ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
நம் கதையின் நாயகி கோமதி, மாலை நேரத்தின் அழகை ரசித்துக் கொண்டே, தன் கணவர் சேகர், குழந்தைகள் சக்தி மற்றும் சங்கர் ஆகியோருடன் பேசிக் கொண்டே வீட்டுத் தோட்டத்தில் உலா வந்தாள்.
அவர்களுடைய பேச்சு எல்லாப் பக்கமும் சென்று விட்டு, கடைசியாக கோமதியிடம் வந்து நின்றது.
சக்தியும், சங்கரும் கோமதியிடம் ஒரே குரலில், “அம்மா, நீங்கள் ஏன் வேலைத் தேடக் கூடாது?” எனக் கேட்டனர்
திடீரென வந்த கோவிட்டால் தான் எத்தனை மாற்றங்கள். தற்பொழுது சேகர் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார். குழந்தைகளும் வீட்டிலிருந்தே கற்கிறார்கள். அதனால் கோமதிக்கும் நிறைய நேரம் கிடைக்கிறது.
ஆனால் கோமதிக்கு சிறிது தயக்கம் இருந்தது. தன்னால் இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க முடியுமா என்பது தான் அது
சேகர் பரிவுடன், ”கோமதி ஏன் தயங்குகிறாய்? தற்போது நிறைய வேலை வாய்ப்புகள் வீட்டிலிருந்தே செய்கிற மாதிரி உள்ளன. அவற்றுள் உனக்கு ஏற்றது தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம். முடிவை நீயே எடும்மா, பார்த்துக் கொள்ளலாம்” எனக் கூறினான்.
சக்தியும், சங்கரும் உற்சாகமாக, ”அம்மா நாங்களும் எங்களால் ஆன உதவியைச் செய்கிறோம்மா. நீங்கள் கண்டிப்பாக வெற்றியடைவீர்கள் ம்மா” என உற்சாகமூட்டினர்
இரவு உணவை முடித்து, சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு வந்த கோமதி, குடும்பம் மொத்தமும் கணிணி முன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே தானும் வந்து அவர்களுடன் அமர்ந்தாள்
சேகர் சொன்னான், ”தற்பொழுதுள்ள சூழ்நிலையில் வேலை வாய்ப்புகளிலேயே பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணையம் அனைவரையும் இணைக்கும் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது” எனச் சொன்னான்
ஒரு மணி நேரம் அலசியதில், மூன்று வேலைகள் கோமதியின் படிப்பிற்கு ஏற்றதாக இருந்தன.
சேகர் கோமதியிடம், ”இவற்றுள் ஒன்றை நீயே தேர்ந்தெடும்மா” எனச் சொன்னான். அவ்வாறே ஒரு வேலைக்கு விண்ணப்பித்தாள்.
ஐந்து நாட்கள் கழித்து காணொளி வாயிலாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, அந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டாள் கோமதி.
அனைவருக்கும் மகிழ்ச்சி. அனைத்து வேலைகளையும் பகிர்ந்தே செய்து பழகியதால், இந்தப் புதுச் சூழ்நிலைக்கும் அவர்கள் அனைவரும் பழகி விட்டனர்.
வேலைக்குச் சேர்ந்த ஓரிரு வாரங்களிலேயே கோமதி வேலையை நன்குப் பழகி விட்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, மதிய உணவிற்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர். சமையல் வாசனை மூக்கைத் துளைக்கவே அனைவரும் ஒருவருக்கொருவரைப் பார்த்தனர்.
சிரித்துக் கொண்டே சேகர் கேட்டான், “இன்று என்ன விசேஷம். வடை, பாயசத்துடன் தூள் கிளப்பியிருக்கிறாய்?
அதற்கு கோமதி சொன்னாள் “எல்லோரும் மறந்துவிட்டீர்களா, நான் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆகி விட்டது. முதல் மாதச் சம்பளம் வாங்கி விட்டேன். அது தான் இன்றைய ஸ்பெஷல்” என மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
சேகரும், குழந்தைகளும் கோமதியை வாழ்த்தினார்கள். மாலையில் அனைவரும் கோவிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு நன்றி கூறினர்.
வீட்டிற்கு திரும்பும் பொழுது, ”நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்”, என்ற பழைய பாடல் காற்றிலே மிதந்து வந்தது.
பழைய பாடலானாலும் அது தற்போது தங்கள் குடும்பத்திற்கு பொருத்தமாக இருப்பதை எண்ணி அனைவரும் சிரித்தனர்.
எந்தச் சூழ்நிலையிலும் மனந்தளராமல், குடும்பத்தினருடைய அரவணைப்புமிருந்தால், எல்லோரும் கோகிலாவைப் போல வெற்றி நடை போடலாம்.
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings