அழகு என்பது இந்த உலகத்தைப் பொறுத்த வரை, வெள்ளை அல்லது சிவந்த நிற மேனியுடன் “சிக்”கென்ற உடல் வாகுடன் நிமிர்ந்த பார்வையுடன் உலவுவதே என்பது தான் இங்கு ஒரு வெளிப்படையான அபிப்பிராயமாக உள்ளது.
உண்மையான அழகு என்ன?
அழகு எங்கிருந்து வெளிப்படுகிறது அழகு…. அழகு… என்று அடித்துக் கொள்கிறோமே.. அழகின் அடிப்படை என்ன? அழகை எங்கெங்கு காண முடியும் என நாம் சிந்தித்திருப்போமா?
நமக்கு பணம் தேடவே நேரம் போதாத வேளையிலே உண்மையான அழகின் தேடல்களுக்கு எங்கே சமயம் கிடைக்கப் போகிறது?
உடலை நல்ல முறையில் சிக்கென்று வைத்துக் கொள்ளவும், புற அழகில் நாட்டம் செலுத்தவும் மட்டுமே நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம், பொருள் நேரம் செலவிடுகிறோம் தெரியுமா?
அதிகாலையில் ஒவ்வொரு முக்கியமான நகரங்களை எடுத்துக் கொண்டால் வெண்ணூடைத் தரித்து (டீசர்ட், வெள்ளை கால்சட்டை, வெள்ளை சாக்ஸ், வெள்ளைகேன்வாஸ்) உடலை நல்ல முறையில் ஒரு வடிவமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கடற்கரையில் மற்றும் பெரிய சாலைகளில் ஓடுவதற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் எத்தனை லட்சம் பேர் முயற்சி செய்வதை கண் கூடாக நம்மால் பார்க்க முடியும்.
முக அழகை மேம்படுத்த எத்தனை ஆயிரம் கம்பெனிகள் காஸ்மெட்டிக்ஸ்க்ரீம், ஆயில் என தயாரித்து தமது விற்பனையை முடுக்கி விடுவதற்கு வித்தியாசமான விளம்பரங்களை டெலிவிசன், தினசரி பேப்பர்கள் மூலம் மக்களை எட்டச் செய்கிறது.
ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான பணம் செலவழித்து இந்த முக அழகு க்ரீம், ஆயில் உடலுக்கு தேவையான சோப், காலுக்குத் தேவையான விதவிதமான ஆயூர்வேதிக் க்ரீம் என வாங்கும் நாம் நம்மை அழகு படுத்துவதில் நம் புற அழகை வெளிப்படுத்திக் கொள்வதில் எத்தனை மும்முரமாகிப் போகிறோம்.
தினமும் உடற்பயிற்சிசெய்து உடலை பெருக விடாமலும், வடிவமாக வைத்துக் கொள்ளவும் எத்தனையோ வித விதமான உடற்பயிற்சி கருவிகளை வாங்கி உபயோகிக்கிறோம். இதனால் உடற்பயிற்சிக்கென கருவிகள் உருவாகி எத்தனையோ கோடிக் கணக்கில் விற்பனையாகிறது.
இன்றைய உலகில் அழகு என்ற சொல் கூட ஆரோக்கியத்தைத் தாண்டி தான் யோசிப்பதாக இருக்கிறதே தவிர உடல் ஆரோக்கியம் கூட இரண்டாம் பட்சமாக போய் விடுகிறது.
எங்கு நோக்கினும் அழகிப் போட்டிகள், ஆண்அழகன் போட்டிகள், எத்தனையோ கோடிப் பணத்தை எப்படி யெல்லாமோ சீரழிக்கின்ற நமக்கு, நம்மில் எப்போது உண்மையான அழகை உருவாக்கப் போகிறோம் என்று யோசிக்க நேரங்களை எடுத்துக்கொண்டதுண்டா?
அழகு …அழகு… என நவநாகரீக கலாச்சாரத்தின் உச்சியில் எதை எதை எல்லாமோ தேடிக் கொண்டிருக்கின்ற நாம் நம்மில் எத்தனை பேர் மன சாந்திக்காக அதன் அடிப்படையில் உருவாகும் உண்மையான அழகிற்காக ஏங்கியிருக்கிறோம்? அவசர உலகத்தில் தீப்பிடித்து விட்டதோ என சொல்ல வைக்கும் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் நமக்கு இரண்டு சிறகுகள் இருந்திருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கும் என சிந்திக்கத் தான் முடிகிறதே ஒழிய… இந்த அழகு உபாதையில் அவசர அவசரமாக அழிந்து போக முயற்சி செய்கிறோமே ஒழிய உண்மையான அழகை எப்படி கொண்டு வரப் போகிறோம் என்று சிந்திக்கிறோமா?
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings