தொட்டும் தொடாமலும் காணும் சொந்தங்கள்
பட்டும் படாமலும் விலகும் பந்தங்கள்
பரவியதே தொற்று
எண்ண வேண்டாம் இதை வெற்று (என)
இது என்ன காலம்?
எங்கும் மக்களின் ஓலம்
நாதியற்றுப் போன மனிதர்கள்
வீதியற்றும் போகிறார்கள்
இயலாமையினால் பேதலிக்கும் மாந்தர்
வாழ்வாதாரம் இழந்த சிறுவணிகர்
இது விதியின் எக்காள கெக்கலியோ?
மனிதக் கூக்குரல் இறைவனுக்கு கேக்கலியோ?
மன்னுயிரைக் காக்கப் போராடும் மருத்துவர்
தம் மழலையும் பிரிந்து தொண்டாற்றும் செவிலியர்
போராட்டங்களினால் தகிக்கும் இவ்வேளையில்
விரக்தியெனும் போர்வை வேண்டாம்
வேண்டாம் அச்சம்
தேவையில்லை பீதி
தனிமையின் மீது மோகமும்
தூய்மையின் மீது காதலும் கொள்வோம்
இலக்கென்னும் தீபஒளி மங்கவில்லை
நாடுவோருக்கு நேசக்கரம் நீட்டுவோம்
மனிதனின் அறிவுத் தேடலுக்கு இல்லை எல்லை – இன்றோ
சாலைகள் தேடுகின்றன மனிதனின் காலடி சுவடுகளை
ஆளரவத்திற்கு ஏங்குகின்றன
வெறிச்சிடும் நாற்சந்துகளின்
மூடப்பட்ட சந்தைகள்
தொற்றின் சுற்றுப்பயணமோ சூறாவளி
வளிமண்டலத்திலோ வதந்திகளின் சுற்றுலா
யாரையும் நிந்திக்க வேண்டாம்
எவரையும் வஞ்சிக்க வேண்டாம்
விலகி இருப்பதே வாழ்வு
கைகழுவுவோம்
தூய்மையைப் பேண மட்டும்
மனிதத்தை அல்ல
மின்மினியின் ஒளி கூட
தீப்பிழம்பாய் மிளிரலாம்
சீற்றத்துடன் வரும் புயல்
சற்றே மலையை அசைக்கலாம்
கடுமையான பேரிடரையும்
புயலாய் எதிர்கொள்ளலாம்
பொறுமையே பூஷணம்
கட்டுப்பாடே கங்கணம்
தைரியமே ஆபரணம்
சிலநாள் விருந்தினன் தான்
இந்தக் கொரோனா
போகாமல் தான் அவன்
இங்கே இருப்பானா?
அவனைத் துரத்தாமல்
மனிதன்தான் உறங்குவானா?
கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
GIPHY App Key not set. Please check settings