2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
எங்க இருக்கீங்க அப்பா… நான் கிளம்பிட்டேன்..
நீங்க வந்த போயிட்டு வந்துரலாம் அப்பா…. என்று செல்போனில் பேசினாள்…. பிறகு கோவிலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைச்சுட்டியா….
அந்த புளியோரை எடுத்து கொடுக்க வேண்டிய தொன்னை எல்லாத்தையும் எடுத்து வைத்து விடு…
அங்க கிடைக்குமோ, கிடைக்காதோ அதான்….
சரி… சரி….
எல்லாத்தையும் வீட்டுலா இருந்தே எடுத்து போங்க…..
இது மூன்னாவது வார பூஜை நல்லப்படியாக நினைச்சது நடக்கணும் வேண்டிட்டு வா “கனி”….
அந்த தெய்வம் தான் வழி விடனும் கையை குப்பி கூப்பிட்டாள் “புஷ்பா”….
அதெல்லாம் “நல்லதே நடக்கும்” அம்மா…..
நீ கிளம்பி வேலைக்கு போயிட்டு வாம்மா வயற்காட்டிலா கொஞ்ச வேலை கிடக்கு சொன்ன அம்மா….
சரி…. நான் கிளம்பி போறேன்…. நீயும் அப்பாவும் பார்த்து போயிட்டு வாங்க….
இது எத்தன தடவ சொல்லுவா கிளம்பும்மா…..
திருப்பியும் போன் செய்தால் கனி அவளின் அப்பாவுக்கு….
ஆனால் இந்த இரண்டு முறை போன் செய்தும் எடுக்கவில்லை….. மனத்திற்குள்ளே அப்பா ஒரு வேளை வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருப்பார் போல அதான் போன் எடுக்கவில்லா….
வீட்டிற்கு வெளியே ஸ்கூட்டர் வந்தது ….
கனி கிளம்பிட்டயா? இதோ….
கிளம்பிட்டேன் அப்பா வாங்க போவோம்…. சாப்பிடுறீங்களா அப்பா…..
எனக்கு வேண்டாம்….. விரதம் இருந்த இந்த மூன்றாவது வார பூஜை நல்லப்படியாக செய்து விட்டு வந்துருவோம்…..
கனி ஸ்கூட்டரில் எனக்கூறி சந்திரன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்…..
கோவிலுக்கு சென்று அர்ச்சனைக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு போனான்….. அப்போது அந்த கடைக்காரர் பூஜை பொருள் தீர்ந்து விட்டது எனக் கூறினான்….
சந்திரனுக்கு ஒரே குழப்பமா இருந்தது… என்னடா பூஜை பொருள் அனைத்து இருக்கிறது நாம் கேட்டால் இல்லை என்கிறார்கள்…..
கோவிலுக்குள் சாமிக்கு பூஜை செய்து முடித்து விட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தனர்….
அப்போது இவர்களும் சென்று சாமியை கூம்பிட்டு பிரசாதத்தை பெற்று அங்கு உள்ள ஒரு சிலருக்கு தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த புளியோரையை வழங்கினார்….
அதையும் அனைவருக்கும் வரிசையாக நின்று பெற்றுக் கொண்டனர்….
சிறப்பான தரிசனம் என்று கனியும், சந்திரனும் பேசிக் கொண்டிருந்தனர்… அப்போது சந்திரன் வெளியில் உள்ள கடைக்காரர் மட்டும் ஏன்? பூஜை சமான் நமக்கு தர மறுத்தார் என புரியவில்லை கனி….
கனி “விடுங்கப்பா நமக்கு தான் காசு மிச்சம்” என்றாள்.. அதற்கு சந்திரன் ஏதோ ஒரு சிந்தனையில் பதில் பேசாது அமைதியாக இருந்தான்…
கனி…..வா கிளம்புவோம் எனக்கும் ஒரு முக்கியமான அலுவலக வேலை உள்ளது என்றான்…..
பிறகு இருவரும் தரிசனத்தை முடித்து விட்டு ஸ்கூட்டரில் புறப்பட்டனர்….
போகும் வழியில் இரு வழித்தடங்கள் தென்பட்டது….
சந்திரன்….. நீ! போய் அந்த பலகையில் இந்த வழி பாதை எந்த வழியாக செல்கிறது என்று பார்த்து விட்டு வா என்றான்
அப்பா இதுவும் தாமரைப்பட்டிக்கு 6 கி.மீட்டரில் இணைவது போல தான் போட்டிருக்குப்பா…..
வா…. அது தூரம் நாம் வந்த வழியாக சென்று விடலாம்…. என்று ஸ்கூட்டரை வேகமாக அழுத்தி புறப்பட்டான்…..
அடிக்கடி சந்திரனுக்கு அழைப்பு மணிகள் வந்தப்படியாகவே இருந்தது ஆனால் அதை கண்டுக் கொள்ளாது ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருந்தான்…..
சாலையின் இருபுறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கனி…. அப்போது அங்குள்ள ‘தென்னந்தோப்பில் விசித்திரமான “ கருப்பு நாகமான படம்” , அனைத்து தென்னை மரங்களிலும் வரைப்பட்டிருந்ததை’ பார்த்து பயந்தாள்….
பின்பு ஒரு அழைப்பு மணி விடமால் அடித்துக் கொண்டிருந்தது…. ஸ்கூட்டருக்கு ஒரு நாய் வந்ததை பார்த்த சந்திரன் பிரேக் அழுத்தி ஸ்கூட்டரை நிறுத்தினர்….
பிறகு அது திரும்பி சென்றது…. மறுபடியும் பிரேக் விடுத்து ஆக்சிலேட்டரை உயர்த்தி ஸ்கூட்டரை ஓட்டும் போது போன நாய் மறுபடியும் வண்டிக்கு குறுக்காக பயந்தது….
திடீரென இருவரும் ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்தனர்….
கனி சந்திரனை இறுகிப்பிடித்தால் பெரியதாக அடிப்படவில்லை…. ஆனால் சந்திரனுக்கோ கால்களில் பலமான அடியும்,உடம்பிலும், தலையிலும் அடிப்பட்டது…..
இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருவரும் சாலையில் கிடந்தனர்….
வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் வந்து பார்த்து ஒருவருக்கொருவர் மாறி பேசிக் கொண்டிருந்தனர்….
ஒரு பெண் கனியின் கழுத்தில் கிடந்த செயினை மெதுவாக கழட்டி எடுக்க முயற்சி செய்தாள்…
ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்….
மற்றொருவர் ஆம்புலன்ஸ் போன் செய்து கொண்டிருந்தார்….
ஒருவர் வண்டியில் உள்ள உடைமைகளையும், சந்திரனின் செல் போனையும் எடுத்தார் …..
மெதுவாக கனி விழித்து பார்த்து அந்த பெண் கண்டும் காணாது போல இடத்தை விட்டு நகர்ந்தாள்….
கனி தண்ணீர்…. தண்ணீர்….. என கேட்டதற்கு ஒருத்தி தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து முகத்தில் தெளித்து தண்ணீரை வாயில் ஊற்றினாள்….
கனியிடம் அனைத்து பொருட்களும் ஒப்படைக்கப்பட்டது….
அப்பா…. அப்பா….. அப்பா…. வென கத்தினாள்….
சந்திரனின் முகத்தில் தண்ணீரை தெளித்தால், கண் விழித்து பார்த்த சந்திரன் தண்ணீரை வாங்கி மெதுவாக குடித்தார்….
பிறகு கால்களில் இருந்து இரத்தம் நிற்காமல் சந்திரனுக்கு வந்தது….. தனது துப்பட்டாவால் அந்த அடிபட்ட கால்களில் இரத்தம் வரும் இடத்தில் இறுக்கிக் கட்டினாள்….
அண்ணா….. அண்ணா….. ஆம்புலன்ஸ் போன் செய்யுங்கள் என கேட்டாள்…. அதெல்லாம் போன் பண்ணிட்டோம்மா ஆனா, அது வர லேட் ஆகும் போல நீ நாங்க ஆட்டோ பிடிக்கிறோம்….
அதுலா, ஏறி போயிறும்மா…. ஆட்டோவை மறைந்தனர்…. ஆட்டோ நின்றது அதில் இருவரும் ஏறி அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர்…..
ஆஸ்பத்திரி நுழைவாயில் ஆட்டோவை நிறுத்தினர் ஆட்டோக்காரர் இருவரையும் இறங்கி 2 மணி வெயில் ஒரு இடத்திலா உட்கார வைத்தார்…. பிறகு கனியிடம் அம்மா 200 ரூபாய் பணம் கொடும்மா நான் கிளம்புறேன்….
அண்ணா….. தயவு செய்து அப்பாவா ஒரு கை தாங்கலா பிடிக்க அண்ணா உள்ளே கொண்டு போய் விடலாம்…..
இங்க “ஒரே வெயிலா இருக்கு”….
அதெல்லாம் முடியாது நீ முதலா பணத்தா கொடு எனக்கு ஸ்கூல் சஃபாரி இருக்கும்மா என கடிந்து பேசினான்….
பணத்தை அவனிடம் கொடுத்தாள்… அதை வாங்கிட்டு பதில் பேசாது ஆட்டோவை எடுத்து புறப்பட்டான்….
அழுதுக் கொண்டே ஆஸ்பத்திரி உள்ள நர்ஸ்சுகளை அழைத்தாள் பிறகு அவர்கள் சந்திரனை உள்ளே தூக்கி சென்று முதலுதவி செய்ய ஆரம்பித்தனர்…
அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ஆபத்து கட்டத்தை தாண்டினார் சந்திரன்….
கனி அவள் அம்மாவுக்கும், தம்பிக்கும் போனில் தகவலை கொடுத்தாள்… அவர்களும் அழுதுகொண்டே கிளம்பி வந்தனர்….
கனியும் மயங்க விழுந்தாள் …..
அவளுக்கும் முதலுதவிகளைச் செய்தனர்…அதன் பிறகு இருவரையும் காப்பற்றினார்….
எப்பவோ, நீங்க செஞ்சா ஒரு புண்ணியம் தாங்க உங்களையும்,கனியையும் காப்பாத்துச்சு என்று கூறி பெரு மூச்சு விட்டாள் புஷ்பா..
“அடுத்த நொடி” ,நிச்சயமாக வாழ்க்கை இது அதில் வேலை,குடும்பம் என்று இல்லாமல் நம்ம முடிந்தா…. உதவியை நான்கு பேருக்கு செய்தால் நல்லது புஷ்பா….
சரிங்க அப்பா….. இனிமேல் அப்படியே செய்கிறோம் என்றனர் மணியும்,கனியும்…..
சில மாதங்கள் கழித்து கனிக்கு திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது…..
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமையான கதை சகோ அனைவரின் வாழ்விலும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது தெரியாது தான் சகோ வாழ்த்துக்கள் சகோ