in ,

மனிதனைத் தேடும் உலகம் !? (கவிதை) – இரஜகை நிலவன்

 

மனம் சொல்லும்

மண்டல வழிகளிளோ?

மாணிக்கமோ கல்லோ

நானிலம் தேடட்டுமே?

எந்த மனிதனும்

எந்திரம் இல்லையே…

இலட்சியத்தின் விந்தையின்

நாகரீகமோ சொல்லவோ?

மமதையின்றி மாபெரும்

சபையில் இரணகளமாய்…

மூன்றாம் சாமமும்

அறிந்திருந்த சாமக்கோழியாய்….

மாறுவேடம் போடும்

முகமூடி உலகமோ?

பேராற்றல் படைத்தவனை

அடையாளம் காணலாம்….

நேரிய மனமுண்ட

சாமானியனையும் தேடுமோ?

நேசங்களின் உயர்வோடு

உலகை அறிவதுண்டோ ?

ஏற்பதும் இகழ்வதும்

உலகே செய்யட்டுமே!

ஏளனமாய் பார்க்கும்

ஏக்கங்கள் தீருமோ?

பாருலகும் பார்க்கும்

வண்ணம் திசை திருப்புதலோ?

ஏற்றங்களும் இறக்கங்களும்

ஏந்திய வாழ்வில் என்றுமே

பள்ளத்தாக்குகளோ?

மனிதனைத் தேடுமுலகம்

மனிதத்தை தேடிட முயலட்டுமே!?

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயர்ந்த உள்ளம் வாழ்வின் உயரம்!!? (கவிதை) – இரஜகை நிலவன்