எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என் மனைவி சசி, மகள் வித்யா, மகன் சபரீஷ் எல்லோரும் தூங்கி விட்டார்கள். விடிந்தால் தீபாவளி. என் குழந்தைகளுக்கு தீபாவளி கொண்டாடுவது என்பது மிகவும் சந்தோஷத்திற்கு உட்பட விஷயம். காலையில் விடியும் முன்பே எழுந்து குளித்துவிட்டு புத்தாடை உடுத்தி பட்டாசு விடுவது என்றல் அலாதி பிரியம்.
எனக்கு தூக்கம் வரவில்லை.
பட்…பட்…பட்…டப்…டப்…டப்…!
பட்டாசு தூரத்தில் வெடித்து கொண்டு இருந்தது…
மணி 11.30.
எனக்கு போன வருட தீபாவளி ஞாபகத்திற்கு வந்தது. நாங்கள் இப்போது இருக்கும் வாடகை வீட்டிற்கு வந்து 7 வருடங்கள் ஓடிவிட்டன. நான் மத்திய அரசு தொலைப்பேசி துறையில் பணியாற்றுபவன். இன்னும் சில வருடங்கள் தான்… பிறகு கட்டாய ஓய்வு ! நாங்கள் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து வருடா வருடம் தீபாவளி அன்று ஒரு இளம் பெண்…
டங்…டங்…டங்…டொயிங்…டொயிங்…டொயிங்… என மணியடித்து விட்டு…
அம்மம்மாவ்வ்….அய்ய்யாவ்வ் …என்று ராகத்துடன் பிச்சைக் கேட்டு வருவாள். அவளை நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. தீபாவளி அன்று மட்டும் பலகாரம் கேட்க வருவாள். பார்க்க பரிதாபகமாக இருக்கும்.
போன வருடம் அவள் வந்தபோது சாமி ரூமில் இருந்த பலகாரத்தை சற்று அதிகமாகவே அவளுக்கு கொடுத்தேன். இதை பார்த்த என் மனைவி சசி கொதித்துப் போனாள்.
“என்ன அவளுக்கு கனெக்சன் கொடுக்குறீங்களா?” என் கேட்டது தான் தாமதம்….
பளார் !!
ஒரு அறை விட்டேன். அழுது விட்டாள். கோபித்துக்கொண்டு பக்கத்துக்கு தெருவில் உள்ள அவள் அம்மா வீட்டிற்கு போய்விட்டாள்.
மணி 1.
தூங்கவே இல்லை. அந்த பெண் யார் ? அவளுடைய பெற்றோர் யார் ? அவள் எங்கு தங்குகிறாள் ? சாப்பாட்டுக்கு என்ன வழி ? இப்படி அவளை பற்றியே யோசித்து கொண்டுயிருந்தேன். எனக்குள்ளே உள்ள மனித இரக்க சுபாவம், என்னை மிகவும் தொந்தரவு செய்தது.
மணி 3.
தூக்கம் அடியோடு இல்லை. அந்த பெண்ணுடைய பரிதாப நிலை என்னை மிகவும் வாட்டியது. கண் அயர்ந்தேன்…. மணி 4 ஆகிவிட்டது. குழந்தைகளை எழுப்பினேன். குஷியாக எழுந்தனர். வித்யாவும், சபரிஷும் எனக்கு தீபாவளி வாழ்த்து கூறிவிட்டு குளிக்க போனார்கள். அப்பா ! அப்பப்பா !! குழந்தைகைளுக்கு பண்டிகை என்றல் என்ன ஆனந்தம் ?
படாள்…படாள்…படாள்…
டப்…டப்…டப்…பட…பட…பட…
பட்பட்…பட்பட்…
பட்டாசுகள் வெடிக்க துவங்கி விட்டன. விடியல். நேரம் போனதே தெரியவில்லை. சபரீஷ் அணுகுண்டு வெடிக்கவும், வித்யா ராக்கெட் விடவும் உதவி செய்துவிட்டு குளிக்க போனேன்.
மணி காலை 6.30.
குளித்துவிட்டு வந்தேன். சசி அம்மா வீட்டிற்கு போயிருந்தாள்.
டங்…டங்…டங்…டொய்ங்…டொய்ங்..டொய்ங்…! மணி சப்தம் கேட்டது. வாசலை பார்த்தேன். அதே இளம்பெண். எனக்கு எதோ சங்கடப்படுத்தியது. சாமி ரூமிலிருந்து பலகாரம் எடுத்துக்கொண்டு, அவளிடம் கொடுத்தேன். கேரி பேக் கை நழுவிவிட்டது. கீழை விழுந்து விட்டது. அவள் எடுக்க குனிந்தாள். அவளது தாவணி விலகியது. கிழிந்த சட்டை. மார்பகங்கள் தெரிந்தன.
ஐயோ ! ஐயோ !!
என் மகள் மாதிரி தான் அவள். ஒரு நிமிடம் என் மகளை அவள் நிலையில் வைத்து பார்த்தேன்.
அய்யோ …! தலை சுற்றியது…!!
“ம்ம்மா …இரும்மா…!”- என்று சொல்லிவிட்டு சாமி ரூமுக்கு போனேன்.
வித்யாவிற்கு 2 செட் சுடிதார் வாங்கி வைத்துஇருந்தேன். ஒரு செட்டை அவள் போட்டுக் கொண்டு விட்டாள். 2வது செட்டை கேரி பேகுடன் எடுத்துவந்து அந்த பெண்ணிடம் கொடுத்தேன். அவள் வாங்கி கைகூப்பி வணங்கி சென்றாள்.
இதை என் மகள் வித்யா பார்த்து விட்டாள். அவள் கண்ணை மூடி இசைவு தந்தாள். புன்னகை பூத்தாள். வித்யா முகத்தில் இருந்த லட்சுமி கடாட்சம் என்னை நிம்மதி அடையச் செய்தது.
சசி திரும்பினாள். வரும் வழியில் அவளை பார்த்துவிட்டாள். துணி பேகையும் பார்த்து விட்டாள். வீட்டுக்கு வந்ததும் சாமி ரூமுக்கு நேரே சென்று பார்த்துவிட்டு, கொதித்து, டிவி ரூமில் இருந்த என்னிடம் “என்ன ? அவளை வைச்சிண்டு இருக்கீங்களா ? “-கத்தினாள்.
அவ்வளவுதான் ! எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. என்ன செய்வதன்று தெரியவில்லை. கோபம்…
எதிரே ஓடிக்கொண்டிருந்த டிவியை என் வலது கை முஷ்டியால் ஒரே குத்து !
பட் !!!
புகைமூட்டம். “ஐயோ …டிவி போச்சே…” என சசி அலறினாள்.
வித்யா ஓடிவந்து டிவி ஸ்விட்சை அணைத்துவிட்டு, “அப்பா …ரத்தம்…” என அழத்து வங்கினாள். சபரிஷும் அழத் துவங்கினான். வித்யா பஞ்சு, டெட்டால் எல்லாம் கொண்டு வந்து அழுதபடியே என் கையை சுத்தம் செய்தாள்.
ஐயோ !
குழந்தைகளின் சந்தோஷத்தை கெடுத்துவிட்டோமே என்று ஒரு குற்ற உணர்வு. சசியின் வார்த்தைகள் தான் காரணம். அவள் ஒரு ராட்சசி. பண பேய். பாரதி கண்ட புதுமை பெண்ணை விரும்புவேன். ஆனால் சசியோ பணம்…பணம்…என்று மனிதாபிமானம் இல்லாமல் அலையும் ராட்சசி.
என் கண்களில் நீர் வழிந்தது.
என் வித்யா அழுகிறாள்.
என் சபரீஷ் அழுகிறான்.
உடைந்த டிவி மீது உடையாத இருந்த பாரதி பொம்மை…
“நெஞ்சு பொறுக்கத்தில்லையே….இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் …”- என்று முணுமுணுப்பது என் காதுகளில் கேட்டது.
தீபாவளி !
மறக்கமுடியாத தீபாவளி !!
ஆம் !!!
ஒரே ஒரு ஊர்லே …..
(திரும்பவும் முதலிலிருந்து வாசிக்கவும் !!
எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings