in ,

முள் பாதை (அத்தியாயம் 9) – பாலாஜி ராம்

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

புவனேஷ் வீட்டுக்கு ஒரே மகன். அதனால் அவனுடைய அப்பாவும் அம்மாவும் இவன் மீது அளவு கடந்த பாசம் பொழிவார்கள். சிறு வயதிலிருந்தே  இவன்  என்ன பொருள் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார்கள், எந்த முடிவு எடுத்தாலும் அதன்படியே செய்வார்கள் அந்த அளவுக்கு அவன் மீது அக்கறை காட்டினார்கள். 

தன் காதல் விவகாரத்தை தன் பெற்றோரின் காதில் எவ்வாறு சொல்வது என்ற தயக்கத்தில் இருந்தான் புவனேஷ். 

புவனேஷ் தன் அப்பாவிடமும் அம்மாவிடமும் ஒரு தோழமையாக பேசக்கூடிய ஆளு தான்.  ஆனால், இந்த விஷயத்தை பொருத்தமட்டில் அவனுக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. 

இவன் காதல் விஷயத்தை தன் பெற்றோரிடம் சொல்வதற்கு காலமே வழி வகுத்தது. 

“புவனேஷ் இங்கே வாப்பா” என்றார் அவன் அப்பா. 

புவனேஷ் தன் அறையில் இருந்து தன் அப்பாவிடம் வந்தான். இவனின் அப்பா வீட்டின் ஹாலில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கையில் நான்கு, ஐந்து புகைப்படங்களை வைத்துக் கொண்டிருந்தார். 

சொல்லுங்க அப்பா ஏன் கூப்பிட்டிங்க? 

கல்யாணம்,  பண்ண வேண்டிய வயசுல பண்ணனும். உனக்கும் வயசு ஆகிட்டே போகுது, அதனால உனக்கு பொண்ணு பாக்குறதுக்காக ஒரு சில பொண்ணுங்க போட்டோ எல்லாம் அனுப்பி  இருக்காங்க இதை பார்த்துட்டு யாரை பிடிக்குதோ சொல்லுப்பா அவங்களையே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுறேன் என்று சொல்லி ஒரு ஐந்து பெண்களுடைய புகைப்படத்தை கொடுக்கிறார் புவனேஷின் அப்பா. 

இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த புவனேஷ் விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கிறான். 

“அப்பா உங்க கிட்ட நான் ஒன்னு சொல்லணும்”

” என்ன விஷயம் சொல்லுப்பா “

அதுதான் எப்படி சொல்றதுன்னு தெரியல

” என்கிட்ட சொல்றதுக்கு என்னப்பா எதுவா இருந்தாலும் சொல்லு”

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்பா, அந்த பொண்ணும் தான் என்னை காதலிக்கிறாள். 

யாரை காதலிக்கிற? அவள் பேரு என்ன? எந்த ஊரு? என்ன வேலை செய்றா? அவங்க வீடு எப்படி இருக்கும்? அவங்க வீட்ல யார், யார் இருக்கா? அவங்க குடும்பம் எப்படிப்பட்டது? என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தொலைத்து எடுக்கிறார் புவனேஷுடைய அப்பா. 

புவனேஷுடைய அப்பா எப்பவுமே சாந்தமாக தான் இருப்பார். இருந்தாலும், இது தன்னுடைய மகனுடைய வாழ்க்கை  என்பதால், இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கிறார். அதனால தான் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறார். 

அவள் பேரு செண்பகம்.  நான் வேலை செய்கிற நிறுவனத்தில் தான் அவளும் வேலை செய்கிறாள். எனக்கு கீழ தான் வேலை செய்கிறாள். இருந்தாலும், நல்ல பொண்ணு, தங்கமான குணம் கொண்டவள். அவளுக்கு அம்மா இல்ல, அப்பா இருக்காரு ஒரு தம்பி இருக்கிறான். நம்மை விட வசதி கொஞ்சம் கம்மிதான், அவங்க கிட்ட பணம் இல்லாம இருக்கலாம், ஆனா மனசுல குணம் அதிகமாகவே இருக்கு. அவங்க அப்பாவும் நல்லவர் தான். நீங்க பணத்தைப் பார்த்து  கல்யாணம் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா எனக்கு அப்படிப்பட்ட கல்யாணமே வேண்டாம்.  என் மனச பார்த்து கல்யாணம் பண்ணீங்கன்னா செண்பகத்துக்கு கூட நான் மகிழ்ச்சியா வாழுவேன் என்று சொல்லி முடித்தான் புவனேஷ். 

உன் பேச்சுக்கு மறு பேச்சு ஏதுப்பா என்று புவனேஷின் அப்பாவும் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். 

பெண் வீட்டிலும் எந்த பிரச்சனையும் இல்லை, பையன் வீட்டிலும் எந்த பிரச்சினையும் இல்லை என்பதால்  இவர்கள் பல இடங்களுக்கு சென்றனர்.  கோவிலுக்கு செல்வது, சினிமா பார்ப்பதற்காக செல்வது என்று பல நேரங்கள் தனிமையில் செலவழித்தனர். 

இவ்வாறு இனிமையாக சென்று கொண்டிருந்த இவர்களது காதல் வாழ்க்கையில்  சோகம் வந்து குடி கொண்டது. 

மே மாதம் 15 தேதி அன்று வழக்கம் போல் புவனேஷ் தன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு செல்வதற்காக தயாராகி தனது காரில் ஏறி புறப்பட்டான். கொஞ்ச தூரம் சென்றதும் தன் மனதில் “செண்பகம் நடந்து தான் வருவாள் நாம்  செண்பகம் வீட்டிற்கு சென்று அவளை அழைத்து வரலாம்” என்று நினைத்தான். வேலைக்கு நேரம் ஆகிவிடும் என்பதால் செண்பகத்தின் வீட்டை நோக்கி காரை வேகமாக செலுத்துகிறான். 

புவனேஷ் செண்பகத்தின் நினைப்பில் வேகமாக செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே ஒரு பசு மாடு வந்தது. பசு மாடு மீது காரை செலுத்தாமல், காரை சாலையின் ஓரமாக திருப்பினார். இருப்பினும் தன் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. பசுமாட்டிற்கு ஏதும் ஆகவில்லை. ஆனால் புவனேஷுக்கு பலத்த காயம். 

கார் கண்ணாடிகள் அவன் உடலை சிதைத்தது. அவன் தலை மரத்தில் மோதி மயக்கம் அடைந்தான். 

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவனை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு  சென்றனர். இந்த செய்தி புவனேஷின் வீட்டிற்கு சென்றடைந்தது, அவன் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் சென்றடைந்தது. 

தன் வீட்டிலிருந்து வழக்கம் போல் தன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நடந்தே வந்தாள்  செண்பகம். நிறுவனத்திற்க்குள் நுழைந்ததும், எப்பொழுதும் போல் சூப்பர்வைசர் புவனேஷின் அறைக்கு சென்றாள் ஆனால், அங்கு புவனேஷ் இல்லை. எப்பவுமே சீக்கிரமா வந்துருவாரு இன்னைக்கு ஏன் இன்னும் வரல என்று மனசுக்குள்ளேயே நினைத்துக் கொண்டு, தன் வேலையை செய்ய துவங்கினாள்

நேரம்  ஆக ஆக புவனேஷ் ஏன் இன்னும் வேலைக்கு வரவில்லை என்ற எண்ணம் அவளுக்கு பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. 

செண்பகம் தன் பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரிடம், “இன்னைக்கு சூப்பர்வைசர் வரலையா” என்று கேட்டாள். 

உனக்கு விஷயமே தெரியாதா அவருக்கு இன்னைக்கு காலையில வேலைக்கு வரும்போது ஆக்சிடன்ட் ஆயிடுச்சு, பக்கத்துல இருக்குற கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் தான் அட்மிட் பண்ணி இருக்காங்க. 

உண்மையாவா?  உங்களுக்கு யார் சொன்னது? இப்ப எப்படி இருக்கிறார்? 

காலையில வந்ததும் மேனேஜர் தான் சொன்னாரு. அதுவும் பலத்த அடின்னு தான் சொன்னாரு. எனக்கு வேற எதுவும் தெரியாது, என்றார். 

செண்பகம்  வேகமாக மேனேஜர் அறைக்கு சென்றாள். 

“சார்  என் தம்பிக்கு உடம்பு சரி இல்லை, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லீவு குடுங்க சார்” என்றாள்.  செண்பகத்தின் முகத்தை பார்த்தார் மேனேஜர், அவள் கண்களில் சோகமும் அழுகையும் தெரிந்தது. எனவே மேனேஜர் எந்த கேள்வியும் கேட்காமல் லீவு கொடுத்தார். 

தன்னிடம் இருந்த 100 ரூபாயை எடுத்துக் கொண்டு வேகமாக அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தாள். 

(புவனேஷும் செண்பகமும் காதலிப்பது, இவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ளவர் யாருக்குமே தெரியாது. ஆகையால் தான், செண்பகம் பொய் கூறிவிட்டு புவனேஷை காண்பதற்காக மருத்துவமனைக்கு செல்கிறார்)

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திரும்ப வா… திருந்தி வா! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 5) – சுஶ்ரீ