in

தேடலின் நொடி (கவிதை) -✍ ராஜி பிரேமா

தேடலின் நொடி (கவிதை)

ஒருவரும் சீண்டியதில்லை

ஏச்சுபேச்சுக்கள் தாண்டி

அன்பை உணரும்

வார்த்தைகள் அறிந்ததில்லை

நித்தமும் சூட்டப்படும்

புதுபெயர்களுக்குள்

தேள்கொட்டிய வாழ்க்கை

சிரிப்பைத் தவிர

வேறொன்றும்

எங்கள் கழிவிரக்கமில்லை

ஏங்கிய மொத்த அன்பையும்

ஒரு நொடியில் உணர்ந்தேன்

ஒரு சிறு பாலகன்

என் விரல் பிடித்து 

‘அக்கா’ என்றழைத்ததில்

ஊசிபோடும்

வார்த்தைகளுக்கு மத்தியில்

எங்கோ நான் துழாவி

கிடைத்த கரிசனம்

மெய்யாய் சிலிர்த்து

சிரிக்கிறது என் மனம்

உறவுகளும்

உண்மை உரிமையுமே

சகமனிதனிடம் நாங்கள் வேண்டுவது

இப்படிக்கு,

ஒரு திருநங்கையின் தேடல்

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய எங்களை அணுகலாம்👇

#ad

             

         

              

                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” பழமொழி கதை by பானுமதி வெங்கடேஸ்வரன்

Dates Banana Smoothie & Ice Cream Milkshake Recipe Video – By Adhi Venkat