எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நட்பு என்றால் ‘ சாரதி’ ‘நடராஜ்’ நட்புதான். ஒளிவுமறைவு என்பதில்லை.ஆனால் அண்மை காலமாகச் சாரதியின் முகம் எதையோ மறைப்பதை உணர்ந்த நடராஜன் எதையும் கேட்டுக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தார்.
ஒரு நாள்…மதிய உணவு எடுத்துவரவில்லை … வெளியில சாப்பிட்டு வருவதாகச் சாரதி கூறியதும் அதிர்ச்சியாக இருந்தது நடராஜ்க்கு … இருவரில் யார் உணவு எடுத்துவரவில்லை என்றாலும் பகிர்ந்து உண்பர் அல்லது இருவரும் சேர்ந்து போய்ச் சாப்பிட்டு வருவாங்க.
இதுபோல அடிக்கடி நடக்க ஆரம்பித்ததும் நடராஜ்க்குச் சந்தேகம் எழுந்தது…அதே நேரம் சாரதி வீட்டிலிருந்து போன் வந்தது …சாரதியின் மனைவி பேசினார்…
“அண்ணா…அவர் இருக்காரா?”
“இல்லமா …சாப்பிடப் போயிருக்கான் …ஆமா… ஏன் மதிய சாப்பாடு கொடுத்துவிடல ?…நீ ஊருக்கு ஏதாவது போயிருக்கியா ?”
“நான் எந்த ஊருக்கும் போகல அண்ணா…வீட்டுல தான் இருக்கேன் …அவருதான் இப்போ அடிக்கடி சாப்பாடு வேண்டான்னு சொல்லிட்டு வந்துடறாரு …அவர் எதோ மனசுல போட்டு தவிக்கிறார்”
“வீட்டுல ஏதாவது சண்டையா ?”
“இல்ல அண்ணா …எங்களுக்குள்ள எதுவும் இல்ல …பிள்ளைங்ககிட்ட கூட நல்லா இருக்காரு …ஆனாலும் எதோ குழப்பத்துல இருக்காரு”
“எனக்கும் அந்தச் சந்தகேம் வந்திருக்கு …சரி நான் பார்த்துகிறேன்’’
நடராஜ் மனதில் ஒரு கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது…நண்பன் எதோ சிக்கலில் சிக்கியிருக்கிறான் என்று .நேரடியாக விசாரிப்பது நல்லதல்ல என்று எண்ணி தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்திவரும் இன்னொரு நண்பனைத் தொடர்புகொண்டு ‘உதவு முடியுமா’ என்று கேட்க…ஒரு சில நாளில்
சாரதியின் மனநிலை பிறழ்வுக்குக் காரணம் தெரிந்தது
சாரதியின் மனைவியை நேரில் வரச்சொன்ன நடராஜ்…
“அம்மா …உன் கணவன் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறான் …கல்யாணத்துக்கு முன்னாடி அவனும் ஒரு பொண்ணும் காதலிச்சு இருக்காங்க …இவன் காலேஜ் படிக்க வந்த காலத்துல அந்தப் பொண்ணு வீட்டுல கட்டாயப்படுத்தி வேறு ஒருவனுக்குக் கட்டி வச்சிட்டாங்க …அவன் இவள விட்டுட்டு போயிட்டான் …இப்போ சமீபத்துல எங்கேயோ சாரதியைப் பார்த்ததும் அந்தப் பொண்ணு அழுது இருக்கு …உன் துணை எனக்கு வேணுன்னு சொல்லியிருக்கு ..இவனுக்குப் பழைய காதல் நினைவுக்கு வர தடுமாறி போயிருக்கான்”
“இப்ப என்ன பண்றது அண்ணா ? போலீஸ்ல கம்பிளைன்ட் கொடுக்கலாமா ?”
“அவசரப் படாத …சாரதி நல்லவன்தான் நான் விசாரிச்சா வரைக்கும் அந்தப் பொண்ணும் நல்லவளா தான் தெரியுது… இவனும் உங்க கல்யாணம் ,குழந்தைகள் எல்லாம் சொல்லியிருக்கான் …இப்போ அந்தப் பொண்ணுக்கு இருக்கிற மனக்குழப்பத்திற்கு மருந்து போட்டா இவனை விட்டுடும் .”
‘’என்ன செய்ய அண்ணா?”
நடராஜ் சில ஆலோசனைகளைச் சொன்னார் அதன்படி மறுநாள் சாரதியின் மனைவி தன் குழந்தையுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று …”தான்தான் சாரதியின் மனைவி” என்று அறிமுகம் செய்துக்கொண்டார்.
அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண்ணிடம் அரைமணி நேரம் ஆறுதலாகப் பேசிவிட்டு… இறுதியாக, “உன் ஆசையை அறுத்திடு, அதுதான் எல்லோருக்கும் நல்லது” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
மறுநாளே சாரதியின் வீட்டிற்கு ஒரு கூரியர் வந்தது .சாரதிதான் வாங்கிப் பிரித்தான் …உள்ளே அந்தப் பெண் வெளிநாடு செல்வத்தற்கான பயணச்சீட்டு நகல் .
சாரதியின் மனைவி ‘’என்னது அது ? எங்கிருந்து வந்திருக்கு ?” என்று கேட்க
“முகவரி மாறி வந்துவிட்டது…அது நமக்கில்லை” என்றான்
மறுநாளில் இருந்து மலர்ந்த முகத்துடன் அலுவலகம் சென்றான் ‘சாரதி’
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings