in ,

ஆறுதல் (சிறுகதை) – மனோஜ் குமார்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு  வாரம் ஒரு முறை சாப்பாடு, தண்ணீர் பாட்டில், துணிகள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப் வாங்கி கொடுத்தான் கணேஷ். அதுமட்டுமல்லாமல் மருத்துவ செலவுக்கு தேவையான பணமும் கொடுத்து உதவினான்.

“யார் ராஜா நீ? எங்கிருந்தோ வந்து உதவி செய்ற. எல்லாம் வாங்கி கொடுக்குற. நாங்க பெத்த புள்ளைங்க கூட, எங்களை இவ்வளவு நல்லா கவனிக்கல. எங்களை கைவிட்டுட்டாங்க. நீ நல்லா இருக்கணும்! உன் குடும்பம் நல்லா இருக்கணும்!” கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய  சொன்னாள் முதிர்ந்த பாட்டி

“பாட்டி! ஒன்னும் கவலைப்படாதீங்க! எல்லாரும் என்னை உங்க சொந்த பேரன் மாதிரி நினைச்சிக்கோங்க. வாராவாரம் இதே மாதிரி வந்து உங்களை எல்லாம் கவனிக்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகி நாலு வயசுல ஒரு சின்ன  பையன் இருக்கான். அவனோட விளையாடினா உங்களுக்கு கவலை இருக்கிற இடமே தெரியாது. அடுத்தவாட்டி என் பொண்டாட்டியையும் பையனையும் இங்க கூட்டிட்டு வரேன். அவங்களோட நேரம் செலவழிச்சா,  உங்களுக்கு கவலையே தெரியாது. கலகலப்பா இருக்கும்” ஆறுதல் சொன்னான் கணேஷ்

“கடவுள் உன் நல்ல மனசுக்கு உன்னை நல்லா  வெச்சிப்பாரு. உன்னை தூக்கி விடுவாரு!” கணேஷை முதியோர்கள் வாழ்த்தினார்கள். இதை கேட்ட கணேஷுக்கு கண்ணீர் வந்திறங்கியது.

“ஏம்பா அழுவுற…?” கேட்டாள் ஒரு பாட்டி.

“எனக்கு அம்மா கிடையாது,  பாட்டி தான் என்ன வளர்த்தா…என் அப்பா பாட்டிய எங்கேயோ துரத்தி விட்டுட்டாங்க. என் அப்பாவும் செத்துப் போயிட்டாரு. பாட்டி எந்த முதியோர் இல்லத்தில் இருக்காங்கன்னு எனக்கு தெரியாது. உங்களுக்கு உதவினா அது என் பாட்டிக்கு உதவுறது மாதிரி, அதான் இப்படி உதவி பண்றேன்” கண்கள் கலங்கச் சொன்ன கணேசை பார்த்து அதிர்ந்து நின்றார்கள் அந்த முதியோர் இல்லத்து பாட்டிகள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 12) – ரேவதி பாலாஜி

    மலைக்கோயில் வாசலில் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை