ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஒரு ஊரில் ஆதிரா என்ற மாணவி தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள்.
வழக்கம் போல் மடிக்கணிணி முன் அமர்ந்து பாடம் கற்க ஆரம்பித்த ஆதிரா, திடீரென சந்தோசமாக, “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்” எனச் சத்தமாக மடிக்கணிணியைப் பார்த்து பாடினாள்.
சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த ஆதிராவினுடைய அம்மா, அபிநயா விரைந்து வந்து. “என்னம்மா இவ்வளவு சந்தோசமாக மடிக்கணிணி திரையைப் பார்த்து பாடிக் கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்க
“அம்மா இங்கேப் பாருங்கள்” என மடிக்கணிணி திரையைக் காண்பித்தாள் ஆதிரா
அதில் ஏதோ பயிற்சி வினாத்தாள் போல் இருக்கக் கண்ட அபிநயா, ”என்னம்மா இது? ஏதோ வினாத்தாள் மாதிரி இருக்கிறதே?” எனக் கேட்டாள்
அதற்கு ஆதிரா, “இது வினாத்தாளே தான்ம்மா. எனக்கு பாடத்தில் ஒரு சந்தேகம் இருந்தது. அதற்காக ஆசிரியரிடம் அலைபேசியில் கேட்டேன். ஆசிரியர் என் சந்தேகத்தை தீர்த்து வைத்தார்
அதோடு, ஆதிரா நான் கூறுவதை மட்டும் நீ படித்தால் போதாதும்மா, அலைபேசி மடிக்கணிணி மூலமாகவும் உன் வகுப்ப பாடம் சம்பந்தமாக உள்ள மற்ற நூல்களையும், குறிப்புகளையும் கற்க வேண்டும். அதில் மாதிரி வினாத்தாள் கூட வரும். நீ ஓய்வு நேரத்தில் அந்த பயிற்சி தாள்களைச் செய்துப் பார். அது உனக்கு வருட இறுதியில் வரும் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற உதவும்மா எனக் கூறி, பல இணையத்தளங்களின் விவரங்களையும் தந்தார்கள்ம்மா.
அதில் ஒரு மாதிரி வினாத்தாளை நான் செய்துப் பார்த்தேன்’ம்மா, அதில் எனக்கு 95 விழுக்காடு மதிப்பெண் கிடைத்துள்ளது. அதான்ம்மா இந்த சந்தோசம்” எனக் கூறினாள் ஆதிரா
இதைக் கேட்ட அபிநயா, “பார்த்தாயா ஆதிரா, வீட்டிலிருந்நு கற்கும் முறை ஆரம்பித்த பொழுது, நீ சோர்வுடன் அம்மா என்னால் என் ஆசிரியர்களையும், நண்பர்களையும் பார்க்க முடியவில்லை எனக் கூறினாய். ஆனால் இப்பொழுது உனக்கேப் புரிந்து விட்டதல்லவா?” எனக் கூற
“ஆமாம்மா” என சிரித்துக் கொண்டே கூறினாள் ஆதிரா
“ஆதிரா… கற்கும் ஆர்வம் மட்டும் இருந்து விட்டால், எந்தச் சூழ்நிலையிலும் நாம் முன்னேற முடியும். இதைத் தான் நம்முடைய முன்னோர்கள், அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்று கூறியிருக்கிறார்கள்” என அம்மா கூற
“ஆமாம்மா… எனக்கும் இது தெரியும்மா” என சிரித்துக் கொண்டே கூறினாள்
ஆச்சரியத்துடன் ஆதிராவைப் பார்த்த அபிநயா, “இதன் அர்த்தம் உனக்குத் தெரியுமா?” எனக் கேட்க
“தெரியும்மா… ஆசிரியர் எங்களுக்கு சொல்லித் தந்துள்ளார். அதாவது நாம் எதைக் கற்றாலும் மேலோட்டமாக கற்காமல், அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து தெளிவாக கற்க வேண்டும். மேலும் அது சம்பந்தமாக எவ்வளவு தகவல்களை தெரிந்துக் கொள்ள முடியுமோ அவ்வளவையும் தேடித் தேடி தெரிந்துக் கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள மின் சாதனங்கள் இந்த உலகத்தின் எந்த மூலையில் உள்ள தகவல்களையும் நம் கைகளுக்கே கொண்டு வந்து, எந்த நேரமும் சேர்த்து விடுகிறது. நாம் தான் அன்னப்பறவைப் போல நல்லனவற்றை எடுத்துக் கொண்டு, தீயனவற்றை ஒதுக்கி விட வேண்டும்” எனக் கூறினாள் ஆதிரா.
பலமாக கைகளைத் தட்டி மனதார பாராட்டிய அபிநயா, “நீ மட்டும் இந்த பயிற்சி வினாத்தாளை செய்தால் போதாதும்மா, உன் நண்பர்களையும் செய்யச் சொல்” என்றாள்
ஆதிராவும் தன் நண்பர்களுக்கு அந்த பயிற்சி வினாத்தாள்கள் பற்றிய விவரத்தை பகிர்ந்தாள். நாம் மட்டும் முன்னேறினால் போதாது, நம்மைச் சுற்றியிருப்போரையும், நம் நாட்டையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல நாம் அனைவரும் நம்மால் ஆனதைச் செய்வோம்.
வாழ்க தமிழ்… வளர்க அதன் புகழ்…
#Ads – Kids Story Books – Deals from Amazon 👇
#Ads – Children Activity Stuff – Deals from Amazon 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்
GIPHY App Key not set. Please check settings