சி.என்.சி.மெஷின்!…அதன் ஆபரேட்டர் பக்கத்தில் நின்று அவர் ஆபரேட் பண்ணறதை தினமும் கவனித்திருக்கிறேன்!…அதனால ஓரளவுக்கு தெரியும்…அதான் அதை வெச்சு வேலைல சேர்ந்துட்டு அப்புறம்…போகப் போக கத்துக்கலாம்கற எண்ணத்துல…“தெரியும்”ன்னு சொன்னேன்..சார்!”
ஒரு விஷயத்தைப் பற்றி 95%க்கும் மேல் தெரிந்து வைத்திருப்போரை நிபுணர் என்று சொல்லலாம். மற்றபடி பல விஷயங்களில் மூக்கை நுழைத்து வெறும் 10% அல்லது 15% தெரிந்து வைத்துக் கொண்டு, நிபுணத்துவம் பெற்று விட்டதைப் போல் பிதற்றுபவர்கள் “ஆஃபாயில் அறிவாளிகள்” அதாவது அரை வேக்காட்டு அறிவாளிகள்.
மேற்கூறிய நிகழ்ச்சியில், சி.என்.சி,மெஷினைப் பற்றி வெறும் 10% தெரிந்து வைத்துக் கொண்டு “ஆபரேட்டிங்…புரோகிராமிங்…எல்லாமே தெரியும்” என்று அரைகுறை அறிவோடு பிதற்றி…விழி பிதுங்கித் திணறிய அந்த இளைஞன் ஒரு வகையில் ஆஃபாயில் அறிவாளி என்றால், அவனை பணிக்கமர்த்திய உயர் அதிகாரியும் இன்னொரு வகையில் ஆஃபாயில் அறிவாளிதான். முறைப்படி அந்த இளைஞனுக்கு சோதனை வைத்து அவனது உண்மையான அறிவினைத் தெரிந்து கொண்டு பணிக்கு அமர்த்தாமல், வெறும் வாய் வார்த்தைகளின் பேரில் பணிக்கு அமர்த்தியதும் தவறுதானே?
உண்மையில், இலட்சியத்தை நோக்கி செயலாற்றிக் கொண்டிருக்கும் பலர் கூட திடீரென்று, தடைப் பட்டு, “அடுத்து என்ன செய்வது?” என்று புரியாமல் குழம்பி நிற்பர். இதற்குக் காரணம், தான் செய்யப் போகும் செயலைப் பற்றி ஆழ்ந்து அறிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்ந்து வந்திருப்பதுதான். ஆழ்ந்த ஈடுபாடுதான் ஒரு பொருளை முழுமையாக அறிந்து கொள்ள உதவும். அவ்வாறான ஈடுபாடு இல்லாதவர்கள் அப்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுவதுமில்லை!…அறிந்து செயல் படுவதுமில்லை.
நுனிப்புல் மேய்ந்து கிடைக்கும் அறிவு என்பது பக்குவப் படாத அறிவாகத்தான் இருக்கும். இந்த “ஆஃபாயில் அறிவு” தான் “எல்லாம் எனக்குத் தெரியும்” என்கிற அசட்டு நம்பிக்கையை அவர்களுக்குள் ஏற்படுத்தி ஏதாவது அசந்தர்ப்ப சூழலில் மாட்டி விட்டு, துன்பப்பட வைக்கின்றது.
இந்த ஆஃபாயில் அறிவு எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர மகாபாரதத்தில் கூட ஒரு காட்சி உண்டு. சக்கர வியூகத்தில் புகுந்து சண்டையிட தனக்குத் தெரியும் என்கிற நம்பிக்கையில் எதிரிகள் உண்டாக்கிய சக்கர வியூகத்தினுள் நுழைந்து சண்டையிடுகிறான் அபிமன்யூ. இறுதியில், எதிரிகள் எராளமாய் சூழ்ந்து பெரும் தாக்குதல் நடத்த, இனியும் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்கிற நிலைமை வரும் போதுதான் உணருகிறான், தனக்கு சக்கர வியூகத்தினுள் நுழைய மட்டுமே தெரியும்…வெளியே வரத்தெரியாது என்பதை.
முழுமையான அறிவைப் பெற்று ஒரு துறையில் இறங்குபவர்கள் தொடக்கத்திலிருந்தே வெற்றியைப் பெறுகிறார்கள். மாறாக, “நமக்குத் தெரிந்திருக்கின்ற அளவே போதும்!..இதை வைத்துக் கொண்டு முதலில் களமிறங்குவோம்!…பிறகு அப்படியே அங்கிருந்தபடியே ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ளலாம்!” என்று குருட்டுத்தனமாக இறங்குபவர்கள் வழியில் எதிர் படும் பிரச்சினைகளைக் கண்டு பயந்து நடுங்கி…அவற்றைத் தீர்க்கும் மார்க்கங்கள் அறியாது…..அல்லல்பட்டு அவதிப்படுகின்றனர். இறுதியில், “வேண்டாம்டா சாமி…இது நமக்கு ஒத்து வராது!” என்று புறமுதுகிட்டு ஓடிவிடுகிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன?
ஆஃபாயில் அறிவுதான்.
சில மாணவர்கள் படிக்க வேண்டிய தருணங்களில் படிக்காமல் இருந்து விட்டு, தேர்வு நேரத்தில் அவசர அவசரமாக புத்தகங்களைப் புரட்டி விட்டு, ஆஃபாயில் அறிவோடு ஓடுவர். பிறகு, தேர்வு ஹாலில் வினாத்தாளைப் பார்த்து பரிதாபமாய் விழிப்பர். ஏனென்றால், அவர்கள் திரட்டி வந்த ஆஃபாயில் அறிவு பக்குவப்படாத அறிவு…அது ஒரு போதும் உதவாது. தினமும் வகுப்பில் முறையாக கவனித்து, வீட்டிற்குச் சென்று திரும்பத் திரும்ப ஊன்றிப் படிக்கும் போதுதான் முழுமையான அறிவு கிட்டும்.
சமீபத்தில் ஒரு பட்டி மன்ற நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டையார் பாடல்களைப் பற்றி ஆவேசமாய்ப் பேசிய ஒரு பேச்சாளர் மேற்கோள் காட்டிய பல பாடல்கள் பட்டுக் கோட்டையார் எழுதியவையே அல்ல. கூட்டத்தில் ஒருவர் எழுந்து அதனைச் சுட்டிக் காட்ட, பேச்சாளர் கூனிக் குறுகிப் போனார். நல்லவேளையாக நடுவர் தன் பேச்சுத் திறமையால் அதை சமாளித்து சுபமாய் முடித்து வைத்தார்.
இது எதனால் என்று ஊன்றிக் கவனித்தால், இதற்கும் காரணம் அந்த ஆஃபாயில் அறிவுதான்.
பொதுவாகவே, ஆஃபாயில் அறிவாளிகள் அடிப்படையில் பேராசை கொண்டவர்களாகத்தான் இருப்பர். அந்த பேராசை குணம்தான் அவர்களை அவசரப்படுத்தி… நுனிப்புல் மேய வைத்து… அரை வேக்காடாக்கி, இக்கட்டிற்கு இழுத்துச் சென்று விடுகிறது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings