ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
குளிர் காலத்திற்கேற்ற கறிவேப்பிலை தொக்கு, இஞ்சி துவையல், மிளகு பூண்டு சூப், கற்பூரவள்ளி ரசம், மற்றும் மிளகோரை இவைகளை செய்முறையுடன் தந்துள்ளேன். இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்.
1. கறிவேப்பிலை தொக்கு
தேவையான பொருட்கள்:–
கறிவேப்பிலை – 3 கை பிடி அளவு
காய்ந்த மிளகாய் – 7 (விருப்பம் போல்)
மிளகு – 2 (சிறிய) டீஸ்பூன்
வெந்தயம் – 1 (சிறிய) டீஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
தேவையான அளவு உப்பு
தாளிக்க நல்லெண்ணெய் – 100 மில்லி
கடுகு, பெருங்காயத்தூள்
செய்முறை:-
- மிளகு, வெந்தயம், மிளகாய் மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் (எண்ணெய் விடாமல்) வறுத்துக் கொள்ளவும்
- அத்துடன் கறிவேப்பிலை, புளி உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் அதிகம் விடாமல் அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து, கடுகு வெடித்தவுடன் அரைத்த கறிவேப்பிலை விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- வாணலியில் ஒட்டாமல் வரும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
2.இஞ்சி துவையல்
தேவையான பொருட்கள்:–
இஞ்சி துருவல் – 4 சிறிய டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 சிறிய டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1சிறிய துருவல்
காய்ந்த மிளகாய் – 1
புளி சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
தேவையான அளவு உப்பு
செய்முறை:–
- இஞ்சியை நன்றி கழுவி தோல் சீவி துருவி கொண்டு, வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
- அத்துடன் இஞ்சி துருவல், தேங்காய் துருவல், புளி, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- விருப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்து, மிக்சியில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
சுவையான இஞ்சி துகையல் தயார். இந்த குளிர் காலத்தில் பசியை தூண்டும் பித்தத்தை போக்கும்.
3. மிளகு பூண்டு சூப்
தேவையான பொருட்கள்:–
பூண்டு – 8 பல்
மிளகு – 2 சிறிய டீஸ்பூன்
சீரக பொடி – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – சிறிதளவு
கார்ன்ப்ளார் மாவு – 3 சிறிய டீஸ்பூன்
தண்ணீர் – 6 டம்ளர்கள்
உப்பு தேவையான அளவு
செய்முறை:–
- அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும்
- மிளகு, பூண்டு இரண்டையும் மிக்சியில் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து கொதிக்கும் தண்ணீரில் கலக்கவும்
- அத்துடன் கார்ன்ப்ளார் மாவை சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைக்கவும்
- உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்
- நன்கு திக்காக ஆனதும் சீரக பொடி வெண்ணெய் சேர்த்து இறக்கவும்
ஆரோக்கியமான, சுவையான மிளகு, பூண்டு சூப் தயார். பசியை தூண்டும், ஜீரண த்திற்கு நல்லது.
4. கற்பூரவல்லி ரசம்
தேவையான பொருட்கள்:–
கற்பூர வல்லி இலை – 10
துவரம்பருப்பு – 1 சிறிய டீஸ்பூன்
மிளகு – 2 சிறிய டீஸ்பூன்
தனியா – 1 சிறிய டீஸ்பூன்
சீரகம் – 1 சிறிய டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
தக்காளி – 1
கடுகு தாளிக்க – 2 சிறிய டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் – சிறிதளவு
செய்முறை:–
- புளியை சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள்தூள் சிறிதளவு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, மிளகு, சீரகம், தனியா இவைகளை பொன்னிறமாக வறுத்து அத்துடன் கற்பூரவல்லி இலைகளை சேர்த்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
- புளி கரைசல் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு கொதித்தவுடன், அரைத்து வைத்துள்ள கலவையை 3 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து சேர்த்து நுரைத்து வந்தவுடன் இறக்கவும்
- நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
கற்பூர வல்லி ரசம் தயார்
5. மிளஹோரை (மிளகு சாதம்)
தேவையான பொருட்கள்:–
உதிர் உதிராக வடித்த சாதம்
வறுத்து பொடி செய்ய
உளுத்தம்பருப்பு – 1 சிறிய டீஸ்பூன்
மிளகு – 2 சிறிய டீஸ்பூன்
இரண்டையும் எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
தாளிக்க நெய் – 4 சிறிய டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு
முந்திரி பருப்பு – 5
கறிவேப்பிலை
செய்முறை:–
வாணலியில் நெய் விட்டு கடுகு, பருப்புகளை தாளித்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மிளகு பொடி சேர்த்து நன்கு வறுத்து சாதத்தில் கலக்கவும்.
குளிர் காலத்திற்கு உடலுக்கு தேவையான உஷ்ணத்தை தரும். செரிமானத்திற்கும் நல்லது.
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings