வாழ்க்கையின் முன்னேற்றத்தின் அடிப்படையே நம் குறிக்கோளில் அடங்கியிருக்கிறது. உபயோகப்படாத மூளையும் இயங்காகாத இயந்திரமும் உருக்காத இரும்பும் துருபிடித்துப் போகும் என்பது இயற்கையானதே. எந்தப் பொருளுமே உபயோகப்படும் போது தான் அதனுடைய பயனை உணரமுடியும்.
அது போலவே நமது எண்ணங்கள் மூளையில் உதித்து வளரும் ஐடியாக்கள் தான் நம் வாழ்க்கையின் ஸ்திரத் தன்மையை உயர்த்தி நிறுத்தி வைக்கிறது.
உலகில் சாதனைகளை ஏற்படுத்தியவர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கும் போது ‘’நான் எப்போதும் இந்த எண்ணத்தோடும் கனவுகளுடனும் இருந்த போது தான் என்னால் இந்தச் சாதனையைப் படைக்க முடிந்தது.” என்று குறிப்பிடுகின்றர்கள்.
வள்ளுவரின் குறளில் சொல்வது போல ‘’உலகில் பெயரும் புகழோடும் வாழ்ந்து விட்டு செல்லா விடில் உன் வாழ்க்கைக்குரிய அர்த்தமே இல்லாமல் போய்விடும்” என்கிறார்.
‘’தோன்றலின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” என்கிறார்.
எவரஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்ட ஹிலாரி நேரடியாகவா அங்கே போய் அடைந்திருக்க முடியும்? எத்தனை முறை பனிப் பபாறைகளில் சறுக்கி விழுந்து அடிபட்டு மனஉறுதியுடன் தன்னுடை யகுறிக்கோளை அடைந்திருப்பார்.
நாமும் நம்முள் வாழ்வின் குறிக்கோளின் எல்லையை அடைய கனவுகளுடன் முழு மனமுயற்சியுடனும் கற்பனைச் சிறகுடனும் நிகழ்கால உறுதியுடனும் வெற்றிப்படிகளைத் தேடி ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போது தான் வாழ்வின் குறிக்கோளை அடையமுடியும்.
சாதாரண குமஸ்தா வேலைக்கு போகிற ஒரு நண்பர் கார் வாங்க வேண்டும் என்று வெறும் கனவுகளுடனே வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு கார் வாங்கவேண்டும். ஜாலியாக குடும்பத்தோடு சுற்ற வேண்டும் என்பது கனவுகளின் அலைகளிலே உழன்று கொண்டிருந்தது.
இன்னுமொரு கார்மெக்கானிக் க்ஷாப்பில் கடைநிலை ஊழியரும் கார் வாங்க கனவு கண்டார். இரவு பகல் பாராது அயராது உழைத்தார். தெரியாத புது விஷயங்களை கற்றுக் கொண்டார். தனியாக சின்னச் சின்ன ரிப்பேரிங் செய்து கொடுக்க ஆரம்பித்தார். கார் வாங்கி விற்று புரோக்கர் வேலை செய்தார். அடுத்த ஊர்களில் டிமாண்டான பொடுள்களுக்கு உடனடியாக சப்ளை செய்து வருமானத்தை பெருக்கினார். எதிர் பார்க்காத வருமானம் ஒன்றுக்கு இரண்டாக அவரால் கார்கள் வாங்க முடிந்தது.
எனவே எப்போதும் நாம் ஒரு இலக்கை அடைய முயற்சி செய்யும் போது அதனுடைய செயற்பாடுகளுடன் அதை அடைவதற்கான கடின உழைப்பும் முழு முயற்சியும் நம் மனதில் கொழுந்து விட்டு எரிய விட வேண்டும். உண்ணும் போதும் உறங்கும் போதும் பயணம் செய்யும் போதும் நம் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற நினைவுகளுடனே நாம் செயல்பாடுகளை கணக்கிட்டுக் கொண்டே வந்தோமானால் நம்முடைய குறிக்கோளை சாதித்து விட முடியும்.
நம்மில் பலர் முயற்சிகளைத் தொடங்கி விட்டு சிறிய தோல்வியால் கூடத் துவண்டு போகிறார்கள். வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. எனினும் வீரர்கள் தோல்வியைக் கண்டு துவண்டு போவதில்லை. அதே சமயம் வெற்றியைக் கண்டு அமர்ந்து களித்துச் சோர்ந்து போவதுமில்லை. அடுத்த வெற்றிப் பாதைக்கு அடி கோலுகிறார்கள்.
நம்முடைய வாழ்க்கையில் நாமும் ஒரு போர்வீரன் தானே! எத்தனை பிரச்சினைகளையும் சிக்கலக்ளையும் நாம் எதிர்நோக்கவேண்டியுள்ளது. எனவே நம் குறிக்கோளில் வெற்றி பெற வருகின்ற தோல்வித் தடை கற்களைத் தகர்த்தெறியும் போது தான் நம்மால் வெற்றிப் படிகளில் வேகமாக ஏறிப் போக முடியும்.
உதாரணமாக தாமஸ் ஆல்வா எடிசன் கூட மின்சாரத்தை கண்டு பிடிக்கும் முன் ஆயிரம் முறை சோதனை செய்து தன் முயற்சியில் தோல்வி அடைந்த பின்னும் “நான் ஆயிரம் முறை தோல்வி அடையவில்லை வெற்றியே கண்டேன்” என்று கர்வப்பட்டுக் கொள்கிறார். எனவே தோல்விகளையும் கூட நம் வெற்றிக்கு சாதகமாக்கிக் கொள்ளும் போது தான் நாம் நம் முயற்சியில் முன்னேறிச் செல்ல முடியும்.
அன்று எடிசன் தோல்வியில் துவண்டு போயிருந்தால் இன்னும் நாம் கற்கால இருளில் மூழ்கிப் போய் சிம்னி விளக்கையேத் தேடிக் கொண்டு இருந்திருப்போம்.
இன்னும் விளையாட்டு வீரங்கனை பி.டி.உஷா தன்னுடைய கனவுகளோடு தினமும் பயிற்சி செய்து முழுமன முயற்சியோடு ஓடியதால் தான் இந்தியாவிற்கு சிறந்த வீராங்கனையாக திகழ்ந்ததோடு அவரால் தங்க மெடலும் பெற முடிந்தது. சாதனைகளும், கண்டுபிடிப்புகளும் சாதாரணமாக வந்து விடுவதில்லை.
கடும் உழைப்பாலும் தீவிரமான யோசனைகளாலும் அல்லும் பகலும் அயராத உழைப்பாலும் மட்டுமே சாதனைகளை படைக்க முடியும் என்பதை ஏற்கனவே வந்த நம் சாதனையாளர்கள் நிரூபித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
யாரோ ஒருவர் லாட்டரி சீட்டில் லட்சாதிபதியாகி விட்டதால் நானும் அதையே தொடர்வேன் என்றால் கண்டிப்பாக இவ்வுலக வாழ்விலேயே நமக்கு நரகம் தான் நிச்சயம்.
சிகரங்களைக் கண்டு பிடித்து தொட்டு மகிழ்ந்த ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், சாதனைகளையும் படைத்த மாமேதைகளின் கடின உழைப்பையும் எப்போதும் நாம் கண் முன்னால் நிறுத்தி, முயற்சியே கனவுச் சிறகின் கற்பனையை விரித்து வாழ்ந்து, நிகழ்கால செயல்பாடுகளை விரைவில் மன உறுதியோடு பின் பற்றுவோமானால், நாமும் ஒரு சாதனையாளராக மாற முடியும் என்பது எப்போதுமே உறுதி.
அல்லும் பகலும் அயராது உழைத்து நம் குறிக்கோளை சென்றடைய நல்ல வழி வகுத்து வேகமாக செயல்பாடுகளை வெளிக் கொணர்வோமனால் வருகின்ற தடைக் கற்களை பொடிப் பொடியாக்கி வெற்றியின் தேவதையை எளிதில் தரிசிக்க முடியும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings