எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுதாவின் திருமண வரவேற்பு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விடிந்தால் திருமணம்.
சுதாவின் தோழி ரமா, அவள் கூடவே இருந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் முழு ஈடுபாட்டோடு கலந்து கொண்டிருந்தாள். ரமா அனாதை இல்லத்தில் வளர்பவள் தான், ஆனாலும் சுதாவின் பள்ளிக்காலத்தில் இருந்தே நெருங்கிய தோழி.
இரவு எல்லோரும் தூங்குமுன் மணப்பெண்ணின் அறையை எட்டிப்பார்த்த சுதாவின் பெற்றோருக்கு அதிர்ச்சி. அங்கே சுதா கழற்றியிருந்த நகைகளை எல்லாம் எடுத்து அணிந்த கோலத்தில் ஜன்னல் மூலம் வந்த நிலவொளியில், ரமா கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தாள்.
அம்மாவைப் பார்த்த சுதா.. “இந்த ரம்யாவைப் பாரும்மா.. இந்த நகையெல்லாம் போட்டுக்கடி.. ஒரு ஃபோட்டோ எடுக்கலாம்னு சொன்னதுக்கு எல்லாத்தையும் போட்டுக்கிட்டு.. இப்படி உம்முனு உட்கார்ந்திருக்கா..” என்றாள்.
சுதாவின் அம்மா ரமாவின் தோளைத் தட்டி.. “என்னாச்சு ரமா..?” என்று கேட்க..
“இந்த நகைகள் கூட எனக்கு இஷ்டமில்லை ஆன்ட்டி.. சுதா வற்புறுத்தி சொன்னா..னு தான் இப்போ இதையெல்லாம் போட்டேன்.. இன்னைக்கு இவளோட வரவேற்பை சிறப்பா கொண்டாடிட்டீங்க.. நாளைக்கு மண்டபத்தில எல்லாரோட ஆசீர்வாதத்தோட.. கன்னிகாதானம் செஞ்சு இவளை ஒரு மணமகனின் கையை பிடிக்க வைக்கப் போறீங்க.. எனக்கு அதுமாதிரி செய்றதுக்கு யாரு இருக்கானு யோசிச்சுப் பார்த்தேன்.. அதான்..” என்று விசும்பலுடன் சொன்னாள் ரமா.
அங்கே வந்த சுதாவின் தந்தை ராமன் உறுதியான குரலில்.. “கவலையே படாதே ரமா.. நீயும் எங்களுக்கு மகள் மாதிரி தான்.. நாங்களே உனக்கு திருமண ஏற்பாடு செய்வோம்.. உனக்கும் எல்லா சடங்குகளும் ஆனந்தமும் உண்டு..” என்று சொன்னார்.
அந்தச் சொற்கள் கேட்டு ரமா நெஞ்சாரக் கண்ணீர் விட, சுதா அவளை அன்போடு அணைத்துக்கொண்டாள். அந்த அறையில் சோக உணர்வு நீங்கி, ஆனந்த அலை வீசத் தொடங்கியது.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings