இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரிகார்டரை ஆன் செய்வதற்குள் இணைப்பு துண்டிக்கப் பட்டது, கேர்புல், ரேசர் பிளேட், கமிங் சூன் இந்த வார்த்தைகள் தெரிந்தன.
திடீரென அறைக்குள் சிகரெட் மணம் லேசாக வந்தது.தொடர்நது உள்ளே நுழைந்தார் தினேஷ்,
“ஏய் லதா என்ன ஆச்சு ஏன் இப்படி பயந்து போய் நிக்கறே முகமெல்லாம் வேத்துக் கொட்டுது”
“இல்லை பாஸ் ஒரு ஃபோன் மிரட்டற குரல்ல ஆனா முழுசா பேசாம கட் ஆயிடுச்சு ரிகார்ட் கூட பண்ண முடியலை”
“சரி போகட்டும் நம்ம முகம் தெரியாத எதிரிகள்ல ஒருத்தர், அவங்களை பத்தி நாம கவலைப் படக் கூடாது.வேற ஏதாவது விசேஷம் இருக்கா” கேட்டுட்டே தன் அறைக்குள் நுழைந்தார் தினேஷ் பதிலை எதிர் பார்க்காமல்.
நீலாங்கரையில் கிடைத்த மொபைல் போனை பஷீர் பாயை கூப்பிட்டு சார்ஜ் போட்டு, அன்லாக் பண்ண கொடுத்தார். கென்ட் காலி பாக்கெட்டை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு மேசை டிராயரில் வைத்தார்.பாஸ்கர், பாண்டிராஜ், லதா மூன்று பேரையும் ஒரு மணி நேரத்தில் தன் அறையில் சந்திக்க சொன்னார்.
பாண்டிராஜ் யோசித்துக் கொண்டே கோவிந்தப்ப நாயக்கன் தெருவை அடைந்தான் அங்கே இருக்கற அகர்வால் பவன்ல சுடச்சுட வெஜிடபிள் சமோசா, அது கூட புதினா சட்னி, ஃபிரைடு பச்சை மிளகா, ஸ்வீட் சட்னிக்கு , நம்ம கேர்ல் பிரண்டையே எழுதி வைக்கலாம் அவ்வளவு ருசி.
இந்த குஜராத்தி காரங்க கைக்கே தனி ருசி.அடுத்த ஜன்மத்துல குஜராத்தி பொண்ணா பிறந்து குஜராத்தி பலகார கடைக்காரனைதான் கட்டிக்கணும்.
அகர்வால் பவனில் எப்பவும் போல கூட்டம் பாண்டி ரெகுலர் கஸ்டமர், மேத்தா பாய் “இன்னா பாண்டி பாய் ஆளை காணோம் நிறைய நாளா”,
பாண்டி சிரித்துக் கொண்டே “மேத்தா பாய், பர்சான் பாபி கெய்சி ஹை?”
மேத்தா மனைவி பர்சான் மேத்தா, சிரித்துக் கொண்டே தலையை காட்டினாள் கீழே உட்காந்து டிரேயில் இனிப்புகளை அடுக்கிக் கொண்டே.( தினேஷ் கேப்பதுண்டு ஏண்டா அந்த கடைக்கு அவன் பொண்டாட்டியை பாக்க போறயா, சமோசா வாங்கப் போறயானு)”
“ஓ பாபி ,மேத்தாவை அவசரப் பட்டு கட்டிக்கிட்டயே நான் ஒருத்தன் இருக்கறதை மறந்துட்டு”
அழகான சிரிப்புதான் பதில். ஜலேபியை எடை போட்டு கட்டிக் கொண்டே மேத்தா நடுவுல புகுந்தான்,”பாண்டி பாய் அவ தங்கச்சி இருக்கறா மாதுரியாட்டம் கட்டிக்கிறயா?ஹேத்தலை ஒரு தடவை பாத்தே பர்சான் எந்த மூலைக்கு “ ,
பர்சான் முகத்தை வழித்து காட்டிய வண்ணம் திரையை விலக்கி உள்ளே போனாள்.
மேத்தா பாண்டியை பாத்து “என் பொண்டாட்டி கோவத்துல என்னா அழகு பாத்தயா, ஒரு மணி நேரத்துக்கு முன்னால ஒரு வெள்ளைக்காரன் வந்து மசாலா முந்திரி வாங்கிட்டு நம்ம பொண்டாட்டி பாத்து சொக்கிட்டான், கைல இருந்த முழு சிகரெட் பாக்கெட்டை கல்லால விட்டுட்டான் பாரு. நீ குடிக்கறயா, பாரின் சிகரெட்டு?” ஒரு முழு சிகரெட் பாக்கெட்டை மேஜை மேல போட்டான். கென்ட் எக்ஸ்ட்ரா லார்ஜ் பில்டர்.
தன் கர்சீப்பால் சிகரட் பாக்கெட்டை கவர்ந்து கொண்ட பாண்டி “தேங்ஸ் மேத்தா இந்தா இந்த சிகரெட்டுக்கு 100 ரூபா, சமோசாக்கு பணம் தனி. நேரம் இருந்தா ஆபீசுக்கு வா பாஸ் உன்னை பாக்கணும்னார். சீக்கிரம் உள்ளே போய் பாபியை தாஜா பண்ணி மாட்னி ஷோ போடு போ, கோபமா போனாங்க.”
பாண்டி நைனியப்ப நாயக்கன் தெரு ஆபிசுக்கு நுழையறதுக்கு முன்னால அகர்வால் பவன் சமோசா வாசனை உள்ளே நுழைந்தது, ஏற்கனவே ஆபிசில் இருந்த பாஸ்கரும்,லதாவும் பாண்டியின் வரவை சமோசமாய் இல்லை சந்தோஷமாய் வரவேற்றனர்.
தினேஷ்; “டே பாண்டி சீக்கிரம் வாடான்னா சைட் அடிக்க போயிட்டயாக்கும்?”
“இல்லை பாஸ், லதா பக்கம் கண்ணை ஓட்டியவாறு, நீங்க பாலைவனத்தை தூக்கிட்டு ஒரு சோலைவனத்தை வேலைக்கு வச்சா நான் ஏன் ஆபீசை விட்டு வெளில திரியப் போறேன்?”
லதா அவனை முறைத்தாள். தன் பாக்கெடல இருந்த சிகரெட் பாக்கெட்டை ஜாக்கிரதையாக எடுத்து டேபிளில் வைத்தான், “இன்னொரு கென்ட் பாக்கெட் ஆனா இது சிகரெட்டோட.”
தினேஷ் ,”இதை எங்கேடா சுட்டே?”
பாஸ் நம்ம ஏரியால இந்த பிராண்ட் சிகரெட் பிடிக்கற ஒருத்தன் சுத்தறான் ஆனா அவன் ஃபாரினர்”.விவரமாய் நடந்ததை சொன்னான் பாண்டி.
தினேஷ் ,சரி அது தேவைன்னா அப்பறம் வருவோம் நீங்க 3 பேரும் சேந்து கோர்வையா இந்த கேஸ்ல இது வரை நடந்ததை எழுதுங்க ஒண்ணு விடாம, அதை நாளைக்கு ரிவ்யூ பண்ணுவோம் அதுக்குள்ளே அடுத்த கொலை விழாம இருக்கணும்.ஒரு சின்ன விவரம் கூட மிஸ் ஆகக் கூடாது.சரி போயிட்டு நாளைக்கு காலைல ஒன்பது மணிக்குள்ளே உங்க தனித்தனி வ்யூவையும் எழுதிட்டு வரலாம். பாஸ்கர் நீ போறப்ப அந்த பஷீர் கிட்ட போய் சாம்சங் ஃபோன் வேலையை முடிச்சு வாங்கிட்டு போ.நான் இப்ப கமிஷனரை பாத்துட்டு என் ரூமுக்கு போறேன்.
கமிஷனர் ஆபிஸ் போனப்ப ஜான்சக்திவேல் டென்ஷன்ல இருந்தார்,“வாங்க தினேஷ் இந்த பொண்ணுங்க மர்டர் விஷயத்துல உங்க தரப்புல ஏதாவது புரொக்ரஸ் இருக்குதா, நம்ம சைட்ல ஒரு துப்பும் மாட்டலே, முதலமைச்சர்ல இருந்து மீடியா வரை டார்ச்சர் பண்றாங்க.”
தினேஷ் ,“சார் நீலாங்கரைல ஒரு காலி சிகரட் பாக்கெட், ஒரு மொபைல் சம்பவ இடத்துல கிடைச்சது அது ஏதாவது லீட் கொடுக்குமானு பாக்கறேன் சார்”.
“ஓ அப்படியா அந்த தடயங்களை நம்ம போலிஸ் லாப்ல கொடுங்க பிரிச்சு மேஞ்சிடலாம், நம்ம சுப்ரமணியம் இதுல ரொம்ப கெட்டிக்காரர்.
“சரிசார் இப்பவே அனுப்பச் சொல்றேன்”
“கஷ்டமான கேஸ்தான் இதை உடைக்கறதுலதான் நம்ம திறமை இருக்கு அரசியல்வாதிங்க இன்வால்வ்மென்ட் இருந்தா ஜாக்ரதையா இருங்க, என்னை கேக்காம ரிஸ்க் எடுக்காதீங்க, தலைவர்கள்<st
இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings