2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அனைத்துத் தொலைக்காட்சி செய்திகளிலும் தலைப்பு செய்தி “இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் ‘அபூர்வ சகோதரிகள்’ செய்த அபார சாதனை” என்பதுதான். சகோதரிகள் சரஸ்வதி மற்றும் லட்சுமி இருவரும் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.
செய்திகளில் இரு பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரே குழப்பம் … “கல்யாணராமன் – சீதாலட்சுமி தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை ‘சரஸ்வதி’ மட்டுந்தான் ..! அப்புறம் எப்படி இன்னொரு பெண்ணும் காட்டுறாங்க …?!”
ஒரு சந்தேகம் வந்துவிட்டால் ஊருக்குள் யாருக்கும் தூக்கம் வராது இல்லையா …?! ஊரே கூடிவிட்டனர் அவர்கள் வீட்டிற்கு முன்.
கல்யாணராமன், சீதாலட்சுமி மற்றும் சரஸ்வதி வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி காப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தனர் …ஒருவாறு எல்லோருக்கும் கொடுத்த பின்னர் …செய்தியாளர்கள் பேட்டியைத் துவங்கினர்.
நிருபர் ஒருவர் … “இந்திய அளவில் முதலிடம் பெற்றமைக்கு உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள் …சரஸ்வதி நீங்க மட்டும் இருக்கீங்க…? எங்க உங்க சகோதரி லட்சுமி காணோம்….?”
“லட்சுமி வீட்டுக்குள்தான் இருக்கிறாள் …”
“பின்னே ஏன் வெளியே வரல…?”
அதற்குள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் சேர்ந்து கொண்டு … “நாங்க எப்போதும் சரஸ்வதி மட்டுமே பள்ளிக்கு போறது…வெளியே போறத பார்த்து இருக்கோம்…உங்களுக்கு இன்னொரு மகள் இருக்கிறதே எங்களுக்குத் தெரியாதே …?!”
சீதாலட்சுமியின் கண்கள் நிறைந்தன …வார்த்தைகள் வெளிவர வில்லை …சரஸ்வதியே பேசாத தொடங்கினாள் … “உங்கள் எல்லோருக்கும் ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) என்பவரை தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் …”
“தெரியும்… தெரியும் …உலகப் புகழ்பெற்ற புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர்…” என்றனர் கூட்டத்திலிருந்த சிலர்.
“அவருக்கு என்ன உடல் குறைபாடு என்று தெரியுமா ..?”
யாருக்கும் பதில் தெரியவில்லை…ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் …சிலர் கூகிளில் தேட ஆரம்பித்தனர்…
சரஸ்வதியே … “சரி நானே சொல்கிறேன் …தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் (amyotrophic lateral sclerosis – ALS)”
எல்லோரும் வியப்பில் இருக்க மேலும் தொடர்ந்தார் சரஸ்வதி … “இதே வகை நோயால் ஐந்து வயதில் பாதிக்கப்பட்டவள் என் சகோதரி லட்சுமி ….அவளை நினைத்து என் பெற்றோர்கள் தினமும் அழுதுக்கொண்டே இருந்தனர் ….எனக்கு ஐந்தாம் வகுப்பு வரை எந்த விவரமும் தெரியவில்லை…பள்ளிக்கு போய்விட்டு வந்து சக்கர நாற்காலியில் இருக்கும் சகோதரியிடம் பள்ளியில் பயின்றதெல்லாம் சொல்லுவேன் ..அவளும் கவனமாகக் கேட்பாள் …பின்னர் மேல் வகுப்பு போகும் பொது அவளையும் படிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியது… குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில், கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பின் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று அறிந்து அவளை…அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று இன்று ஆட்சியர் அளவுக்கு உயர்த்தி இருக்கிறோம்” என்றார்.
பலருக்கும் கண்ணங்களில் கண்ணீர் வழிந்தது …கைதட்டல் விண்ணைத் தொட்டது.
“நாங்கள் உங்க சகோதரியைப் பார்க்க ஆசைப்படுகிறோம்” என்று பலரும் கேட்டனர் .
“இதுநாள் வரையில் யாருடைய அனுதாபத்தையும் பெறக்கூடாது என்றுதான் அவளை வெளிய காண்பிக்கவில்லை ஆனால் இப்பொழுது…ஆட்சியர் மக்களைச் சந்திக்க வேண்டுமே ” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று தன் சகோதரியை அழைத்து வந்தார் சக்கர நாற்காலியில்.
அவ்வளவு அழகான முகம் லட்சுமிக்கு…லட்சுமியை தரிசனம் செய்த திருப்தியில் அனைவரும் வாழ்த்திச் சென்றனர்.
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings