in ,

முள் பாதை (அத்தியாயம் 7) – பாலாஜி ராம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1      அத்தியாயம் 2      அத்தியாயம் 3     அத்தியாயம் 4     அத்தியாயம் 5

அத்தியாயம் 6

தனக்கு வந்த எல்லா பிரச்சினைகளிலும், தனக்கு உறுதுணையாக இருந்த புவனேஷின் மீது பலமடங்கு ஆசையை வளர்த்துக் கொண்டாள் செண்பகம். 

தன் வாழ்க்கையில் காதல் என்னும் கத்திரிக்காய் வரக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருந்த செண்பகத்தின் மனதையே, இந்த காதல் உருக்கி விட்டது அவளும் என்ன செய்வாள், ஆபத்து நேரத்தில் அபயக்கரம் நீட்டியவரை மறக்க முடியுமா? 

செண்பகம் தன் வேலைகளை சரியாக  செய்கிறாளோ இல்லையோ ஆனால், புவனேஷை கவனிக்கும் வேலையை மட்டும் சரியா செய்கிறாள். அவன் போகும்போதும் வரும்போதும் அவனைப் பார்ப்பது, அவன் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் நோட்டமிடுவது என்று தன் கண்ணுக்குள் அவனை வைத்திருந்தாள் செண்பகம். 

இந்த விஷயத்தில் செண்பகத்திற்கு புவனேஷும் குறைந்தவன் அல்ல. செண்பகத்தின் மனநிலை தான் புவனேஷ் மனநிலையும். இவர்கள் இருவரும் ஒருவர்க்கொருவர் காதலித்துக் கொண்டாலும் இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை. 

அவன் பணக்கார வீட்டுப் பையன், நான் ஏழை, நான் எப்படி என் காதலை சொல்வது? 

அப்படி நான் சொல்லிட்டா நான்  உன்னிடம் அப்படி பழகல, ஒரு நட்பாதான்  பழகினேன் அப்படி அவரு சொல்லிவிட்டா எவ்வளவு சங்கடமா போயிடும் என்று மனதிற்குள் நினைத்தாள் செண்பகம். 

அவளே இப்பதான் ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து இருக்காள். இந்த நேரத்துல நான் என் காதலை சொல்லிட்டா அவள் என்னை பத்தி என்ன நினைப்பா, இதுக்காக தான் என்னை சுத்தி சுத்தி வந்தியா? அப்படின்னு ஒரு வார்த்தை என்னை பாத்து கேட்டுட்டா ஒரே சங்கடமா போயிடுமே என்று புவனேஷ் மனதுக்குள் நினைத்தான். 

எது எப்படி இருந்தாலும், வர ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 14, இந்த உலகமே காதலர் தினத்தை கொண்டாடும். அந்த நாளில் என் காதலை செண்பகத்திடம் சொல்லியே தீருவேன் என்ற முடிவில் இருந்தான் புவனேஷ். 

ஒரு வழியாக இவன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பிப்ரவரி 14 ஆம் தேதியும் வந்தது. புவனேஷ் செண்பகத்திற்கு சிவப்பு நிற பட்டுப்புடவையும், ஐந்து ரோஜா மலர்களையும் வாங்கிக் கொண்டு தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு வந்தான். 

அந்த நாளில் செண்பகம் வெள்ளை நிறபுடவை அணிந்து கொண்டு, தலையில் மல்லிகையை சூடிக்கொண்டு, பார்ப்பதற்கு தேவதை போல் காட்சி தந்தாள். புவனேஷிடம் தன் காதலை இன்றைய தினம் சொல்லிவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் செண்பகம் இருக்கிறாள்.

அதனால் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் ஒரு சட்டையையும் வேட்டியையும் வாங்கிக் கொண்டு அதோடு மூன்று ரோஜா மலர்களை வாங்கிக் கொண்டு தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு வருகிறாள். 

செண்பகத்தைப் பார்த்ததும் புவனேஷ் ஆடிப் போய் நின்றான். இந்த நாளில், தான் நினைத்ததை விட தன் காதலி இவ்வளவு அழகாக வந்திருக்கிறாளே என்று ஒரு நிமிடம் மலைத்து போய் நின்றான்.

அன்பே ! கனியே! முத்தே! ஆரமுதே! என்றெல்லாம் தன் காதல் கவிதைகளை கூறி தன் காதலிடம் பேச வேண்டும் என்று ஆசையுடன் வந்த அவன் வாயடைத்துப் போய் நின்றான். 

தன் அழகான காதலி,  தன்முன் நிற்கும் போது எந்த காதலனுக்கு தான் பேச வார்த்தை வரும். அவள் கண்ணை பார்ப்பதா? அவள் மூக்கை பார்ப்பதா? அவள் உதட்டை பார்ப்பதா? அந்தக் கடவுள் ஒட்டு மொத்த அழகையும் இவள் முகத்தில் படைத்து விட்டானோ, ஒருவேளை நிலவு தான் வானிறங்கி வந்ததோ என்று கூட தன் மனதில் ஓடுகிறது, ஆனால் வார்த்தைதான் வரவில்லை. 

“செண்பகம்… நீ என்னை காதலிப்பதாக சொல்லேன் இந்த உலகத்தையும் கொண்டு வந்து தருகிறேன்” என்று புவனேஷ் தன் மனதிற்குள் சொன்னான். 

“புவனேஷ்… நீ என்னை காதலிப்பதாக சொல்லேன் என் உயிரையும் உன் காலடியில் தருகிறேன்”  என்று செண்பகம் தன் மனதிற்குள் சொன்னாள். 

“உயிருள்ளவரை உன் உள்ளத்தில் ஊஞ்சலாட விரும்புகிறேன் செண்பகம்”

“காலம் உள்ளவரை உன் காலடியில் காதலிக்க விரும்புகிறேன் புவனேஷ்”

செண்பகம் “நீ கட்டி கரும்பு, நான் உன்னை கடிக்க வந்த எறும்பு”

புவனேஷ்.. “என்னை நிமிர்ந்து பார் ஒரு கணம், உனக்காக காத்திருக்கிறது என் மனம்”

செண்பகம்.. “நாளை உண்டு சூரிய உதயம் என்றும் உன்னை நினைத்து வாழும் என் இதயம்”

புவனேஷ்.. “மழை வந்தால் அழிந்து விடும் வண்ண ஓவியம். ஆனால், என்றும் அழியாது நம் காதல் காவியம்”

இவ்வாறு காதலர்கள் இருவரும் தங்கள் மனதினிலே பேசிக் கொண்டிருக்கும் போது, புவனேஷ் சார்.. உங்கள மேனேஜர் அவசரமா கூப்பிட்டாரு என்று ஒரு பணிப்பெண் வந்து கூறினாள். 

என் காதலுக்கு இத்தனை தடைகளா என்று நினைத்துக் கொண்டு மேனேஜரின் அறையை நோக்கி நடந்தான் புவனேஷ். 

மேனேஜருக்கு நேரம் காலமே தெரியாது. எந்த நேரத்தில் யாரை கூப்பிடனும் கூட தெரியாது, என்று நினைத்து கொண்டு தன் வேலையை செய்ய தொடங்கினாள் செண்பகம். 

என்ன நடந்தாலும் பரவாயில்லை,  இன்று உலகமே காதலைப் போற்றும் நன்னாள். இந்த நாளில் என் காதலை, என் காதலனிடம் சொல்லியே தீருவேன் என்று உறுதிபூண்டாள் செண்பகம். 

மதிய உணவு இடைவேளை முடிந்ததும், தான் வாங்கி வைத்திருந்த வேட்டி சட்டையையும், மூன்று ரோஜா மலர்களையும் எடுத்துக்கொண்டு  புவனேஷின் அறைக்குள் சென்றாள். 

புவனேஷ் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான். புவனேஷின் எதிரே இருந்த இருக்கையில், அதே நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்யும் ‘நிர்மலா’வும் அமர்ந்திருந்தாள். 

செண்பகம் அறையின் கதவை திறப்பதற்கும், புவனேஷ் நிர்மலாவின் விரலில் மோதிரத்தை போடுவதற்கும் சரியாக இருந்தது. 

இதைப் பார்த்ததும் செண்பகத்தின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது. தன் காதலனுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்த ரோஜா மலர்களின் இதழ்கள் தானாகவே உதிர்ந்தது. 

கதவை தட்டிட்டு வர பழக்கம் உனக்கு கிடையாதா? வரலாமா என்று கூட கேட்டுட்டு  வர மாட்டியா ? என்ன அவசரம் உனக்கு? போ வெளியே அப்புறம் வந்து சூப்பர்வைசரை பாரு என்று கோபத்தில் கத்தினாள் நிர்மலா. 

“மன்னிச்சிடுங்க சார். . மன்னிச்சிடுங்க மேடம்” என்று சொல்லி தன் இடத்திற்கு சென்றாள் செண்பகம். 

அவங்க ரெண்டு பேரும் காதலர்கள் போல,  அதான் காதலர் தினத்துக்கு மோதிரத்தை வாங்கி தந்திருக்கிறார். நான் தான் தேவையில்லாம ஆசையை வளத்துக்கிட்டேன் போல. 

இந்த ஏழைக்கு அந்த கொடுப்பினை இல்லை.  பணக்கார வீட்டு மாப்பிள்ளை எப்படி ஏழை பொண்ண காதலிப்பான். நான் ஒரு முட்டாள் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுகிட்டேன்.

தன் காதல், தோல்வியில் முடிந்தாலும், அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்தினாள். 

அவளை அறியாமலே அவள் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகியது. தன் இதய கோபுரம் இடிந்து விழுந்ததே என்று அவள் அழ ஆரம்பிக்கிறாள். 

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தவறு செய்தால் தண்டனை உண்டு (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    காதல் கொன்று விடு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை