in ,

அன்னை இல்லம் (சிறுகதை) – கீதா இளங்கோ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஒரு சிலரது வாழ்க்கை போராட்டதால் பின்னப்படும் போது சூழ்நிலைகளால் அவர்கள் கைதிபோல் அகபட்டுக் கொள்கிறார்கள்.

மாலை மணி 6 ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள் சுந்தரியின் அம்மாவும் அப்பாவும். வாங்க, வாங்க என்று வரவேற்றபடி வீட்டுக்குற்குள் அழைத்து சென்றான் ராகவன். சுந்தரி யார் வந்து இருக்காங்க பாரு என்று குரல் கொடுத்து கொண்டே

மூன்றாவது தெருவின் நடுவில் ஓர் புத்தம் புதிய வீடு மிகவும் அழகாகவும் கம்பிரமாக மின் விளக்குகள் அலங்காரத்தில் மிண்ணி கொண்டிருந்தன.

ராகவனும் அவன் மனைவி சுந்தரியும் வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தனர்.

வேக வேகமாக வந்த முருகேசன் என்னப்பா ராகவா நாற்காலி எல்லாம் வந்திடுச்சா, நாளைக்கு சாப்பாடு சொல்லிட்டியா என்று கேள்வி கனகளை தொடுத்து கொண்டு இருந்தார்.

முருகேசன் என்பவர் ராகவனின் மாமானார்.

சொல்லியாச்சு மாமா என்று தனிந்த குரலில் சொன்னான் ராகவன்.

வெளியில் வந்து நின்று தான் கட்டிய வீட்டை ஒரு நிமிடம் பார்த்து கொண்டிருந்த ராகவனுக்கு பழைய நினைவுகள் எட்டிபார்த்தது. பூர்வீக வீடு அதையே இந்த காலத்திற்கு ஏற்றார் போல் வடிவமைத்து மாற்றி கட்டி இருந்தான். ஒரே பிள்ளை ராகவன். இந்த வீட்டிற்குத்தான் நாளை காலை கிரஹப்பிரவேசம்.

இதே வீட்டில் அம்மா, அப்பாவோடு வாழ்ந்த காலங்களை நினைத்து பார்த்தான்.

அவனின் மனம் பின்னோக்கி போனது. கடந்தகால நினைவுகளில் முழ்கி போனான் ராகவன்.

ராகவன் நினைவை கலைத்தால் சுந்தரி

 என்னங்க சமையல்காரங்க வந்துட்டாங்க என்ற படி அவனருகில் வந்தவள் ஊரிலிருந்து சித்தப்பா, சித்தி எல்லாரும் வந்துட்டாங்க அவர்களைப்போய் பாருங்க உங்கள கேட்டுகிட்டே இருக்காங்க என்றால் சுந்தரி. இதோ போறேம்மா என்று அங்கிருந்து கிளம்பினான் ராகவன். வீடு விருந்தினர்கள் வருகையால் ஒரு திருவிழா போல் காட்சி அளித்தது. மீண்டும் முருகேசன் ராகவா ஐயர் எப்போது வருவார்? நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் கணபதி ஹோமம் செய்ய வேண்டும் அதுதான் விசேஷம் என்றார் முருகேசன். சொல்லிட்டேன் மாமா வந்துருவார் என்றான் ராகவன்.

 மாவிலை தோரணம் கட்டியாச்சா?

ராகவா பசுவும், கண்ணும் வேணும்

வீடு கிரஹப்பிரவேசதிற்கு முக்கியம் ராகவா

இப்பவே சொல்லி வை என்று அடுக்கடுக்காக கட்டளைகளை பிறப்பித்து விட்டு உறங்க சென்றார் முருகேசன்.

ராகவனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை

மீண்டும் வெளியில் வந்து வீட்டை பார்த்தான். வீடு மிக அழகாக தெரிந்தது. வீட்டை சுற்றிலும் சுவர் எழுப்பி இருந்தான்

வாசலின் நுழைவு பகுதியை ஒட்டினாற்போல் சுவற்றில் க்ரானைட் கல் பொதிக்கப்பட்டு அதில் அன்னை இல்லம் என்று ஒரு வாசகமும் எழுதப்பட்டு இருந்தது. அதை சுற்றிலும் மின் விளக்குகள் மிண்ணிக்கொண்டு இருந்தன

வீட்டையே பார்த்து கொண்டு இருந்த ராகவன் அந்த அன்னை இல்லம் என்ற வாசகத்தை வாசித்து பார்த்தான்

“கண்களில் கண்ணீர் எட்டிபார்த்தது”

வீட்டை புதுபிக்கும் போது கூட அந்த வாசகத்தை அழிக்க மனம் வரவில்லை ராகவனுக்கு.

மூன்று தலைமுறை வாழ்ந்த வீடு

இந்த வாசலில்தானே அம்மா அழகாக கோலம் போடுவாள் அவள் கோலம் போடும்போது அம்மாவின் புடவை தலைப்பை பிடித்து கொண்டு தான் நின்று கொண்டு இருந்த அந்த நினைவு எட்டிபார்த்தது ராகவனுக்கு.

“மனம் கனத்தது”

மீண்டும் சுந்தரியின் குரல் என்னங்க வெளியில் என்ன பண்றீங்க நான்கு மணிக்கு ஐயர் வந்துடுவார் சீக்கிரமா வந்து படுங்க என்ற சுந்தரியின் குரல் கேட்டு இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே கனத்த இதயத்தோடு உள்ளே சென்றான் ராகவன். மணி 4. விடியற்காலை பொழுது விடிந்தது. உறவினர் ஒவ்வொருவராக வந்து கொண்டு இருந்தனர். பூஜை பொருட்களும், வரிசை பொருட்களும் நிரம்பி வழிந்தன. சுந்தரிக்கு பெருமையும், சந்தோஷமும் அவள் முகத்தில் தெரிந்தது. ஐயரும் வந்தார். கணபதி ஹோமத்தை தொடங்கினர்.. வீடு நிரம்பியது. ராகவன் மட்டும் பதட்டமும், கவலையுமாக காணப்பட்டன். பட்டு வேட்டி, சட்டையில் ராகவனும், பட்டு புடவையில் சுந்தரியும் மனையில் அமர்ந்தனர்.

என்னப்பா பூஜைய ஆரம்பிக்கலாமா? என்று கேட்டார் ஐயர்.

நீங்க ஆரம்பிச்சடுங்க என்று அவன் உதடு தான் சொன்னதே தவிர அவன் உள்ளம் யாரையோ எதிர்பார்த்து காத்து இருந்தது.

அவன் கண்கள் ஏனோ வாயிற்படியை நோக்கியே இருந்தது. சுந்தரியும் இதை கவனித்தாள்

மங்களவாத்திய சத்தத்தையும் மீறி ஒரு வேன் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

 இப்போது எல்லோருடைய கண்களும் வாயிற்படியை நோக்கியே இருந்தது. ஒரு அறுபது வயதை தாண்டிய ஒரு அம்மா அந்த வேனில் இருந்து மெதுவாக இறங்கினார். அவரை பிடித்தபடி இரண்டு பெண்மணிகள். அந்த வயதான பெண்மணி வேறு யாருமில்லை ராகவனின் தாய் சிவகாமி அம்மாள். இறங்கிய சிவகாமி அம்மாள் நிமிர்ந்து கண்களை உயர்த்தி அந்த வீட்டை பார்த்தாள்.

அவள் உடம்பில் எதோ மின்சாரம் தாக்கியது போல் இருந்தது.

மெதுவாக நடந்து வந்த சிவகாமி வாயிற்படியில் க்ரானைட் கல் பொதித்த பெயர்ப்பலகையையும் அதில் இருந்த அன்னை இல்லம் என்ற வாசகத்தையும் ஒரு நிமிடம் நின்று உற்று பார்த்தாள்.

அவள் அந்த வீட்டில் தான் கணவனோடு வாழ்ந்த அந்த வசந்த காலங்கள் அவள் நினைவுக்கு வந்தது.

பெரிய கூட்டு குடித்தனத்தில் வாழ்க்கைபட்டு ராகவனுக்கு பத்து வயதிருக்கும்போது கணவனை இழந்து அப்பளம் இட்டு ராகவனை படிக்க வைத்தால் சிவகாமி அம்மாள்.. ராகவனும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தான். பெரியவர்கள் எல்லோரும் ஒருவர்பின் ஒருவராக மறைந்து போக யாருமில்லாத ஒத்தை ஆளாக நின்று ராகவனுக்கு சிறிய இடத்தில் கல்யாணமும் செய்து வைத்தாள். எல்லோர் வீட்டிலும் வரும் பிரச்சனை அவளுக்கும் வந்தது. தாயை விட்டு குடுக்க முடியாமல் மகன் படும் கஷ்டத்தை பார்த்து மனம் கலங்கினால் சிவகாமி. சுந்தரியின் பெற்றோர் edutha முடிவின்படி ஒரு இல்லத்தில் சேர்க்கப்பட்டாள் சிவகாமி அம்மாள். ராகவனுக்கு மனம் இல்லை என்றாலும் அங்கே சூழ்நிலை கைதியாகி அதற்கு சரி என்று தலையை ஆட்டி சம்மதம் தெரிவிக்கையில் சிவகாமி அங்கே இறந்து மறுபடியும் பிறந்தாள். ராகவா நான் சந்தோஷமாக போகிறேன் நீ சௌக்கியமாக இரு என்று இல்லத்திற்கு சென்றவள் மூன்று வருடத்திற்கு பிறகு இப்போதுதான் ராகவனை பார்க்கிறாள். வேன் வந்த சத்தத்தை கேட்ட ராகவன் ஓடி வந்து வாங்கம்மா என்று கைபிடிக்கும் போது நினைவுகளில் இருந்து வெளியில் வந்தாள் சிவகாமி.

 கைகளை பிடித்து ராகவன் அழைத்து கொண்டு செல்கையில் சிவகாமிக்கு அவனை பள்ளிக்கு அழைத்து சென்ற ஞாபகம் வந்தது. அவனை பின் தொடர்ந்து நடக்கையில்

அந்த பெயர் பலகையை தன் கைகளால் மெதுவாக வருடினாள்.

‘ கண்களில் கண்ணீர் எட்டிபார்த்தது…

வாங்கம்மா என்று கைத்தங்களாக உள்ளே அழைத்து வந்தார்கள் ராகவனும் அந்த இரண்டு பெண்மணிகளும். ராகவன் தாயின் கைகளை பற்றி அழைத்து சென்று அங்கிருந்த சோபாவில் அமராவத்தான். சுந்தரியும் உடனிருந்தாள். எல்லா சொந்தங்களும் கண் விழித்து பார்த்து கொண்டு இருந்தனர்

அம்மா சாப்பிட்டியாம? என்று குரல் நடுங்க கேட்டான் ராகவன் நான் கேட்கவேண்டிய கேள்வியை நீ கேட்பது மிகவும் சந்தோஷமா இருக்கு ராகவா என்று குரல் உடைந்து கூறினாள் சிவகாமி

சார் நேரமாகுது வாங்க வந்து மனையில் உட்காருங்க என்று

ஐயர் குரல் கொடுத்தார்.

“நீ உட்காரவேண்டிய இடம் அம்மா இது என்று மனதில் நினைத்தவாறு”…

மனையில் உட்கார்ந்தர்கள் ராகவனும், . சுந்தரியும். ராகவனின் தாயை ஒரு வேண்டாத விருந்தாளி போலவே பார்த்தார்கள் சுந்தரியின் பெற்றோர்.. பெரியவர்கள் வீட்டில் இருப்பதை ஒரு பெரிய சுமையாகவே நினைக்கிறார்கள் இப்போது உள்ள சில பெண்கள். எல்லா பெண்களும் சொல்லிவிட முடியாது. சில பெண்கள் தன் கணவன் தன் பக்கத்திலே வைத்து கொள்ள வேண்டும் என்ற தன் சுயநலத்திற்காக செய்கின்ற தவறுதான் இது போல செயல்கள். இது பாவம் என்றோ தவறு என்றோ சொல்லிக்கொடுக்க யாரும் இல்லாததால் இந்த மாதிரி பாவத்தை செய்கிறார்கள். சுந்தரியும் நல்லவள் தான். நல்ல விஷயங்களை சொல்லி கொடுக்கும் பெற்றோர் இல்லை என்றால் நாட்டில் நிறைய சிவகாமி அம்மாள் தோன்றுவர்கள். சுந்தரியும்

தெரியாமல் இந்த பாவத்திற்கு உடைந்தையானாள்.

 அவள் மனதிலும் நாம் தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியுடனே அமர்த்திருந்தாள். சுந்தரியின் தாயும், தந்தையும் ஒரு இறுக்கமான சூழ்நிலையில் அமர்ந்து இருந்தார்கள்.

 “இந்த அம்மா எங்கே இங்கேயே தங்கி விடுவார்களோ என்கிற கவலை அவர்களுக்கு…”

.பூஜையை முடித்த சாஸ்திரிகள் நா கிளம்பறேன் அம்மா அப்பா பெரியவர்களிடம் ஆசிரிவாதம் வாங்கிக்கோங்க கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு வேண்டும் என்றால் உங்களை பெற்ற தாய் தந்தையின் ஆசிர்வாதங்கள் தேவை என்று பெரிய உண்மையையும் சொன்னார். இது ஏனோ இந்தக்கால பிள்ளைகளுக்கு தெரிவதில்லை.

மனையில் இருந்து எழுந்த ராகவன் சிவகாமியிடம் சென்றான் அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுமா

 நா தப்பு பண்ணிட்டேம்மா எங்களை மன்னிச்சுடும்மா என்று கண்ணீர் விட்டபடி காலில் விழுந்தான் ராகவன். ராகவனின் பக்கத்தில் நின்றிருந்த சுந்தரியும் ஆமா அத்தை எங்களை மன்னிச்சுடுங்க என்றாள். எழுந்திரிங்கப்பா என்னுடைய மனபூர்வமான ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் உண்டு. சரி நான் கிளம்பறேன் என சொல்லிவிட்டு எழுந்தாள் சிவகாமி அம்மாள்.

 அம்மா வேண்டாம்மா நீங்க போக வேண்டாம் என்று தடுத்த ராகவனின் கைகளை உதறிவிட்டு நடக்க ஆரம்பித்தாள் சிவகாமி அம்மாள். சாப்பிடுங்கம்மா என்றவனிடம் எனக்கு வேண்டாம் என்று சொல்ல மனமில்லை சிவகாமி அம்மாவுக்கு. மகன் வேதனைபடுவான் என்பதற்காக இலையில் அமர்ந்து எழுந்தாள் சிவகாமி அம்மாள். என்னம்மா எழுந்திட்டீங்க என்ற ராகவனிடம் இத்தனை நாட்கள் எனக்கு சோறு போட்டவர்கள் அங்கே எனக்காக காத்திருப்பார்கள் ராகவா

நான் அவர்களுடேனே சாப்பிட்டு கொள்கிறேன் அது மட்டும் இல்லை,.  அங்கிருக்கும் செடி, கொடிகளும் என்னை எதிர்பார்க்கும் என்று சொல்லிவிட்டு சிவகாமி அம்மாள் இந்த இடத்தைவிட்டு சென்று விட வேண்டும் என்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள். ஆனாலும் முடியாமல்  மெதுவாக நடக்க அந்த இரு பெண்மணிகளும் கைத்தாங்களாக சிவகாமி அம்மாவை பிடித்து நடத்தி கொண்டு வந்தனர். வாயிற்படி அருகே வந்ததும் மீண்டும் அந்த “அன்னை இல்லம்” என்ற வாசகத்தையை வெறித்து பார்த்தாள் சிவகாமி அம்மாள்

கண்களில் கண்ணீர் எட்டிபார்த்தது, வேண்டாம் என் மகன் புது வீட்டுக்கு குடியேறி இருக்கிறான் நான் அழக்கூடாது என்று பொங்கி வந்த அழுகையை கட்டுபடுத்தி கொண்டு மெதுவாக அடி எடுத்து நடக்க தொடங்கினாள்   அந்த வேன் வீட்டருகே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. திரும்பி அன்னை இல்லம் என்ற வாசகத்தையும்,. வந்து நின்ற வேனில் எழுதப்பட்டுருந்த சாய் அறக்கட்டளை முதியோர் இல்லம் என்ற வாசகத்தையும் மாறி, மாறி பார்த்தாள் சிவகாமி அம்மாள் . ராகவனை அழைத்தாள்.

ராகவா இந்த பெயர் பலகையை எடுத்து விடு

‘இல்லாத பறவைக்கு கூடு எதற்கு’ என்று கூறிவிட்டு அந்த வேனை நோக்கி இருவரின் துணையோடு வேகமாக நடக்க

 சாய் அறக்கட்டளை முதியோர் இல்லத்திலருந்து சிவகாமியை அழைத்து வந்த அந்த ரதம் மீண்டும் அந்த முதிர்ந்த பறவையை சுமந்து கொண்டு வேகமாக பறந்தது. …

அந்த முதிர்ந்த பறவை தன்னைப்போலவே அங்கே இருக்கும் பறவைகளுக்கு தொண்டு செய்ய முதியோர் இல்லம் நோக்கி விரைந்தது அந்த அழகான  ரதம்.

Nothing is greater then mother hood.

எழுத்தாளர் கீதா இளங்கோ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கல்யாண ஊர்வலம் வரும் (சிறுகதை) – சுஸ்ரீ

    பறை முழக்கம் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு