எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எங்கப்பா ஒரு வாரமா கீரை கொண்டு வரலை என சுமதி கேட்டார்கள்.
அதை ஏம்மா கேக்குறீங்க?
ஏம்பா என்ன ஆச்சு?
எங்க வீட்டுக்காரம்மா தவறிட்டாங்க?
அச்சோ பாவமே, ஏன் என்ன ஆச்சு உடல்நிலை சரியில்லையா?
நல்லா தான் இருந்தாங்க, ராத்திரி மாவு இல்லைன்னு சொன்னதுனால, நான் மாவு வாங்கிட்டு வந்து கொடுத்தேன்.
அப்புறம் என்ன ஆச்சு?
சாப்பிட்டு படுத்தவங்க, என்னமோ மாதிரி இருக்கு அப்படின்னு அவங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி இருக்காங்க, உடனே அவர் எனக்கு போன் பண்ணி கூப்பிட்டாரு, நான் கிளம்பி அஞ்சு நிமிஷத்துல போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு மா. நல்ல மனுசி, வாடகை எப்ப கொடுத்தாலும் வாங்கிக்குவாங்க, எங்க வீட்டுக்காரம்மா தான் ரொம்ப அழுதாங்க..
உங்க வீட்டு ஹவுஸ் ஓனரா? என கேட்க
ஆமாமா அவங்க வீட்ல நாங்க குடி இருக்கிறோம் என கீரைக்காரர் சொல்ல, அமைதியாக கீரையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் சுமதி.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings