in , ,

அவசரமான உலகத்திலே! (ஒரு பக்க கதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

டேய் நண்பா, முகநூலில் சித்தப்பா இறந்ததை பதிவிட்டிருந்தேன். நண்பர்கள் பலர் இரங்கல் செய்தி தெரிவித்திருந்தார்கள் என்றான் சுந்தர்.

ஆமா,  தெரியுமே

இன்னைக்கு காலைல பாக்குறேன் சித்தப்பா போஸ்ட்ல  சிலர் சிறப்பான பதிவு, அருமை என பதிவிட்டுருந்தார்கள்.

அய்யய்யோ, இறந்ததுக்கு போய் சிறப்பான பதிவு,  அருமை என்றா போடுவாங்க..

இந்தா  பாரு என  கைப்பேசியை  நண்பனிடம் கொடுக்க, அவன் பார்த்துவிட்டு 

கவிதை எழுதி முகநூலில்  பதிவிடுவ தானே, அதை பார்த்துட்டு நிறைய பேரு சிறப்பான பதிவு,  அருமை என  சொல்லுவாங்க. அதுபோல நீ எழுதிய கவிதைன்னு நினைச்சுக்கிட்டு  போட்டுருப்பாங்கன்னு  நினைக்கிறேன் என்றான் நண்பன்.

ஏண்டா?  எங்க சித்தப்பா போட்டோ போட்டு இருக்கேன் தானே

நீ ஏதாவது ஒரு படத்தை பதிவிட்டு தானே கவிதை எழுதுவாய்,  அதைப்போல இதுவும் ஒரு பதிவாக நினைத்து போட்டிருப்பார்கள். 

நல்லா போட்டாங்கடா போடா, நல்ல வேளையாக சித்தி கண்ல படல  என்றான் சுந்தர்.

எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உபதேசம் (சிறுகதை) – அர்ஜுனன்.S

    பாஞ்சாலிக்கு புதுப்புடவை…🌹(சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்