பண்டிகைகள் துவங்கி விட்டன இல்லையா?? நவராத்திரி, தீபாவளி என கொண்டாட்டங்கள் சமயத்தில் இனிப்பு இல்லாமலா!
எளிதில் செய்யக்கூடிய இனிப்புகளை செய்து வைத்துக் கொண்டால் வீட்டுக்கு வரும் நட்புகளுக்கும், உறவினர்களுக்கும் தந்து மகிழலாம்.. வாங்க! அப்படியொரு இனிப்பு தான் மில்க் பேடா!
இதை பொதுவாக கடைகளில் தான் வாங்கி ருசித்திருப்போம் இல்லையா! இனிமே உங்கள் வீட்டிலும் எளிதாகவும் அதே சமயம் சட்டென்றும் செய்து ஜமாய்த்து விடலாம்..அதிகம் வேலையில்லை..:)
தேவையான பொருட்கள்:
- பால் – 200 மிலி
- பால் பவுடர் – 200 கிராம்
- கண்டென்ஸ்டு மில்க் – 200 கிராம் (அ) அரை டின்
- பொடித்த சர்க்கரை – 1/2 கப் (50 கிராம்)
- ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
- பாதாம் மிக்ஸ் பவுடர் – 2 டீஸ்பூன் (அ) குங்குமப்பூ சிறிதளவு.
செய்முறை:
- ஒரு அடிகனமான கடாயில் 200 மி பாலை விட்டு நன்கு காய்ச்சிக் கொள்ளவும்
- அதில் மேலே கொடுத்துள்ள பொருட்களான பால் பவுடர், கண்டென்ஸ்டு மில்க், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் பொடி, பாதாம் மிக்ஸ் அல்லது குங்குமப்பூ என அனைத்தையும் வரிசையாக சேர்த்து கைவிடாமல் கிளறவும்!
- அடுப்பை நிதானமான தீயிலேயே வைக்கவும்..இல்லையென்றால் சட்டென்று அடிபிடித்து விடும்.
- பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்குள் கலவை இறுகி பால்கோவா பக்குவத்துக்கு வந்து விடும்…
- அப்போது அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டி சற்றே ஆற விடவும்.
- சூடு குறைந்ததும் சிறிது சிறிதாக எடுத்து விரும்பிய வடிவில் பேடாக்களாக செய்து கொள்ளலாம்!
- பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை என்று இவற்றில் எதை வேண்டுமானாலும் மேலே வைத்து அலங்கரித்து பரிமாறலாம்!
சுவையான மில்க் பேடா தயார்!
என்ன ஃப்ரெண்ட்ஸ்! இந்த இனிப்பை உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே?? அனைவருக்கும் பண்டிகைக் கால வாழ்த்துகள்!
நட்புடன்,
ஆதி வெங்கட்,
திருவரங்கம்.
நன்றி
உங்க ஸ்பெஷல் ரெசிபியை சஹானா இணைய இதழுக்கு பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஆதி வெங்கட்
சமீபத்துல Youtube சேனல் ஆரம்பிச்சு இருக்காங்க. அதோட பேர், “ஆதியின் அடுக்களை”. லிங்க் கீழே குடுத்துருக்கேன்
Adhi Venkat’s YouTube Channel Link போய் பாருங்க. நல்ல நல்ல ரெசிப்பீஸ் என்ஜாய் பண்ணுங்க. நன்றி
என்றும் நட்புடன், சஹானா கோவிந்த்
GIPHY App Key not set. Please check settings